புதன், 5 ஆகஸ்ட், 2015

தேவேந்திரகுல வேளாளர் உட்ஜாதி பிரிவுகளை ஒருங்கிணைத்து அரசாணை வெளியிட வேண்டும்: டாக்டர் க.கிருஷ்ணசாமி M.D,M.L.A அவர்கள்.வலியுறுத்தல்..

..மதுரை,:''உட்ஜாதி பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என ஒரே பெயரில் அழைப்பதற்கான அரசாணை வெளியிட வேண்டும்,'' என மதுரையில் புதிய 
தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி M.D,M.L.A அவர்கள் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:புதிய தமிழகம் சார்பில், பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி, மூப்பர் மற்றும் தேவந்திர குலத்தான் என அழைக்கப்படும் உட்ஜாதி பிரிவு மக்களை தேவேந்திர குல வேளாளர் என ஒருங்கிணைத்து அரசாணை வெளியிட வலியுறுத்தி வருகிறோம். தமிழகத்தில் வேலை வாய்ப்பு அடிப்படையில் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி, முற்படுத்தப்பட்டோர், பிற்பட்டோர் பட்டியலில் இன வகுப்பு மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. பட்டியலில் உள்ள குறிப்பிட்ட ஜாதிகளை ஒருங்கிணைத்து அருந்ததியினர் என அறிவித்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள பள்ளர் உள்ளிட்ட ௬ ஜாதிகளை இணைத்து தேவந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி ௬ கட்டமாக போராட்டம் நடத்தி வருகிறோம். இதில் முதல்கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அடுத்தகட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக