செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு புதிய தமிழகம் ஆதரவு அளிக்கிறது. அக்கட்சி வேட்பாளர் ஆனந்தனுக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்வேன்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து பேசுகிறேன். நாட்டில் 62 ஆண்டுகளாக பிரிட்டிஷ் முறை தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த நடைமுறையை தற்போதைக்கு ஏற்றபடி மாற்றி அமைக்க வேண்டும்.
தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை என்பது போதாது. இது மதம் கொண்ட யானையை நூல் கயிறு கட்டி அடக்குவதற்கு சமமாகும். எனவே தண்டனையை கடுமையாக்க வேண்டும்.
தேர்தலின்போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் மத பிரசாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி தலைமை செயலாளர் நோட்டீசு அனுப்பியுள்ளார்.
அதில் உண்மை நிலையை அறிய வேண்டும். தமிழ் நாட்டில் தாழ்த்தப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு உரிய பொறுப்பு பதவி வழங்கப்படவில்லை. அவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள்.
டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி முத்துகருப்பன். பிரிவு உபசார விழாவில் அவருக்கு உரிய அணிவகுப்பு மரியாதை வழங்காமல் அவமதித்துள்ளனர். இது கண்டிக்கதக்கது.
தேனி மலைப் பகுதியில் நியூட்ரினோ விஞ்ஞான ஆய்வுக் கூடத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நவீன விஞ்ஞான யுகத்துக்கு இந்த ஆய்வு தேவைதான். அதை எதிர்ப்பது முறையல்ல. தமிழகத்தில் தலித் மக்களை ஒருங்கிணைத்து புதிய தமிழகம் கட்சி சார்பில் அகில இந்திய மாநாடு நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக