திங்கள், 24 நவம்பர், 2014

நெல்லை மாவட்ட ஆட்சியா் கருணாகரன் அவா்களை இடமாற்றம் செய்ய வேண்டும் - டாக்டா் கிருஷ்ணசாமி

தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கிராமத் தலைவர்கள், புதிய தமிழகம் நிர்வாகிகள் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் கே.கிருஷ்ணசாமி தலைமை வகித்து பேசியதாவது:

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 6 மாதங்களில் தேவேந்திரகுல வேளாளர், நாடார் உள்ளிட்ட சமுதாயங்களைச் சேர்ந்த 66-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் மற்றும் காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக