திங்கள், 13 ஏப்ரல், 2015

புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்

ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழக கூலித் தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் பழனி தாலுகா அலுவலகம் முன்பு திங்கள்கிழமை மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலர் விஜயகுமார் தலைமை வகித்தார்.  நகர செயலர் முருகேசன் முன்னிலை வகித்தார்.  ஒன்றிய செயலர் காளிதாஸ் வரவேற்றார். தொழிலாளர்கள் படுகொலை சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரியும், இறந்த கூலித் தொழிலாளர்களுக்கு கூடுதலான இழப்பீட்டுத் தொகை வழங்கவும்  கோரிக்கை எழுப்பப்பட்டது. 
  சிவகிரிப்பட்டி காளிமுத்து, கண்ணன், பேச்சிமுத்து, திருமலைசாமி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக