வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

தேவேந்திரர்களின் அரசியல் அரங்கில் முக்கியம் பெரும் இரண்டு புத்தகங்கள்.....{1}... முதுகுளத்தூர் கலவரம் ....{2}... சமுக உ ரிமை போராளி இம்மானுவேல் தேவேந்திரர்

.......சமாதானக் கூட்டத்திலிருந்து வெளியேறிய முத்துராமலிங்கத் தேவர், “இம்மானுவேல் போன்ற பள்ளன்கள் எல்லாம் எதிர்த்துப் பேசுவதை எல்லாம் வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்கிங்களா? என்று கோபமாகக் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு அடுத்த நாள்தான் இம்மானுவேல் பரமக்குடியில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்...இம்மானுவேல்தேவேந்திரர் கொலையைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரமே முதுகுளத்தூர் கலவரமாக விசுவரூமமெடுத்துள்ளது. இம்மானுவேல் கொலை செய்யப்பட்ட நாளிற்கு மறுநாள் பரமக்குடி அருகில் உள்ள அருங்குளத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. மறவர்களும், பள்ளர்களும் வாழும் இவ்வூரில் அன்று கூத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூத்தில் முத்துராமலிங்கத் தேவரைப் புகழ்ந்து பாட வேண்டும் என்று மறவர்கள் கோரினர். இதற்கு பள்ளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. ஒரு பெண் உள்பட ஐந்து பள்ளர்கள் உயிரிழந்தனர். பள்ளர்களும் எதிர்த்துத் தாக்கினர். இதில் 5 மறவர்கள் இறந்தனர். (முதுகுளத்தூர் கலவரம், பக்: 58) தொடர்ந்து “இம்மானுவேலைக் கொலை செய்தவர்கள் கீழத்தூவலில் மறைந்திருப்பதாக போலிசுக்கு 14 ஆம் தேதி காலையில் தகவல் கிடைத்தது. .இதைத் தொடர்ந்து அங்கு சென்ற ஆயுதப்படைக்கும் மறவர்களுக்கும் நடந்த மோதலில் 5 மறவர்கள் கொல்லப்பட்டனர்.(கீழ்த் தூவல் துப்பாக்கிச் சூட்டில் காவல்துறையினர் நடந்துகொண்ட முறை மனித நாகரிகமற்ற செயல். என்று கூறுகின்றனர் அங்கிருந்த மறவர்களின் கண்களையும், கைளையும் கட்டி ஓடவிட்டு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.) தொடர்ந்து கலவரம் கிராமம் கிராமமாகப் பரவியது. 18 ஆம் தேதியன்று வீரம்பல் கிராமத்தில் இருந்த பள்ளர் இன மக்கள் ஒரு கிறிஸ்தவக் கோயிலில் அடைக்கலம் புகுந்திருந்தனர். மறவர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டு நடத்திய துப்பாக்கிச் சூடில் பலர் உயிழந்துள்ளனர். (முதுகுளத்தூர் கலவரம், பக்: 60). நிராயுதபாணிகளான தேவேந்திர குல மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்கொடுமை மிகவும் அவலமானது. எதிர்த்துக் கேள்வி கேட்கும் யாருக்கும் இத்தகைய வன்கொடுமைகள்தான் என்பது இந்திய வரலாற்றில் பதில்களாக அமைகிற்து என்பதை இச்சம்பவம் மீண்டும் வலியுறுத்திக்கூறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக