ஞாயிறு, 23 நவம்பர், 2014

தன்மானத் தலைவரின் தலைமையில் மீண்டுமோர் சமத்துவப் போர்!

தென்மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களுக்கு எதிராக நிகழும் தொடர்படுகொலைகள் தொடர்பாக அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசனை நடத்தும் வகையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் ‘தென்திசை உதித்த செஞ்சுடர். டாக்டர் அய்யா’ அவர்கள் தலைமையில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய ஊர் நாட்டாண்மைகள் மற்றும் ஊர் தலைவர்கள் ஒன்றுகூடி கலந்தாலோசிக்கும் அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை (23.11.2014) காலை 11 மணியளவில் திருநெல்வேலி சிந்துபூந்துறையிலுள்ள ஆர்.கே.வி.திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. 1995-ஆம் கொடியன்குளம் கலவரம் ஏற்பட்டபோது தென்தமிழகம் முழுவதும் எந்த மாதிரியான அசாதாரண சூழல் நிலவியதோ அதே மாதிரியான அசாதாரண சூழல் தான் தற்போதும் தென்தமிழகத்தில் நிலவிக்கொண்டிருக்கிறது. 1995-ல் எவ்வாறு நம் இனமான சொந்தங்கள் அனைவரும் ஒரே தலைமையின் கீழ், ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைந்து, சமத்துவப் போர்தொடுத்து, நம் மக்களுக்கு எதிராக நடைபெற்ற ஒடுக்குமுறைகளை தகர்த்தெறிந்தோமோ அதே ரீதியான சமத்துவப் போருக்கு தயாராக வேண்டிய கட்டாயத்தில் தற்போது நாம் இருக்கிறோம். ஆகவே நம் இனமான சொந்தங்கள் அனைவரும் நம்மிடையே நிலவும் கருத்து முரண்பாடுகளைக் களைந்து, இனவிடுதலை ஒன்றையே இலக்காக வைத்து ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைந்து மீண்டுமோர் சமத்துவப் போருக்குத் தயாராகும் வகையில் முதற்கட்டமாக நடைபெறும் இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அந்தந்த ஊர் நாட்டாண்மைகள், ஊர் தலைவர்கள் மற்றும் நம் இனமான சொந்தங்களான இளைஞர்களும் பெரியோர்களும் திரளாக கலந்துகொள்ளுமாறு அறைகூவல் விடுத்து அழைக்கிறோம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக