வெள்ளி, 1 மே, 2015

புதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 2005.

ஜனவரி 06, தி.மு.க அரசால் பொய்யாகப் புனையப்பட்ட நாரைக்கிணறு ஆசிரியர் கொலை வழக்கிலிருந்து தலைவர் விடுதலை
பிப்ரவரி 02, கோவை பிரகடன மாநாடு திட்டமிடுதல் - ஏப்ரல் 2005 - வி.பி.சிங்குக்கு அழைப்பு - தலைவர் கடிதம்.
பிப்ரவரி 12, திருச்சி துறையூர் புத்தானம்பட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞன் தமிழரசன் கோரக் கொலை - தலைவர் நேரில் வருகை - பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் - இழப்பீடு ரூ.2 இலட்சம் நிதி வழங்க கோரிக்கை.
மார்ச், 19 தலைவரின் சொந்த பாதுகாப்புக் குழுவினர் வேலூர் வாலாஜா பேட்டையில் கைது - காவல் துறையினரின் வழக்கு.
மார்ச் 20, சேலத்தில் இரட்டை தம்ளர் முறை உள்ளது - உண்மையை மறைப்பதாக மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பொன்.மாணிக்கவேல் மீது தலைவர் குற்றச்சாட்டு - சேலம் தின்னம்பட்டி, பாலிக்கடை, சிந்தாமணியூர், சாந்தப்பாடி, கஞ்சநாயக்கன்பட்டி, பேரூர், வாழப்பாடி, ஆத்தூர், தாரமங்கலத்தில் இரட்டைக்குவளை முறை இருப்பதாக தலைவர் ஆதாரத்துடன் பேச்சு.
மார்ச், 21 தலைவருக்கு பாதுகாப்பு தர கோரிக்கை - கவர்னரிடம் மனு
ஏப்ரல் 14 - தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கான சமநீதிக்கான வலுவூட்டம் மாநில மாநாடு - சமநீதிக்கான கோவைப் பிரகடனம் (Coimbatore Declaration for Equal Justice) முன்னாள் மத்திய அமைச்சர் மாண்புமிகு யோகேந்திர மக்வானா, மகாராஷ்ட்டிரா மாநில நாடாளுமன்ற உறுப்பினர் இந்திய குடியரசுக்கட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே பங்கேற்பு - கோவை பிரகடனம் வெளியீடு.
ஏப்ரல், 26 கீரிப்பட்டி தேர்தலில் சாதிவெறியர்கள் ‘ஜனநாயக கண்ணாமூச்சி’ ஒன்பது வருடத்தில் 19-வது தேர்தல் நடைபெற்றது - தலைவர் கண்டனம்.
ஏப்ரல் 28, கீரிப்பட்டி, பாப்பாபட்டி, நாட்டார்மங்கலம், கிராம ஊராட்சிகளில் ஒன்பது ஆண்டுகளாக தொடரும் ஜனநாயக விரோத மனித உரிமை மீறல்களுக்கு - போராட்ட அறிவிப்பு - செய்தியாளர் சந்திப்பு - காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தல் தேவையில்லை - கோவையில் தீக்குளித்த சம்பத் குடும்பத்துக்கு ரூபாய் 5 இலட்சம் அரசு நிதி வழங்க வேண்டும் - தலைவர் வற்புறுத்தல்.
ஏப்ரல் 29, இலங்கைத் தமிழ்ப் பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான சிவராமன் கடத்திக் கொலை - தலைவர் கண்டனம். ஆழ்ந்த இரங்கல் - கீரிப்பட்டி - பாப்பாப்பட்டி, நாட்டார்மங்கலம் நடைபயணம் அறிவிப்பு - 29.04.2005 பத்திரிகையாளர் சந்திப்பு.
ஏப்ரல் 30, கீரிப்பட்டி ஊராட்சித் தலைவர் ராஜினாமாவை ஏற்கக்கூடாது - புதிய தமிழகம் வற்புறுத்தல் - மே 15 ல் நடைபயணம்.
மே 15, உசிலம்பட்டி தாலுக்கா பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் - நடைபயணம் - நரசிங்கம் குடும்பத்திற்கு நீதி வழங்க கோரிக்கை - கீரிப்பட்டியில் வாக்களித்த 15 தலித் குடும்பங்கள் தள்ளி வைப்பு - அம்பேத்கர் சிலை - நாட்டார்மங்கலம் - பாப்பாப்பட்டி - கரையான்பட்டியில் நரசிங்கம் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கத் திட்டம் - திம்மநத்தம் வழி பாப்பாப்பட்டியில் பயணம் நிறைவு - 16.05.2005 - திட்டம் - காவல்துறை அனுமதிக்க கோரிக்கை - சாதிவெறியர்கள் போட்டி நடைபயணம் - அதிகாரிகள் திடீர்தடை.
ஜுன் 06, திருநெல்வேலியில் கொக்கோ-கோலா பன்னாட்டு குளிர்பான நிறுவனம் அமைய எதிர்ப்பு - தினமும் 30 இலட்சம் லிட்டர் நன்னீர் எடுக்கத் திட்டம் - தலைவர் கண்டனம் - பேரணி - கேரளாவில் பாலக்காடு பளிச்சமடா சம்பவங்கள் தமிழகத்திலும் நிகழும் - தலைவர் எச்சரிக்கை.
ஜுன், 11 எளிய மக்களின் மண்ணுரிமைக்கான புதிய தமிழகத்தின் கோவை பிரகடனம் திறனாய்வுக் கருத்தரங்கம் - சென்னை அண்ணாசாலை டி.என்.கோபாலன், கவிஞர் இன்குலாப், பேராசிரியர் கல்யாணி பங்கேற்பு.
ஜுன் 11, புதிய தமிழகம் மாநில பொதுக்குழு - கோவை பிரகடனத்தார்படி நிலங்களை பிரித்துக் கொடுக்க கோரிக்கை - பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை - சுயநிதிக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு கோரிக்கை.
ஜுன் 18, கண்டதேவி தேரோட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கு பெறுவதை உறுதி செய்ய வேண்டும் - உயர்நீதி மன்றம் ஆணை.
ஜுன், 20 தொகுதி மறுசீரமைப்பு - குளறுபடிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பாம்குரோவ் உணவு விடுதியில் - விளிம்பு நிலை மீனவர் - ஒடுக்கப்பட்ட தலைவர்கள் சந்திப்பு - தொகுதி மறுசீரமைப்புக்கு போராட்ட திட்டமிடல்.
ஜுன் 21, கண்டதேவி செல்ல முயன்ற தலைவர், மனித உரிமை ஆர்வலர் புதுவை சுகுமாரன், கவிஞர் கவிதாசரண் ஆகியோர் கைது - திருச்சி கே.கே.நகர் திருமண மண்டபத்தில் சிறை வைப்பு - மாலை விடுதலை - தேரோட்டத்தில் நீதிமன்ற ஆணை மீறல்.
ஜுலை, 04 தென்தமிழகத்தில் இந்து சாதி தீவிரவாதத்தை ஒடுக்கக்கோரி கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர் கோயிலில் பட்டியல் சாதி மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுப்பு, சென்னை வழக்கறிஞர்கள் சந்துரு, மற்றும் பொதுவழக்கறிஞர் பக்தவச்சலம், சாந்தி அரிமா, அரிமா தோழன், அய்யர், பேராசிரியர், முனைவர் அருணா ஆகியோர் ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தனர்.
ஜுலை, 04 சென்னை ஆர்ப்பாட்டம் ‘புத்த பெண்ணே யுத்தம் செய்யாதே’ என்று இலங்கைப் பிரதமர் சந்திரிகா குமார துங்காவுக்கு எதிராக போராட்டம் - சென்னை இலங்கைத் தூதரகத்தில் இலங்கைத் தூதரிடம் மனு
ஜுலை 04, கண்டதேவி தேரோட்டம் - நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தமிழ்நாடு அரசை கண்டித்து சென்னை - மெமோரியல் ஹால் முன்பு ஆர்ப்பாட்டம் - கவர்னரிடம் மனு.
ஜுலை 05 மாநிலப் பொதுக்குழு
ஜுலை 10 வேலூர் மாவட்ட பொறுப்பாளர் புதுமனை திறப்பு விழா.
ஜுலை 23 நெல்லை தாமிரபரணி தியாகிகள் வீரவணக்கநாள் - பேரணி, பொதுக் கூட்டம்.
ஜுலை 24 புளியம்பட்டி ஒட்டப்பிடாரம் பொதுக்கூட்டம்.
ஜுலை 25 சங்கரன் கோயில் ஒன்றிய அமைப்புச் செயலர் புதுமனை திறப்பு விழா
ஜுலை 27 உத்திரப்பிரதேச - மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு இடையே கென்.பேட்பா இருநதிகள் இணைப்புத் திட்டம் - பிரதமர் முன்னிலையில் ஒப்பந்தம் - இதேபோல மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி கேரளத்தில் பாயும் நதிகளை தமிகத்துடன் இணைக்க தலைவர் கோரிக்கை.
ஜுலை 29, தொகுதி மறுவரையறையை எதிர்த்து தமிழகம் முழுவதும் இரயில் மறியல் - சென்னை சேத்துப் பட்டு இரயில் நிலையத்தில் தலைவாரின் தலைமையில் மறியல், கைது.
ஜுலை, 30 தமிழகத்தில் பாராளுமன்ற - சட்டமன்ற தொகுதி மறுவரை செய்ய முயன்ற குழுவினர் அனைத்து தனித்தொகுதிகளையும் வடமாவட்டங்களில் இடம் பெற செய்ததற்கு புதிய தமிழகம் எதிர்ப்பு, தொகுதி மறுவரையரை ஆணையத்தின் தலைவர் மதிப்புமிகு நீதியரசர் குல்தீப்சிங்கை சந்திப்பு - டெல்லியில் மனு அளிப்பு.
ஜுலை 30, தொகுதி சீரமைப்பு விழுப்புரத்தில் ரெயில் மறியல் செய்ய முயன்ற தொண்டர்கள் கைது.
ஜுலை, 31 தனித்தொகுதிகளை தமிழ்நாடு முழுவதும் பரவலாக அமைக்க வேண்டும் தொகுதி சீரமைப்பு ஆணையத்திடம் புதிய தமிழகம் மனு.
ஆகஸ்டு, 06 மண்ணுரிமை திருநெல்வேலி மண்டல கண்டன ஆர்ப்பாட்டம்.
ஆகஸ்டு, 08 மண்ணுரிமை மதுரை மண்டல கண்டன ஆர்ப்பாட்டம்.
ஆகஸ்டு, 09 மண்ணுரிமை தஞ்சாவூர் மண்டல கண்டன ஆர்ப்பாட்டம்.
ஆகஸ்டு, 10 மண்ணுரிமை திருச்சி மண்டல கண்டன ஆர்ப்பாட்டம்.
ஆகஸ்டு, 12 மண்ணுரிமை காஞ்சிபுரம் மண்டல கண்டன ஆர்ப்பாட்டம்.
ஆகஸ்டு, 17 மண்ணுரிமை கோவை மண்டல கண்டன ஆர்ப்பாட்டம்.
ஆகஸ்டு 20, தொகுதி மறுசீரமைப்புக்கான அனைத்துக் கட்சி கூட்டம் - விளிம்புநிலை அடித்தள மக்கள் அமைப்புகளில் தலைவர்கள் சந்திப்பு.
ஆகஸ்டு 23 ‘வேலைக்கு உணவு’ வேண்டாம், ஏழைக்கு நிலம்தான் வேண்டும் - இந்திய பிரதமருக்கு தலைவர் கடிதம்.
ஆகஸ்டு 24, கிராமபுற வேலை உத்தரவாத மசோதா - வேலைக்கு உணவு திட்டம் - 100 நாளுக்கு வேலை - மத்திய அரசு திட்டம் - வேலைக்கு உணவு வேண்டாம் உழுவதற்கு நிலம் வேண்டும் - தலைவர் கோரிக்கை.
ஆகஸ்டு 26, கேரள நதிகளை தமிழக ஆறுகளோடு இணைக்க முதல்வர் ஜெயலலிதா பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் - தலைவர் கோரிக்கை.
ஆகஸ்டு 25 மண்ணுரிமை சென்னை மண்டல கண்டன ஆர்ப்பாட்டம்.
செப்டம்பர் 08, சுனாமி நிவாரண உதவிகளில் தலித்துக்களுக்கு பாரபட்சம் - தலைவர் புகார் - சேது சமுத்திரத் திட்டம் தோல்வித் திட்டம் - வறுமை ஒழிப்புடன் கூடிய மத்திய அரசின் வேலைக்கு உணவுத் திட்டம் வீணானது - அதற்கு பதில் நிலமற்றவர்களுக்கு நிலம் கொடுப்பதே வறுமையை ஒழிக்கும் முறை - பெண்களுக்கு தனி வாக்குரிமை - தலித்துக்களுக்கு தனி வாக்குரிமை - கோரிக்கை.
செப்டம்பர் 10, தியாகதீபம் இம்மானுவேலர் நினைவேந்தல்.
செப்டம்பர் 15 சுயநிதி தனியார் கல்லூரிகளின் தாழ்த்தப்பட்டோர் பணியிடங்களை நிரப்ப இந்திய மனித வளத்துறை அமைச்சருக்கு கடிதம்.
செப்டம்பர் 30, காலியிடங்களில் நீதிபதிகளை நிரப்ப சட்டத்துறைக்கு உத்தரவிட தலைவர் குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை.
அக்டோபர் 02 தோட்டத் தொழிலாளர் புதிய ஊதிய ஒப்பந்தம் - மோசடி - குறைந்த பட்ச கூலி ரூ.150 வழங்க அரசு அவசரச் சட்டம் - தலைவர் கோரிக்கை.
அக்டோபர் 02 தோட்டத் தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் - ஒரு மோசடி வேலை - 1998 ஆம் ஆண்டு சம்பளம் 76.85 ரூபாய் 7 ஆண்டுகள் கழித்து தற்போது இரட்டிப்பு வேலை பளுவிற்கு ரூபாய் 77 - இதுதான் சம்பள உயர்வா? - தலைவர் கேள்வி.
அக்டோபர் 04 உழவர் பாதுகாப்புத் திட்டம் ஊழலுக்கு வழி வகுக்கும் - நெல்லை செய்தியாளர் சந்திப்பில் தலைவர் விளக்கம் - கோயில்கள், மடங்கள், ஆதினங்கள், அறக்கட்டளைகள் ஆகிய அமைப்புகளின் நிலங்களை கையகப்படுத்தி மக்களுக்கு வழங்க கோரிக்கை.
அக்டோபர் 05, இராஜபாளையத்தில் புதிய தமிழக மாநாட்டிற்குத் தடை - அனுமதி கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் தலைவர் வழக்குஇ.
அக்டோபர் 13, கோவை மாவட்டம் கல்லுக்குழி பகுதியில் வாழும் வீட்டுமனையற்ற மக்களுக்கு புதிய வாழ்விடங்களை அமைத்துத் தருக - தலைவர் அறிக்கை.
அக்டோபர், 16 மதுரை மாவட்டம் மேலஉரப்பனூரில் சாதிய வன்கொடுமைகள் தலைவர் கடும் கண்டனம்.
அக்டோபர் 16, புதிய தமிழகம் விருதுநகர் மாவட்ட மாநாடு நடத்த தடை - ராஜபாளையம் தாலுக்கா அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்.
அக்டோபர் 23, கோவை மாவட்டம் - உடுமலை - திருமூர்த்தி மலைப்பகுதி - குருமலைப் பகுதியில்; மர்மநோய் - தலைவர் தலைமையில் போக்குவரத்து இல்லாத பகுதிக்கு செல்ல மருத்துவர்கள் திட்டம் - மாவட்ட ஆட்சித்தலைவர் - வனபாதுகாவலருக்கு கோரிக்கை (22.10.2005) - வனபாதுகாவலர் நினார்; நிரஞ்சன் அனுமதி மறுப்பு - பாதுகாக்கப்பட்ட காடுகள் பகுதியில் நுழைந்தால் கைது செய்ய எச்சரிக்கை - தடையை மீறுவோம் - தலைவர் பதில் - போட்டி மருத்துவ முகாம் அதேநாளில் வனத்துறையால் ஏற்பாடு - அடித்தளமக்களுக்கு மருத்துவ வசதி கொடுக்க முதலிலேயே நடவடிக்கை எடுக்காமல் தலைவரின் தலையீட்டுக்கு பிறகு அரசு விழிப்பு - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் - மாநில வனத்துறை அமைச்சருக்கு தந்தி.
அக்டோபர் 27, மாவட்ட மாநாடுகள் நடத்த தடை, குடியரசு தலைவர், பிரதமர் தலையிட புதிய தமிழகம் மனு - தேர்தல் ஆணையத்துக்கும் தமிழக அரசுக்கும் வழிகாட்டுதல் நல்க - கோரிக்கை.
அக்டோபர் 29, டெல்லி தொடர்குண்டு வெடிப்புக்கள் - மனித நேயத்துக்கு எதிரானவை - தலைவர் கண்டனம்.
அக்டோபர் 31, உடுமலை வால்பாறைப் பகுதியில் ஆதிவாசிகளுக்கு மருத்துவ சிகிச்சை செய்ய அனுமதி மறுத்தது - கிரிமினல் குற்றம் - வனத்துறை அதிகாரிகளுக்கு தலைவர் கண்டனம்.
நவம்பர், 03 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தினமணி கட்டுரை.
நவம்பர் 05, தோட்டத் தொழிலாளர் ஊதியம் - புதிய ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்குத் தொடருவேன் - வால்பாறை நகராட்சித்திடல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது தலைவர் அறிவிப்பு.
நவம்பர் 07, புதிய தமிழகம் பொதுக்குழு மாநாடு நடத்த தடை - அரசுக்கு தலைவர் கண்டனம் - பொதுக்குழு நடந்த அண்ணாமலை உணவகத்துக்கு அருகில் கட்சிக் கொடி கட்ட காவல்துறை எதிர்ப்பு - ஆளும் கட்சியினருக்கு தாராளமான அனுமதி - தலைவர் கண்டனம்.
நவம்பர் 09 தோட்டத் தொழிலாளர்களிடம் நபருக்கு 100/- பணவசூல் - சட்ட விரோதம் - தலைவர் அறிவிப்பு.
நவம்பர் 08, கங்கைகொண்டான் கோகோகோலா - எதிர்ப்பு - தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் உருவாக்கம் - 20 கிராமங்களில் விளைவுகள் குறித்து பரப்புரை கூட்டங்கள்.
நவம்பர் 09, முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் மறைவுக்கு புதிய தமிழகம் அஞ்சலி அறிக்கை வெளியீடு - இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள தலைவர் புதுடெல்லி விரைந்தார்.
நவம்பர் 11, புதுடெல்லியில் இந்திய பிரதமர், சோனியாகாந்தி, குடியரசுத் தலைவர் அகமது படேல் சந்திப்பு.
நவம்பர், 12 முன்னாள் குடியரசு தலைவர் கே.ஆர்.நாராயணனுக்கு இறுதி
அஞ்சலி செலுத்த தலைவர் டெல்லி செல்லல் - கலந்து கொள்ளுதல் - அவரது மறைவு குறித்து அரசு முறையாக அறிவிக்கவில்லை. பொதுமக்களும் நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்த உரிய அவகாசம் தரவில்லை. இறுதி சடங்கு நடைபெறும் இடம் கூட தெளிவாக அறிவிக்கவில்லை என டெல்லி செய்தியாளர் சந்திப்பில் வேதனையை வெளிப்படுத்தினார்.
நவம்பர் 22, பீகாரில் புதிய ஜனதாதள ஐக்கியப்பிரிவு ஆட்சி அமைத்தல் - புதிய முதல்வர் நிதிஸ்குமார், ஜார்ஜ் பெர்ணாண்டல் ஆகியோருக்கு தலைவர் வாழ்;த்து.
நவம்பர் 26, சென்னை மாநகரில் வௌ;ளம் - தமிழக அரசு விரைந்து செயல்பட கோரிக்கை - இயற்கை சீற்றங்கள் - போரிடர்களை விரைந்து எதிர்கொள்ள தமிழக அரசுக்கு தலைவர் யோசனை.
நவம்பர் 30, காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை விரைந்து நிரப்ப சட்டத்துறைக்கு ஆணையிட புதிய தமிழகம் குடியரசு தலைவரிடம் மனு.
டிசம்பர் 06, சென்னை மாநகர மாநாடு - திரிசூலம் கொலை வழக்கில் வழக்குப் பதிவு
டிசம்பர் 12 திரிசூலம் கொலை வழக்கில் தலைவரைச் சிக்க வைக்க
காவல்துறை சதி - புதிய தமிழகம் - உயர்நிலைக்குழு இந்த சதியை அம்பலப்படுத்தி கவர்னரிடம் மனு.
டிசம்பர் 29, தலைவர் மீது போடப்பட்டுள் பொய் வழக்கை வாபஸ் வாங்க கோரி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் - பல மாவட்டங்களிலும் உண்ணாநிலை அறப்போர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக