திங்கள், 18 மே, 2015

தென் தமிழகத்தில் 3 மாதத்தில் 66 கொலைகள்: தமிழக அரசை கலைக்கவேண்டும் - டாக்டர் .கிருஷ்ணசாமி..M .D .M .L..A .,



மதுரை: தென் தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 66 கொலைகள் நடந்துள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை. தென் தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 66 கொலைகள் நடந்துள்ளன. இதில் 26 பேர் தேவேந்திரர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதில் நாடார், யாதவர் சமூகத்தை சேர்ந்தவர்களும் அடங்கும். அதிகாரிகள் துணையோடு இந்த கொலைகள் நடந்துள்ளதால் தமிழக அரசு கலைக்கப்பட வேண்டுமென்று ஆளுனரிடம் மனு கொடுக்க போகிறேன். இந்த கொலைகளுக்கு பின்னால் இருக்கும் பின்னணி பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க நீதிமன்றத்தில் முறையிடப் போகிறேன்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக