செவ்வாய், 3 மார்ச், 2015

தென்தமிழகம் முழுவதும் நேர்மையான காவல் துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி..

தூத்துக்குடி, : தென்தமிழகம் முழுவதும் நேர்மை யான காவல்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் 87 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒரே ஆண்டில் மட்டும் 102 கவுரவ படுகொலைகள் நடந்துள்ளன. தென்மாவட்டங்களில் கடந்த 2013ம் ஆண்டிலிருந்து நடந்த கொலை களின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் அடிப்படையில் பார்க்கும்போது கொல்லப்பட்ட அனை வருமே ஒரே மாதிரியாக கைதேர்ந்த கொலையாளி களால் கழுத்தின் பின்பகுதியில் வெட்டப்பட்டு இறந்துள்ளனர். 7 கொலை சம்பவங்களில் இதுமாதிரியான நிலையே காணப்பட்டுள்ளது. இதன் பின்புலத்தில் திட்டமிட்டு செயல்படும் கும்பல் உள்ளது. இந்த கொலைகார கூலிப்படையின் பின்னணியில் மணல் கடத்தல் கும்பல், கந்து வட்டிக்காரர்கள், கான்ட்ராக்டர்கள் பலர் உள்ளனர். இங்கிருந்து தான் அவர்களுக்கு பணம் செல்கிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இதுபோன்று பல படுகொலை சம்பவங்களில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுபோன்ற சம்பவங்களில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இந்த சம்பவங்கள் குறித்த அரசின் பார்வை தவறாக உள்ளது.
ஸ்ரீவைகுண்டம் பாஸ் கரன் கொலை சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை நேர்மையாக நடந்து வரு கிறது. இதில் நீதி கிடக்கும் என நம்புகிறோம். இல்லாத பட்சத்தில் சிபிஐ உதவியை நாடுவோம். தென்தமிழகம் முழுவதும் நேர்மை யான காவல்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இவ் வாறு அவர் கூறினார்.
மாவட்ட செயலாளர் கருப்பசாமி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக