சனி, 27 டிசம்பர், 2014

கலப்பு திருமணம் தம்பதிகளை காக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும்: கிருஷ்ணசாமி பேட்டி.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் இன்று திருவாரூரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களை காக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்தியாவிலேயே முற்போக்கு மாநிலமாக தமிழகம் விளங்கி வந்தது.
பெரியார் லட்சியத்தின் அடிப்படியில் இங்கு சீர்திருத்த திருமணம் நடந்தது. இதை ஆதரிக்கும் வகையில் திமுக ஆட்சியில் பல்வேறு உதவிகள் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. ஆனால் அண்மை காலமாக கலப்பு திருமணங்களை தடுக்கும் வகையில் கெளரவ கொலைகள் நடக்கிறது. கெளரவக் கொலைகளை தடுக்க, ஜாதிக்கலவரங்களை தடுத்து நிறுத்த, புதிய சட்டம் கொண்டு வரவேண்டும் என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக