வியாழன், 25 டிசம்பர், 2014

..புதிய தமிழகம் கட்சி சார்பில் ..நிறுவனர். டாக்டர் கிருஷ்ணசாமி..M.D.M.L.A. அவர்கள் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம்.

1. தேவேந்திர குல பெண்மணி வினிதா பாலியல் பலாத்காரம் - படுகொலை சிபிஐ விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்-- டிசம்பர் 26 - கரூர்
2. காதல் மணம் செய்த அமிர்தவள்ளி கௌரவ கொலை -கண்டன ஆர்ப்பாட்டம் --டிசம்பர் 27 - திருவாரூர்
3.ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலை நவீன படுத்த ரூ.164 கோடி ஒதுக்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்-- டிசம்பர் 28 -விருதுநகர்
4. நிலக்கோட்டை காவல் நிலையச்சாவு -உசிலம்பட்டி கௌரவ கொலைகள் கண்டித்து ஆர்ப்பாட்டம்-- டிசம்பர் 29 - மதுரை 

1. தேவேந்திர குல பெண்மணி வினிதா பாலியல் பலாத்காரம் - படுகொலை சிபிஐ விசாரணை கோரி ஆர்பாட்டம்-- டிசம்பர் 26 - கரூர்
தாழ்த்தப்பட்டோர், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள், பாலியல் பலாத்காரங்கள், கௌரவ கொலைகள், காவல் நிலைய சாவுகள் அண்மைக் காலமாக தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22 தேதி கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பிச்சம்பட்டி என்ற கிராமத்தில் தேவேந்திர குல சமுதாயத்தை சார்ந்த வினிதா என்ற 17 வயது பெண்மணி பணிக்கு சென்று திரும்பிய போது தனது சொந்த கிராமத்துக்கு அருகாமையிலே கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு பத்து மாதங்கள் ஆகியும் குற்றவாளிகள் எவரும் கைது செய்ய பட வில்லை. எனவே இந்த கொடூர சம்பவத்தை கண்டிக்கும் வகையிலும் இந்த வழக்கை சிபிஐ யிடம் ஒப்டைக்க வேண்டும் என்று வலியுறுத்தி டிசம்பர் 26ஆம் தேதி கரூர் மத்திய பேருந்து நிலையம் அருகே புதிய தமிழகம் சார்பாக காலை 11 மணி முதல் 1 மணி வரை ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது.
2. காதல் மணம் செய்த அமிர்தவள்ளி கௌரவ கொலை -கண்டன ஆர்ப்பாட்டம் --டிசம்பர் 27 - திருவாரூர்
டிசம்பர் 11ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் கீழையூர் கிராமம் தேவேந்திர குல சமுதாய அமிர்த வள்ளி என்ற பெண்மணியும் அதே கிராமத்து வன்னியர் சமுதாய இளைஞரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஒரு ஆண்டு காலத்துக்கு மேலாக திருப்பூரில் அவர்களுடைய மூன்று மாத கை குழந்தையுடன் வாழ்ந்துவந்தனர். அவ்மூவரையும் வஞ்சகமாக அவர்கள் சொந்த ஊருக்கே வரவழைத்து அப்பெண்மணியின் கணவரின் சகோதர்கள் கொடுரமான வகையில் மூவரையும் கொலை செய்தனர். ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த பெண்மணியை திருமணம் செய்தார் என்பதற்க்காகவே தனது சொந்த குடும்பத்தினராலே பச்சிளம் குழந்தையையும் சேர்த்து கொன்று குவித்த சம்பவம் தமிழ் சமுதாயத்திற்கும் இந்திய நாட்டுக்கும் சர்வதேச அளவில் ஒரு அவமானத்தை உருவாக்க கூடிய நிகழ்வாகும். இக்கொடூர சம்பவத்தை கண்டிக கூடிய வகையில் டிசம்பர் 27ஆம் தேதி திருவாரூர் தபால் அலுவுலகம் முன் புதிய தமிழகம் சார்பாக காலை 11 மணி முதல் 1 மணி வரை ஆர்பாட்டம் நடைபெறம்.
3. ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலை நவீன படுத்த ரூ.164 கோடி ஒதுக்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்-- டிசம்பர் 28 -விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குலத்தில் அரசு சிமெண் ட் ஆலை மிக பழமை வாய்ந்தது மட்டுமல்ல வறட்சிக்கு இலக்கான அப்பகுதி வாழ் மக்களுக்கு வேலை வாய்பிற்கான முக்கியமான தொழிற்சாலையாகும். காலத்தினி வளர்ச்சிக்கேற்ப அந்த ஆலை நவீனப்படுத்தபடாததால் நாளுக்கு நாள் உற்பத்தி திறன் குறைந்து வந்தது. கடந்த 5 வருடத்தில் எண்ணற்ற தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். ஆலையிலும் ஆலைக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் குவாரியிலும் ஊழல் மலிந்து விட்டது. ஆலையை நவீனபடுத்தவும் உற்பத்தியை பெருக்கவும் அதன் மூலம் குறைந்த விலையில் அரசு கட்டிடங்களுக்கு சிமெண்ட் வழங்கிடவும், அப்பகுதி மக்கள் தொடர்ந்து குரல் குடுத்து வருகின்றனர். சட்டமன்றத்திலும் புதிய தமிழகம் சார்பாக பலமுறை வலியுறுத்தி உள்ளேன் . இந்நிலையில் 2012 தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.164 கோடி ஆலங்குளம் ஆலைக்கு ஒதுக்க படும் என அறிவிக்க பட்டது .இரண்டு ஆண்டுகள் நிறைவுபெற்ற இந்த நிலையிலும் அறிவிக்க பட்ட நிதி இதுவரை ஒதுக்க படவில்லை. இப்பொழுது மெல்ல மெல்ல அந்த ஆலையை மூடுவதற்கு உண்டான முயற்சியில் அரசு ஈடுபடுவதாக தெரிகிறது. இச்செய்தி உண்மையாகும் பட்சத்தில் விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கே தடையாக அமையும். எனவே தமிழக அரசு சிமெண்ட் ஆலையை நவீன படுத்த 164 கோடியை உடனடியாக ஒதுக்கிட வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பாக வரும் டிசம்பர் 28ஆம் தேதி அந்த ஆலையின் முன்பாக ஆர்பாட்டம் நடைபெறும்.
4. காவல் நிலையச்சாவு - கௌரவ கொலைகள் கண்டித்து ஆர்ப்பாட்டம்-- டிசம்பர் 29 - மதுரை
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா என்ற தேவேந்திர குல சமுதாய இளைஞர் 2012 ஆகஸ்ட் 26ஆம் தேதி அன்று விசாரணைக்காக வேடஞ்சந்தூர் காவல் நிலையம் அழைத்து செல்ல பட்டவர் பிணமாகவே வெளியே வந்தார். இரண்டு வருடங்கள் ஆகியும் எந்த விசாரணையும் நடைபெற வில்லை .
இளையான்குடி காவல் நிலையத்தில் மாலைராஜ் என்ற தேவேந்திர குல இளைஞர், SP பட்டினம் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தார். காவல் நிலைய மரங்களுக்கும் இன்று வரை நியாயம் கிடைக்க வில்லை.
உசிலம்பட்டி அருகே உள்ள குக்கிராமத்தை சார்ந்த திலிப் குமார் என்ற தேவேந்திர குல சமுதாய இளைஞர் அந்த பகுதியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் சமுதாயத்தை சார்ந்த விமலாதேவி என்ற பெண்ணை விரும்பி திருமணம் செய்கிறார். அவர்கள் இருவரும் கட்டாயமாக பிரிக்க படுகிறார்கள் , அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமண ஏற்பாடு செய்ய படுகிறது. அதையும் ஏற்றுகொள்ளாத அந்த பெண் மீண்டும் திலிப் குமார்உடன் செல்கிறார். காவல் துரை அந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் ஆதரவோடு பிரிக்கப்பட்ட அந்த பெண் வலுகட்டாயமாக பெற்றோரிடத்தில் ஒப்டைக்க பட்ட அவர் தொடர்ந்து அடைத்து வைக்க படுகிறார். ஒரு சில நாட்களில் அந்த பெண் உயிருடன் எரித்து கொலை செய்ய படுகிறார். செந்தமிழ் பூமியில் தான் இந்த கௌரவ கொலைகள் நடந்தேறுகின்றன .
மேற்குறிப்பிட்ட காவல் நிலைய மற்றும் கௌரவ கொலைகளை கண்டித்து வரும் டிசம்பர் 29ஆம் தேதி மதுரையில் ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.
மேற்குறிப்பிட்ட நான்கு ஆர்பாட்டங்களிலும் நான் கலந்து கொள்கிறேன். புதிய தமிழகம் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டபடுகிரார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக