வியாழன், 13 ஆகஸ்ட், 2015

தேவேந்திர குல மக்கள் சாதிகளாக பிரிக்கப்படவில்லை. சாதிகளாக தொகுக்கப்பட்டிருக்கிறார்கள்.

சாதியமைப்பின் வேர்கள் நமது பழங்குடி மரபில் உள்ளன. இந்திய நிலப்பரப்பில் இருந்த பல்லாயிரம் பழங்குடிச் சமூகங்களே அடுத்த கட்டத்தில் சாதிகளாகப் பரிணாமம் கொண்டன. இந்தியப் பழங்குடிச் சமூகங்கள் நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டதன் விளைவே சாதியமைப்பு. நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் நிலமே ஏற்றதாழ்வை தீர்மானிக்கும் அளவுகோல். ஆகவே நில உடைமை சார்ந்து சாதிகள் மேலே கீழே என அமைக்கப்பட்டன. நிலம் இழந்த சாதிகள் கீழே செல்வதையும் நிலம் பெற்ற சாதிகள் மேலே வருவதையும் இந்திய வரலாற்றில் சாதாரணமாகக் காண்கிறோம். சிறந்த உதாரணம் தமிழகத்தில் உள்ள பள்ளர்கள் என்னும் தேவேந்திரகுல வேளாளர்கள். அவர்கள் நிலமிழந்து கீழே சென்றது சில நூற்றாண்டுகளுக்குள் நிகழ்ந்த விஷயம் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
சாதியமைப்பில் உள்ள அதிகார அடுக்கை உறுதியாக நிலைநிறுத்துவதற்கான கருத்தியல்கள் வைதீக இந்து மதத்தில் இருந்து எடுத்து விரிவாக்கம் செய்யப்பட்டன. இன்று நாம் பார்க்கும்போது ஏற்றத்தாழ்வை உருவாக்க அக்கருத்தியல்கள் தான் இன்று வரை ஆதிக்கம் செலுத்துகிறது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக