சனி, 8 நவம்பர், 2014

மாமள்ளர் ராஜராஜ சோழ தேவேந்திரர்...


    500 ஆண்டுகளுக்கு முன் விஜயநகர வடுகர்களிடம் இந்திர குல பள்ளர்கள் தமிழகத்தை இழந்ததின் குறியீடு...!



    தஞ்சை பெருவுடையார் பள்ளிப்படை கோவிலில் இந்திர குல மாமள்ளன் ராஜ ராஜ சோழன் தன முப்பாட்டன் நினைவாக வைத்த இந்திரனின் சிலையை அடித்து நொறுக்கியுள்ளனர் வடுகர்களும் அவர்களின் கூலிப் படையினரும்.


(தஞ்சை பெரிய கோவிலில் இன்றும் பூட்டிக் கிடக்கும் இந்திரனுக்கான கோயில்)

    இங்கு மட்டுமல்ல தமிழகத்தின் பல கோவில்களிலும் பள்ளர்களின் அடையாளங்களை  அழித்துள்ள வடுகர்கள், பள்ளர்களை தோற்கடித்ததை தங்களது வெற்றியின் சின்னமாகவும் பதிந்து வைத்துள்ளனர். இந்த வரலாற்றை எல்லாம் மிக எளிதாக மறைத்து விடலாம் என்று வடுகர்கள் திராவிடம்,தலித் என்று தமிழர்களை குழப்ப  பார்க்கின்றனர்.


(ஹிந்திய ஆட்சியாளர்களின் திட்டமிட்ட தமிழின அழிப்பு)

இந்த வடுகர்கள் ஒன்றை மறந்து விட்டார்களோ!!!, நாங்கள் ஒன்றும் அண்டி பிழைக்கும் சாதி அல்ல.நாங்கள் இந்திர குல பள்ளன்!


    என் பட்டன் முப்பாட்டன் வரலாறு தெரியுமாடா உனக்கு...? இந்த  தமிழகத்தையும் இந்தியாவையும் மட்டுமல்ல, ஒட்டுமொத உலகையும் ஆண்ட பரம்பரையில் வந்தவர்களடா நாங்கள்.. இவ்வுலகில் எனக்கு நிகர் நானே எனும் செருக்குடன் வாழ்ந்த இனமட நாங்கள்.. 

* கிரேக்க இந்திரன் சீயஸ் (Zeus ) வரலாறு தெரியுமாடா உங்களுக்கு...? 
* மெக்சிகோவின் மாயன் நாகரீகத்தில் எம் இந்திர குல பள்ளர்களின் ஆதிக்கம் தெரியுமாடா உங்களுக்கு..? 
* சுமேரியாவும், நைல் நதி நாகரீகத்தையும் உருவாக்கினவண்டா என் முப்பாட்டன்.... !!!

பார்க்க:

    இதுநாள்வரை நாங்கள் எங்களை உணராமல் இருந்து விட்டோம், அதனால் நீங்களும் சில காலம் எங்களை ஆண்டு விட்டீர்.இனி இது எங்களுக்கான காலம்., எங்கள் கையில் ஆட்சியும் அதிகாரமும் இருந்த அன்று, எங்கள் பட்டன் கரிகாலன் சிங்களனின் எலும்புகளை நொறுக்கி கல்லணை கட்ட வைத்தான், அவன் வாரிசு ராஜ ராஜ சோழ பள்ளன், 12000 சிங்களவனை போரில் அடிமையாய் இழுத்து வந்து தஞ்சை பெருவுடையார் கோவிலை சமைத்து முடித்தான். அப்படி பட்ட நாங்கள் தோற்றபிறகு இன்றோ, தமிழர்களை தோற்கடித்த வடுக வந்தேறிகள், சிங்கலனுடன் கைகோர்த்து கொண்டு நடத்தும் நாடக போரட்டங்களை நம்பி கொண்டிருக்கிறான் தமிழன். (பார்க்க:சிங்கள புத்த துறவி கூறும் சிங்கள வரலாறு) இந்த அப்பாவி தமிழர்களுக்கு எம் குல வரலாறு மட்டுமல்ல, அவர்களின் வரலாறும் தெரியவில்லை பாவம்.

    இப்படி பட்ட பெரும்பான்மை அப்பாவி தமிழ் சாதிகளின் அறியாமைகளை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவர்களை எங்களுக்கு எதிராக திருப்பி எங்களை அடக்கிவிடலாம் என்று கனவு கொண்டிருக்கும் வடுகர்களே....!!!, உங்கள் கற்பனை கனவுகளுக்கு முடிவு கட்டும் காலம் நெருங்கி விட்டது. 

தமிழின எதிரிகளே, நாங்கள் விழித்து கொண்டோம்.இனி நாங்கள் அடிக்கும் ஒவ்வொரு அடியும் உங்கள் ஆதிக்கத்திற்கு மரண அடிதான். தஞ்சை பெருவுடையார் கோவிலில் எம் குல 'இந்திரனின்' சிலை விரைவில் நிறுவப்படும்.அந்த நாளே தமிழ் ஈழத்தையும் தமிழகத்தையும் விடுவிக்க போகும் பொன்னாளாக வரலாற்றில் பதியப்படும். அது வரை எம் பட்டன் முப்பாட்டன் வரலாறு எம்மை வழிநடத்தும்.

ஆம்  எம்  வரலாறே எம்மை விடுவிக்க போகும் ஆயுதம் !...

                                             --- செல்வா பாண்டியர் ----
                                     தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

4 கருத்துகள்:

  1. வில்லவர் மற்றும் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவார்.

    பதிலளிநீக்கு
  2. சோழர்கள் வில்லவர் வம்சத்தின் வானவர் துணைக்குழுவைச் சேர்ந்தவர்கள். வானவர்கள் காட்டில் வசிப்பவர்கள். வானவர்களின் பழங்காலக் கொடியில் மரச் சின்னமும், பிற்காலத்தில் சோழர்களின் கொடி புலியாகவும் இருந்தது. புலியும் மரமும் காடுகளுடன் தொடர்புடையவை!

    பதிலளிநீக்கு
  3. கடைசி சேர, சோழ பாண்டிய மன்னர்கள்

    சேர, சோழ பாண்டியர்கள் வில்லவர் வம்சத்தினர்

    கி.பி.1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு சேர சோழ பாண்டியன் குலத்தினர் வேணாடு, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இலங்கை ஆகிய இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.

    சேராய் குலத்தினர் தெற்கே குடிபெயர்ந்து திருவிதாங்கோடு, கோட்டையடி மற்றும் சேரன்மாதேவி ஆகிய இடங்களில் கோட்டைகளை நிறுவினர். சேரர்களின் வழித்தோன்றல்கள் வில்லவ நாடார், திருப்பாப்பு நாடார் மற்றும் மேனாட்டார் போன்றவர்களாகும்.

    பாண்டியர்கள் தங்கள் பண்டைய அரச வீட்டிற்கு குடிபெயர்ந்து 17 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து ஆட்சி செய்தனர். தென்காசி பாண்டியர்கள் விஜயநகரப் பேரரசின் மேன்மையை ஏற்றுக்கொண்டனர். சில பாண்டிய குலத்தினர் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களுக்கு குடிபெயர்ந்து அங்கு கோட்டைகளை நிறுவினர். பாண்டியர்கள் களக்காடு மற்றும் வள்ளியூர் ஆகிய இடங்களிலும் தங்கியிருந்தனர்.

    பாண்டிய வம்சாவளியினர் பாண்டிய குல க்ஷத்திரிய நாடார், மாற நாடார் அல்லது மானாட்டார் போன்றவர்கள்.

    சோழ பாண்டியன் கலப்பு குலம் நட்டாத்தி நாடார்கள்.

    களக்காடுக்குப் புலம் பெயர்ந்த சோழர்கள் களக்காடு என்ற இடத்தில் சோழ குல வல்லிபுரத்தில் கோட்டையைக் கட்டினார்கள்.

    பாண்டிய நாட்டை ஆண்ட கடைசி பாண்டிய மன்னன் சந்திரசேகர பாண்டியன்.

    உலகுடையப்பெருமாளும் அவரது சகோதரர் சரியகுலப்பெருமாளும் கன்னியாகுமரியில் இருந்து ஆட்சி செய்து சிறிது காலம் மதுரையை ஆக்கிரமித்தனர். அவர்கள் பட்டாணி ராகுத்தனுக்கு எதிராக போர்த்துகீசியர்களுடன் கூட்டு சேர்ந்தனர். நாடார்கள் அவர்களை முன்னோர்களாகக் கருதி அவர்களுக்குக் கோயில் எழுப்பியுள்ளனர்.

    உறையூரை ஆண்ட கடைசி சோழன் வீரசேகர சோழன். விஜயநகர நாயக்கர் தனது அரசை ஆக்கிரமித்த பிறகு, கி.பி 1529 இல் வீரசேகர சோழன் சந்திரசேகர பாண்டியர்களின் பிரதேசத்தை ஆக்கிரமித்தார். சந்திரசேகர பாண்டியனுக்கு உதவ அனுப்பப்பட்டவர் நாகம நாயக்கர். நாகம நாயக்கர் வீரசேகர சோழனைக் கொன்றார், ஆனால் அவர் பாண்டிய நாட்டை சந்திரசேகர பாண்டியரிடம் மீட்டு கொடுக்கவில்லை.

    வீரசேகர சோழன் மகனும் மகளும் இலங்கைக்கு தப்பிச் சென்றனர்.

    விஸ்வநாத நாயக்கர் வந்து நாகம நாயக்கரைக் தோற்கடித்து கிருஷ்ணதேவ ராயரிடம் கைதியாக அழைத்துச் சென்றார். விஸ்வநாத நாயக்கர் சந்திரசேகர பாண்டியனைக் கொன்று மதுரை நாயக்கர் வம்சத்தை நிறுவினார்.

    வீரசேகர சோழனின் மகன் வெங்கல தேவ மகராசன் இலங்கைக்குத் தப்பிச் சென்றான். பல வருடங்கள் கழித்து போர்த்துகீசியர்களின் எதிர்ப்பை எதிர்கொண்டு வந்து கன்னியாகுமரிக்கு அருகில் வெங்கலராசன் கோட்டை என்று ஒரு கோட்டையை கட்டினார். ஆனால் ஒரு உள்ளூர் ஆட்சியாளர், துளு-ஆய் அரசராக இருக்கலாம் வெண்கல தேவனின் மகளை திருமணம் செய்ய விரும்பினார். அதை விரும்பாத வெங்கல தேவன் பின்னர் குரும்பூர் சென்றார். அங்கேயும் எதிர்ப்புகளை எதிர்கொண்ட அவர் தற்கொலை செய்து கொண்டார். வெங்கல தேவரின் வழித்தோன்றல்கள் வெங்கலராயன் கூட்டம் என்று அழைக்கப்படுகின்றன. வெங்கலராயன் கூட்டம் நாடார் குலத்தின் துணைக்குழு ஆகும்.

    .

    பதிலளிநீக்கு
  4. கடைசி வில்லவர் தலைநகரங்கள்

    துளு மற்றும் தமிழ் வில்லவர் கலப்பு அரசுகள்

    கி.பி 1383 முதல் 1595 வரையிலான காலப்பகுதியில் தமிழ்ச் சேராய் இராச்சியத்துடன் கலந்த துளு தாய்வழி இராச்சியம் வேணாட்டை ஆண்டது. தமிழ்ச் சேராய் அரசை வில்லவர் வீரர்கள் ஆதரித்தனர்.
    வில்லவர் தலைநகரங்கள் கோட்டையடி, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் மற்றும் களக்காடு என்பவை.

    களக்காடு

    களக்காடு என்ற இடத்தில் ஒரு சோழர் குடும்பம் கோட்டை கட்டியது. களக்காடு ஜெயசிம்மவம்சத்தின் தலைநகராக கி.பி.1516 முதல் கி.பி.1595 வரை இருந்தது.

    துளு-சேராய் ஆட்சியாளர் பூதல வீர ஸ்ரீ வீர உதயமார்த்தாண்ட வர்மா (கி.பி. 1516 முதல் கி.பி. 1535 வரை) சோழ இளவரசியை திருமணம் செய்து கொண்டார். தமது தலைநகரத்தை களக்காட்டிற்கு மாற்றினார்.

    பட்டங்கள்
    வென்று மண்கொண்ட பூதல வீரன்
    புலி மார்த்தாண்டன்
    தலைநகரம்: களக்காடு

    சோழ இளவரசி சோழகுலவல்லியை திருமணம் செய்தார்

    களக்காட்டின் மாற்றுப் பெயர் சோழகுலவல்லி புரம். களக்காடு இராச்சியம் முள்ளிநாடு என்று அழைக்கப்பட்டது. பூதல வீர உதயமார்த்தாண்ட வர்மா ஜேதுங்கநாட்டின் (கொல்லம்) ஆட்சியாளராக இருந்தார்.

    பாறை மற்றும் தோவாளை மலைகளுக்கு இடையே உள்ள நாடார்களின் குறைகளை நிவர்த்தி செய்ய கல்வெட்டு வைத்தார்.

    கிறிஸ்தவ பரவருக்கு வரிச் சலுகை கொடுத்தார்.
    நாகர்கோவில் ஜெயின் கோவிலுக்கு மானியம் வழங்கினார்.
    விஜயநகர படைத்தலைவனாகிய சலகராஜா சின்ன திருமலையதேவா பூதலவீரனை தாமிரபரணி கரையில் கிபி 1535 இல் தோற்கடித்தார். அவர் முன்பு வென்ற அனைத்து பாண்டிய பிரதேசங்களையும் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் விஜயநகரப் பேரரசின் கீழ் அடிமை நிலைக்கு தள்ளப்பட்டார்.

    கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம்

    தெற்கே குடியேறிய பாண்டியர்கள் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் கோட்டைகளைக் கட்டினார்கள். கல்லிடைக்குறிச்சி ஜெயசிம்ம வம்சத்தின் தலைநகராக கி.பி 1444 முதல் கிபி 1484 வரை இருந்தது).

    தென்காசி பாண்டியர்கள்

    இருப்பினும் தென்காசி பாண்டியர்கள் வேணாட்டின் துளு-சேராய் ஆட்சியின் ஆக்கிரமிப்பை கடுமையாக எதிர்த்தனர். தென்காசி பாண்டிய நாடு மதுரை நாயக்கர் சாம்ராஜ்யத்தின் அடிமை நாடாக மாறியது

    வில்லவர் ராஜ்ஜியங்களின் முடிவு

    கி.பி 1610 இல் போர்த்துகீசியர்கள் கொச்சி இராச்சியத்தில் உள்ள வெள்ளாரப்பள்ளியிலிருந்து ஒரு பிராமண வம்சத்தை வேணாட்டின் ஆட்சியாளர்களாக உருவாக்கினர்.

    பிராமண ராணி பூரம் திருநாள் ஆற்றிங்கல் நம்பிராட்டியார் அம்மை என்ற திருநாமத்துடன் ஆற்றிங்கல் ராணி ஆனார்.

    வீரரவி வர்ம ரேவதி திருநாள் குலசேகரப் பெருமாள் (கி.பி. 1610 முதல் கி.பி. 1662 வரை) வேணாட்டின் முதல் பிராமண அரசர்.
    கொச்சி வெள்ளாரப்பள்ளியில் இருந்து கொச்சுராமன் உண்ணி பண்டாரத்தில் என்ற பிராமண இளவரசன் கி.பி 1630 இல் மீண்டும் தத்தெடுக்கப்பட்டார்.

    வில்லவர் ராஜ்ஜியங்களின் அழிவு

    கி.பி.1610க்குப் பிறகு வில்லவர் கோட்டைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.
    சேர, ஆய், சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் முடிவுக்கு வந்தன.
    தென்காசி பாண்டிய வம்சமும் விரைவில் முடிவுக்கு வந்தது.

    வில்லவரின் வீழ்ச்சி

    1750 வரை வில்லவர் வீரர்கள் தங்கள் முன்னாள் எதிரிகளான திருவிதாங்கூரின் துளு-நேபாள மன்னர்களுக்கு கூலிப்படையாக பணியாற்றினர். இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு ஒரு காலத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகளை ஆண்ட வில்லவர்கள் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    பதிலளிநீக்கு