புதன், 25 பிப்ரவரி, 2015

நிர்வாகி வெட்டிக்கொலை: புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல் 23 பேர் கைது .

நிர்வாகி வெட்டிக்கொலை: புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல் 23 பேர் கைதுதிருச்சி: நிர்வாகி கொலை செய்யப்பட்டதை;f கண்டித்து திருச்சியில் புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் பிச்சனார்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 28). இவர் புதிய தமிழகம் கட்சியின் ஸ்ரீவைகுண்டம் நகர செயலாளராக பதவி வகித்து வந்தார். இவரை ஞாயிறன்று இரவு மர்ம நபர்கள் 4 பேர் வெட்டி கொன்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனே கைது செய்யக்கோரி புதிய தமிழகம் கட்சியினர் நெல்லை உள்பட பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகி வெட்டிக்கொலை: புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல் 23 பேர் கைது திருச்சியில் மறியல் திருச்சி அண்ணாசிலை அருகில் புதிய தமிழகம் கட்சியினர் புறநகர் மாவட்ட செயலாளர் ஐயப்பன் தலைமையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் கூத்தூர் பாலு, ஒன்றிய செயலாளர்கள் தினகரன், நம்பிராஜ், முருகானந்தம், வக்கீல் விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் பற்றிய தகவல் அறிந்த உடன் ஏராளமான போலீசார் அங்கு குவிந்தனர். போலீசார் சமாதானம் சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோரி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். திடீரென்று அவர்கள் சாலையில் படுத்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதித்தது. குண்டு கட்டாக தூக்கி இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கி அருகில் நிறுத்தி இருந்த வேனுக்கு கொண்டு வந்தனர். ஒவ்வொருவராக தூக்கி வரும்போது போலீசாருக்கும், புதிய தமிழகம் கட்சியினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. 23 பேர் கைது பின்னர் ஒருவழியாக போலீசார் சமாளித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரையும் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக