திங்கள், 13 ஏப்ரல், 2015

புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆந்திரத்தில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் புதிய தமிழகம் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர காட்டுப் பகுதியில், கொலை செய்யப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மத்திய மாவட்டச் செயலர் கருப்பசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர்கள் கண்ணன், அன்புராஜ், இளைஞர் அணிச் செயலர் ராஜசேகரன், மாணவரணிச் செயலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஆந்திர மாநில அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதையொட்டி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக