திங்கள், 2 மார்ச், 2015

சாதி வெறி கொலைகள் அதிகரித்து வருவது ஆபத்தானது: கிருஷ்ணசாமி பேட்டி...

சாதி வெறி கொலைகள் அதிகரித்து வருவது ஆபத்தானது: கிருஷ்ணசாமி பேட்டிபுதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி தூத்துக்குடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஸ்ரீவைகுண்டத்தில் புதிய தமிழகம் கட்சி நகர செயலாளர் பாஸ்கரன் கொலை செய்யப்பட்டதற்கு சாதி வெறியே காரணம். நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி வெறி கொலைகள் அதிகரித்து வருவது ஆபத்தானது. இதற்கு முடிவு கட்ட காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2014–ம் ஆண்டு 112 கொலைகள் நடந்துள்ளன. இதில் 87 கொலைகள் தென் மாவட்டத்தில் நடந்துள்ளது. 40–க்கும் மேற்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை சம்பவங்களை தடுக்க சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது.
இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். பாஸ்கரன் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேர்மையாக விசாரிப்பார்கள் என நம்புகிறோம். இதில் உண்மை குற்றவாளிகள் பிடிபடாவிட்டால் சி.பி.ஐ. விசாரணையை கேட்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக