வியாழன், 30 அக்டோபர், 2014

கனிமவள கொள்ளை குறித்து சகாயம் விசாரணை குழுவுக்கு அரசு ஆணை வழங்கவேண்டும் சென்னையில், புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்..



மணல், தாது மணல், கிரானைட் கொள்ளை குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தனது விசாரணையை தொடங்குவதற்கான ஆணையை உடனடியாக தமிழக அரசு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசும்போது, ‘இயற்கை நமக்கு தந்த கொடையை கொள்ளையடித்தவர்கள் குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு நியமித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தனது விசாரணையை தொடங்குவதற்கு அரசு ஆணை பிறப்பிக்காவிட்டால் தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம். சகாயத்துக்கு அரசு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும். மேலும் சமீபத்தில் உயர்த்தப்பட்ட பால் விலையையும் அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும்’ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் சென்னை, வேலூர், திருச்சி, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 150-க் கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக