சனி, 10 ஜனவரி, 2015

பசுபதிபாண்டியன் நினைவு நாள்: தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு!


pasupathi-pandianதேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் பசுபதிபாண்டியனின் 3ம் ஆண்டு நினைவுநாள் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி அலங்காரத்தட்டில் வருகிற 10ந் தேதி(சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.
இதில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள்.
நிகழ்ச்சியில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு தடுக்க தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் பசுபதிபாண்டியனின் நினைவு நிகழ்ச்சி அமைதியான முறையில் நடப்பதற்காக 7ந் தேதி (நேற்று) காலை 6 மணி முதல் வருகிற 11ந் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் ஊர்வலமாக வருவதற்கும், 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வகை வாடகை வாகனங்கள் நுழைவதற்கும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144ன் கீழ் மாவட்ட கலெக்டரால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
விழாவை அமைதியான முறையில் நடத்திட எனது தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விழாவில் கலந்து கொள்ள வருபவர்கள் தூத்துக்குடி நகர பகுதிக்குள் செல்லாமல் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட வழிதடத்தில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு பொருந்தாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக