செவ்வாய், 18 நவம்பர், 2014

புதிய தமிழகம் கட்சியில் இணைந்தனர்..

தென் தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிற இத்தருணத்தில் நம் சமூகத்திற்கான விடுதலையை நோக்கி சரியான பாதையில் வழிநடத்திக் கொண்டிருக்கும் சமூக சமநீதிப் போராளி டாக்டர் அய்யா அவர்களின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கட்சிகளிலிருந்து விலகி புதிய தமிழகம் கட்சியில் இணைந்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக
'தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் திரு.அலங்கை.முனியாண்டி அவர்கள் தலைமையில் வாடிப்பட்டி ஒன்றியச் செயலாளர் திரு.கண்ணன், மதுரை மேற்கு ஒன்றியச் செயலாளர் திரு.ஆட்டோ பாண்டி, அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் திரு.இரஞ்சித் உள்ளிட்ட நிர்வாகிகள்'
புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அண்ணன் மதுரம் பாஸ்கர், மதுரை மாவட்ட செய்தி தொடர்பாளர் அண்ணன் தெய்வேந்திரகுமார் ஆகியோர் முன்னிலையில் தன்மான தானைத் தலைவர் டாக்டர் அய்யா அவர்களை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சியில் இணைந்தனர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக