ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

துப்புரவுபணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் உள்ளாட்சி அமைப்புகள் முறைகேடு..டாக்டர் கிருஷ்ணசாமி

துப்புரவுபணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் உள்ளாட்சி அமைப்புகள் முறைகேடு செய்துள்ளன என்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ராஜபாளையத்தில் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் சுகாதாரம் மற்றும் துப்பரவுப் பணிக்கு ஒதுக்கிய நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாலேயே இது ஏற்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலில் பலியானவர் குடும்பத்துக்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரண நிதி வழங்கவேண்டும் என்றும், ஆலங்குளம் சிமிண்ட் ஆலையை நவீனப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி வரும் 6-ஆம் தேதி விருதுநகர் மாவட்ட அளவில் புதியதமிழகம் கட்சி சார்பில் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
உடன் விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலர் ராஜலிங்கம், மாநில இளைஞரணிச் செயலர் பாஸ்கர்மது மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக