திங்கள், 29 டிசம்பர், 2014

கெளரவக் கொலைகள் மற்றும் காவல் நிலைய சாவுகளைக் கண்டித்து புதிய தமிழகம் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம்..

கெளரவக் கொலைகள் மற்றும் காவல் நிலைய சாவுகளைக் கண்டித்து புதிய தமிழகம் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம்.
கெளரவக் கொலைகளைத் தடுத்திட தனிச்சட்டம் இயற்றவேண்டும்
இதில் பங்கேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
'திராவிட கட்சிகள் ஆட்சியில் தொழில் வளருகிறதோ இல்லையோ கவுரவக் கொலைகள் அதிகரித்துள்ளன. தென்மாவட்டங்களில் கடந்த 20 மாதங்களில் 40 பேர் கெளரவக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வடமாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட அமைப்பினர் தென்மாவட்டங்களில் உள்ளோருடன் சேர்ந்து படுகொலைகளில் ஈடுபடுகின்றனர். காதல் திருமணம் செய்தவர்களை தாக்கும்படி பா.ம.க., எம்.எல்.ஏ., ஒருவரே தூண்டுகிறார். பெண் சிசு கொலைக்கும், கலப்பு திருமணம் செய்யும் பெண் கொலை செய்யப்படுவதற்கும் வித்தியாசம் இல்லை. ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சியில் இருந்துள்ளன. இவர்கள் ஆட்சியில் கவுரவக் கொலைகள் அதிகரித்துள்ளன. தொழில், வேலைவாய்ப்பு வசதிகள் அதிகரிக்கிறதோ இல்லையோ, கவுரவக் கொலைகள் அதிகரித்துள்ளன. தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக கூறும் நெடுமாறன், சீமான் போன்றோர் இதை கண்டிக்காதது ஏன்?
கெளரவக் கொலைகளைத் தடுக்க சாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்கவும், சிறப்பு சலுகைகள் அளிக்கவும் முன்வரவேண்டும். திராவிட ஆட்சியில்தான் சீர்திருத்த திருமணம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
கெளரவக் கொலைகளைத் தடுக்க அனைத்து அமைப்பினர் பங்குபெறும் வகையில் புதிய தமிழகம் சார்பில் மாநில அளவில் கருத்தரங்கம் நடத்தப்படவுள்ளது.
மாநிலத்தில் காவல் நிலையச் சாவுகள் நடந்துவருகின்றன
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா என்ற தேவேந்திர குல சமுதாய இளைஞர் 2012 ஆகஸ்ட் 26ஆம் தேதி அன்று விசாரணைக்காக வேடஞ்சந்தூர் காவல் நிலையம் அழைத்து செல்ல பட்டவர் பிணமாகவே வெளியே வந்தார். இரண்டு வருடங்கள் ஆகியும் எந்த விசாரணையும் நடைபெற வில்லை .
இளையான்குடி காவல் நிலையத்தில் மாலைராஜ் என்ற தேவேந்திர குல இளைஞர் மரணம் அடைந்தார். காவல் நிலைய மரங்களுக்கும் இன்று வரை நியாயம் கிடைக்க வில்லை.ஆகவே காவல் நிலையச் சாவுகளை தடுக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக