செவ்வாய், 28 ஜூலை, 2015

காலச்சுவடுகள்

.. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் திறப்புவிழா .....டாக்டர் ..கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லநாடு கிராமத்தில் வி.டி.வி.டி. அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் திறப்புவிழா இன்று நடந்தது. கட்டிடத்தை ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவருமான மருத்துவர் கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்கள் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார். வல்லநாடு பகுதியில் வாழும் அனைத்து சமூக மக்களும் "இதுவரை மாட்டுக்கொட்டகையாக இருந்த இடத்தை மாணவர்கள் கல்விகற்க கூடிய மாளிகையாக (வகுப்பறை கட்டிடம்) மாற்றிய டாக்டர் அய்யாவிற்கு நன்றி" என்று ஒருசேர பாராட்டினர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து சமூக பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், ஆசிரிய பெருமக்களும் சட்டமன்ற உறுப்பினர் பதவி ஏற்றவுடன் முதல் முதலில் இந்த பள்ளி கட்டிடத்துக்காக ரூ.25 இலட்சம் நிதி ஒதுக்கிய டாக்டர் அய்யாவிற்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக