வெள்ளி, 3 ஏப்ரல், 2015

மண்ணுரிமை போராளி..களப்பால்குப்புசாமிதேவேந்திரர்...

Displaying IMG_0012_NEW.jpgகளப்பால்குப்புசாமிதேவேந்திரர்............இயற்கை எழில் கொஞ்சும் ஒருங்கினைந்த தஞ்சை மாவட்டத்தை தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்பார்கள்.மள்ளர்களின் உழைப்பால் எங்கும் பசுமை.,வயல்வெளிகள்,,,,அம்மருதநிலத்தில்தான் அரசுகள் தோன்றின, சேர/சோழ/பாண்டியர் அரசுகள் ஏற்பட்டன...வந்தேறி வடுக ஆட்சியாலும்,தமிழ் துரோக சாதிகளின் கூட்டணியாளும் தன் சொந்த நிலங்களை, அரசாட்சியை இழந்து சொந்த மண்ணில் விவசாய அடிமைகளாக, விவசாய தொழிலாளர்களாக  விளங்கினர்....பளையப்பட்டுமுறை ஏற்படுத்தப்பட்டு ஆதிக்கசாதிகளும், பண்ணையார்களும் இம்மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.....இந்த அடிமை விலங்கையும், ஆதிக்கவெறியாட்டங்களையும் தகர்க்க வந்தவர்தான் களப்பால்குப்புசாமிதேவேந்திரர்......திருவாரூர் மாவட்டம்,கோட்டூர் ஒன்றியம் களப்பால் எனும் கிராமத்தில் 1911ம் ஆண்டு வீரவேளாண்குடியை சேர்ந்த அருணாசலம்...சமுத்திரத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்...உடன்பிறந்த சகோதரிகள் இருவர்...பகுத்தறிவு மாணவனாக, சமூகபற்றாளனாக விளங்கிய குப்புசாமியின் பள்ளிபடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.....நிலஉடமையாளர்கள்,ஆதிக்கசாதிகள் ஒன்று சேர்ந்து தேவேந்திரகுல மக்களை கொடுமைபடுத்தினார்கள்...தொட்டால் தீட்டு, பள்ளிபடிப்பு கிடையாது,பண்ணை அடிமைமுறை,முறையான கூலி கிடையாது,நாள் முழுவதும் வயல்வெளியில் வேலை போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.பண்ணையார்களின் அடைக்குமுறைகளுக்கு முடிவு கட்ட எண்ணினார் குப்புசாமி....ஐயா இம்மானுவேல்சேகரன் வழியில் பதிலடி கொடுத்தார்....தலைமறைவு வாழ்க்கைதான்....சாணிப்பால்..சவுக்கடி கொடுமைகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார்....இந்நிலையில் வாஞ்சோலை என்ற அம்மையாரை திருமணம் செய்துகொண்டார்....இத்தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள்.....தனியாக போராடுவதைவிட ஏதாவது ஒரு இயக்கத்தில் இணைத்து கொள்வது நல்லது என்று எண்ணிய குப்புசாமிக்கு அப்போது தென்பறையில் உதித்த பொதுவுடமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு விவசாய சங்கங்களை அமைத்தார்....கோட்டூர் ஒன்றிய விவசாய சங்க தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.மாவட்ட எல்லைகளை கடந்து பணியாற்றினார்.தன்மனைவி இறந்த செய்தி கேட்டபோதும், தன் மகன் திரு.கணேசன் சமூக விரோதிகளால் வெட்டப்பட்டபோதும் நான் வந்து என்ன செய்ய போகிறேன் இயக்க தோழர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று சொன்ன ஒரே தலைவன் குப்புசாமிதேவேந்திரர்..குன்ணியூர் பண்ணையார் வெளியூர்களில் இறுந்து அடியாட்களை வரவழைத்து மள்ளர்களை அடித்து உதைத்தார்...பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர்...குடிசைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன....வெகுண்டெழுந்த குப்புசாமி   தன்ஆதரவாளர்களுடன் சென்று பதில்தாக்குதல் நடத்தினார்..எங்கும் கலவரம் வெடித்தது..பண்ணையாருக்கு சொந்தமான அனைத்து உடமைகளும் தீக்கிரையைன..மாவட்ட காவல்துறை 1944ல் சமாதான கூட்டம் போட்டது...சமாதான கூட்டத்தில் குப்புசாமி...உழைப்பிற்கேற்ற கூலி.....அடித்தால் திருப்பி அடிப்போம் என்று முழங்கினார்....மிரண்ட பண்ணையார்கூட்டம்  குப்புசாமிக்கு நிலம் அளிக்கிறோம் மக்களுக்காக போராட வேண்டாம் என்று ஆசை வார்த்தை கூறியது....இவற்றை நிராகரித்தார் குப்புசாமி.1946ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்  (இரட்டைஉறுப்பினர் தொகுதி). திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்..திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள ஆலத்தம்பாடி கிராமத்தில் தேவேந்திரகுல மக்களை கொடுமைப்படுத்திய குன்ணியூர் பண்ணையாரை எதிர்த்து மக்களை திரட்டி போராடினார்...இக்கலவரத்தில் பண்ணையாரின் அடியாட்கள் இரண்டுபேர் படுகொலை செய்யப்பட்டனர்.. இக்கொலைவழக்கில் குப்புசாமியை சேர்த்தது அன்றைய காங்கிரசு அரசு....காட்டி கொடுக்கும் கயவர்களால் தலைஞாயிறு கிராமத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் அடைக்கப்பட்ட குப்புசாமி நோய்வாய்பட்டார்.......பண்ணையாரின் ஆட்கள் சிறையில் மருந்து கொடுப்பது போல் குப்புசாமிக்கு விஷம் கொடுத்தனர்.18.04.1948.அன்று காலை 10.40மணியளவில் வீரமரணம் அடைந்தார்....மாவீரனுக்கு மரணமில்லை....இத்தனை ஆண்டுகள் கடந்தும் அம்மாவீரனின் முழுவாழ்க்கை தொகுப்போ....வீரவணக்க நிகழ்வுகளோ இல்லை....தேவேந்திரர் அமைப்புகளும், புதிய தமிழகம் கட்சியும் வீரவணக்கநாள் நிகழ்வும், களப்பாலில் உள்ள அவரது வெண்கலசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.... வாருங்கள்....மரணத்தை முத்தமிட்ட மாவீரன் களப்பால் குப்புசாமிதேவேந்திரர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த.......நாள்...18.04.2015.  இடம்..களப்பால்.. குப்புசாமிதேவேந்திரர்நினைவிடம்...... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக