சனி, 13 ஜூன், 2015

ஜெயலலிதாவை சந்திக்கவும் நேரம் கேட்பேன்: விஜயகாந்தை சந்தித்த பின்பு டாக்டர் கிருஷ்ணசாமி தகவல்

தலைவர் விஜயகாந்தை, புதிய தமிழகம் கட்சித் தலைவர்  டாக்டர்  கிருஷ்ணசாமி திடீரென இன்று சந்தித்து பேசினார்.
 
சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் வரை நடைபெற்றுள்ளது.
 
அப்போது ஆர்.கே.நகர் இடைத் தேர்தல், விரைவில், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல், எதிர்கால கூட்டணி போன்ற பல அம்சங்கள் பேசப்பட்டதாக தெரிய வருகின்றது.
 
இந்த சந்திப்பு குறித்து, டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழர்கள் நலன் காக்கவும், உரிமைகளை மீட்டெடுக்கவும் ஒருமித்த கருத்துக்களை உருவாக்கும் முயற்சியில் நான், கடந்த இரண்டு மாத காலமாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறேன்.
 
அந்த வகையில், திமுக தலைவர் கருணாநிதி, ஜி.கே.வாசன், வைகோ, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தேன். அது போலவே, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்தேன்.
 
இவர்களை எல்லாம் சந்தித்தது போலவே, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்கவும் நேரம் கேட்பேன். அவர் நேரம் ஒதுக்கி தந்தால், அவரையும் நிச்சயம்  சந்திப்பேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக