வியாழன், 6 ஆகஸ்ட், 2015

மது விலக்கு அமல் ரொம்ப சிரமம்! .....டாக்டா் கிருஷ்ணசாமி M.D.M.L.A.,.அவர்கள்.



....ராமநாதபுரம்: “மது விலக்கு என்பது கொள்கை அளவில் சாத்தியம். நடைமுறையில் சாத்தியமல்ல” என புதிய தமிழகம் நிறுவனர் .டாக்டா் கிருஷ்ணசாமி கூறினார்.அவர் கூறியதாவது:சசிபெருமாள் மரணத்திற்கு பின் மது விலக்கு போராட்டம் வலுத்துள்ளது. ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி மது 
விற்பனை வருமானத்தால் அரசின் திட்டங்கள் செயல்படுகின்றன என்பதில் மாற்று கருத்தில்லை; மது வருவாயால் எந்த அரசும் செயல்படவில்லை.முதல்கட்டமாக 'பார்'களை மூடலாம். மது விற்பனை நேரத்தை குறைக்கலாம். கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள மதுக்கடைகளை மூடலாம்.
புதிய மது விலக்கு கொள்கையை அமல்படுத்த, சட்டசபை சிறப்பு கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். மது விலக்கு என்பது கொள்கை அளவில் சாத்தியம்; நடைமுறையில் சாத்தியம் அல்ல.
மதுவுக்கு எதிராக மாணவர்கள் நேரடியாக களமிறங்கக்கூடாது; விழிப்புணர்வு பிரசாரம் செய்யலாம். கடந்த 1971ல் அரசின் பொருளாதார சிக்கலை தீர்க்க மது விலக்கை தி.மு.க., அரசு விலக்கிக் கொண்டதற்கு கருணாநிதி மன்னிப்பு கோருவது அவரது பெருந்தன்மை.
இலவசங்களை மக்கள் பயன்படுத்துவதில்லை. இலங்கை வசமுள்ள தமிழக விசைப்படகுகளை மீட்கவும், சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ராமேஸ்வரம் பேக்கரும்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சமாதியில் மலரஞ்சலி செலுத்திய கிருஷ்ணசாமி கூறியதாவது:ராமேஸ்வரம்:அவரது சமாதியில் மணி மண்டபம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும். நகர்புறம் போல், கிராமங்களிலும் குடிநீர், விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் 'புரா' திட்டத்தை, கலாம் கொண்டு வந்தார்.
அதை நாடு முழுவதும் அமல்படுத்தி, 'அப்துல்கலாம்' என பெயர் வைக்க வேண்டும் என்றார்.
ராமேஸ்வரம் நகர் செயலாளர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக