வெள்ளி, 3 ஏப்ரல், 2015

பசும்பொன் கதை அமைத்த சீமான் ,குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா இபொழுது கொம்பன் !!





Image result for seemanபசும்பொன் கதை அமைத்த சீமான் ,குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா இபொழுது கொம்பன் ...

''அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான மாபெரும் ஆயுதம்.மானுட வாழ்வியலையும் சமூக அரசிய‌லையும் பிரதிபலிக்கும் சமூக கண்ணாடி'' - பேரறிஞர் அண்ணா.


தமிழ்நாட்டில் சாதி எவ்வளவு வேரான விஷயம் என்று நம் அனைவர்க்கும் தெரியும். எந்த ஒரு துறையிலும் சாதி எவ்வளவு வேரூன்றி இருக்கிறது என்பதும் தெரியும். குறிப்பாக சினிமாவும் அரசியலும் கைகோர்த்திருக்கிற ஒரு சூழலில், அங்கே சாதி எனப்படுவது எத்தகைய ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். தென் தமிழகங்களில் இன்றும் தங்கள் சாதி சார்ந்த நாயகர்களைத்தான் ‘தலைவர்களாக’ வழிப்படுகிறார்கள்.

தமிழ் திரைப்படங்களை ஆய்வு செய்ய யாரும் நினைத்தால், நிச்சயம் எல்லாப் படங்களிலும் அந்த இயக்குனர், அல்லது தயாரிப்பாளரின் சாதி தூக்கி நிறுத்தப்பட்டிருக்கும் என்பதை மிக தெளிவாக காணலாம். ஒன்றிரண்டு விதிவிலக்குகளை தவிர.

பசும்பொன் கதை அமைத்த சீமான் ,குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா இபொழுது கொம்பன் ...

 குட்டிப்புலி படத்தின் தொடக்கத்தில் இருந்தே சாதி வெறி கட்டமைக்கப்படுவதும், மேட்டுத் தெரு கீழத்தெரு என்பதும் சாதி வெறியை உசுப்பேற்றும் விதமாகவே இருக்கும் .

ஆதிக்க சாதி வெறி பிடித்த வசனங்கள்,அச்சாதியை முன்னிறுத்தும் சிலைகள்,உடைகள்,நிறங்கள்,கலாச்சார அடையாளங்கள் என ஓர் குறிப்பிட்ட சாதியினரின் சமூகவியல் குறியீடுகளில் ஆரம்பித்து சாதி தலைவரின் உருவப் படங்கள் பொறித்த காலண்டர் வரை அத்தனையிலும் சாதூர்யமாக சாதியை புகுத்தி இருப்பார்.

 'மேட்டு தெருவிற்குள் நுழையும் நீல நிற உடையணிந்த வேற்று தெரு மனித‌ர்களை தடுப்பது,புலிக்கு ரெட்டை வால் என 'சில்லி'தனமாக வம்புக்கு இழுப்பது என 'குட்டிப்புலி' படம் முழுவதும் ஆதிக்க சாதி வெறியாட்டங்களே புரையோடி கிடக்கிறது.

படத்தின் பல காட்சிகள் ஒரு குறிப்பிட்ட சாதிப் பெருமையையும் வீரத்தையுமே தூக்கிப் பிடிக்கிறதே.

      ஒவ்வொரு வருடமும்  தென்மாவட்டங்களில் செப்டம்பர் 11ல்  தொடங்கி  அக்டோபர்  - 30வரை நடைபெறும் குருபூஜைகளும்  ,அதையொட்டிய  சாதிய பதட்டங்களும் ,பீதிகளும், வன்முறைகளும் சாதிகளைக்  கடந்து அமைதியாக வாழ  விரும்புகின்ற பெரும்பாலான  பொதுமக்களுக்கும்  ,அப்பாவிகளுக்கும் ,மாணவர்களுக்கும்  எவ்வளவு  சிக்கல்களை , இடைஞ்சல்களை ,மனஉளைச்சல்களைக்  கொடுக்கின்றன  என்பதை  கண்டுக் கொள்ளாமல்  தொடர்ந்து  நீங்கள்  திரையுலகில்  பயணிக்கமுடியாது .

தொண்ணுறுகளில் 'தேவர்மகனு' க்கு (1992)பிறகு  சாதிப்  பெருமைப்பேசி ஏகப்பட்ட  திரைப்படங்கள் வந்ததின் விளைவு  தென் தமிழ்நாடு கலவர  பூமியானது .நுற்றுக்கணக்கான இளைஞர்கள் ,பட்டதாரிகள் உயிரையும் ,வழக்கை சந்தித்ததால் வாழ்க்கையையும்  இழந்தார்கள்.

உங்களைப் போன்றவர்கள்  சாதிப்  போதையை  திரையில்  வெட்டியாய்  ஊற்றி ,பேசிக் கொம்பு சீவி விடுவதன் விளைவுதான்  இவ்வுயிர் பலிகள் .தாயாய்  பிள்ளையாய் ,மனிதர்களாய் ,தமிழர்களாய் ,சாதிப்  பாகுபாடின்றி  அனைவரும்  நல்லிணக்கத்தோடு  அமைதியான  வாழ்க்கை வாழ்வதற்குச்  செய்ய  வேண்டிய  பணிகள்  நிறைய  இருக்கும்பொழுது இப்படி உங்களது  போதைக்குத் தமிழ்ச்சமூகத்தை  ஊறுகாயாக  ஆக்குவது நியாயமா ??

நம்ம எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் .வெற்றிபெறலாம்.   பணம் சம்பாதிக்கலாம். யாரும்நம்மை கேட்க மாட்டார்கள் ,கேட்கமுடியாது என்று  இறுமாப்புடன்  இருந்து விடாதீர்கள்.

ஒரு கடைசி கேள்வி ?

தமிழராய் நினைக்கும் சீமான் தமிழர்களுக்கு உலகம் முழுவதும் பல பிரச்சனைகள் இருக்கும் பொழுது இன்று அதை எல்லாம் மறந்து கொம்பன் என்கிற சாதி வெறியை தூக்கி பிடிக்கும் படத்திற்கு அதரவாக அறிகைவிடுவதிற்கு தான் நாம் தமிழராய் வந்தாரா ??

தமிழன் சீமான் திரைக்கதை எழுதிய பசும்பொன்நில்  வரும் சமத்துவ பாடல் https://www.youtube.com/watch?v=qHVOhDm3B00

சீமானின் முழு படம் :https://www.youtube.com/watch?v=v2I5zPkZaj0

இபொழுது சொல்லுங்கள் சீமானிடம் ஒளிந்து இருப்பது  சாதி பற்றா ?? தமிழ் பற்றா ??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக