செவ்வாய், 1 செப்டம்பர், 2015

டாக்டர் . க . கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் தேவேந்திரர்களின் போர் பிரகடனம் தேவேந்திர குல மக்களுக்கு விடுதலை களம் அமைத்து கொடுத்தது கொடியங்குளம் - அதுவே ஆகஸ்ட்31..


புராதன கால பொதுவுடைமை
சமுதாயத்திற்கு பிறகு குடும்பம், தனிச் சொத்து அரசுகள் உருவாகின. ஆண்டான் அடிமை, ஜமீன் முறைகள் எதேச்சதிகார அரசு, குடியரசு, முடியரசு, பாட்டாளி வர்க்க
சோசலிச அரசு, பாசிஸ்ட்ட அரசு என பல வகை அரசுகள் தோன்றின. இவற்றில் குடியரசே பெரும்பாலான நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசு அமைப்பாக
இருக்கிறது. மக்களுக்காக மக்களே மக்களால் உருவாக்கப்பட்ட அரசு குடியரசு ஆகும். பாட்டாளி வர்க்க சோசியலிஸ அரசு மற்றும் குடியரசு தவிர அரசு
இயந்திரம் பெரும்பாலான மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறை கருவியாக இருந்து வந்திருகிறது.
விதி விலக்குகளாக முடியரசு குடியரசை போல செயல்படலாம். சர்வாதிகாரி கூட ஜனநாயக
வாதியாக செயல்படலாம் அதை உலகம் ஏற்றுக்கொள்ளும் ஆனால் ஒரு ஜனநாயக
குடியரசு சர்வாதிகார பாசிஸ அரசைப் போல செயல்படுவதை அந்நாட்டு மக்கள்
ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மக்கள் எத்தனை பிளவுகளாக இருந்தாலும் அரசு
இயந்திரம் எச்சார்பற்றதாக நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதே நியதி ஆகும். அண்மையில் ஈராக், லிபியா, சிரியா, துனிசியா, எகிப்து, ஏமன் போன்ற
நாடுகளில் அதிபர்கள் அந்நாட்டில் உள்ள ஒரு குழுவுக்கு ஆதரவாக இன்னொரு குழுவை அடக்கி ஒடுக்கிட அரசு இயந்திரத்தை பயன்படுத்தியவர்களின் ஆட்சி
அதிகாரம் பறிக்கப்பட்டது மட்டுமல்ல அவர்களை மக்களே கண்முன்னே கண்டித்த சம்பவங்களையும் உலகறியும்.
1991 முதல் 1996 வரையிலும் தமிழகத்தினுடைய
இன்று முதல்வராக இருக்கக் கூடிய ஜெயலலிதா அவர்கள் தான் அன்றும் முதல்வர். 1995-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ம் தேதி தேவேந்திர குல சமுதாயத்தை சார்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் , முக்குலத்தோர் சமுதாயத்தை சார்ந்த மாணவர்களால்
தாக்கப்பட்டது தொடர்ந்து நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் அருகே உள்ள வடநத்தம் பட்டி மற்றும் வீரசிகாமணியைச் சார்ந்த இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் ஒரு தலைவரின் சிலை சேதப்படுத்தப்பட்டதாகக் கூறி ஜூலை 27-ந் தேதி முதல் ஒரே நேரத்தில் தென் தமிழகம் முழுமைக்கும் தேவேந்திர குல வேளாளர்களை கொச்சைப்படுத்தியும், சிறுமைப்படுத்தியும் எண்ணற்ற போஸ்ட்டர்கள்
ஒட்டப்பட்டன. தேவேந்திர மக்களை கொச்சைப்படுத்தி சுவரொட்டி ஓட்டியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அரசு ஆதரவோடு ஒவ்வொரு மாவட்டமாக பந்த்கள் நடைபெற்றது. தென் தமிழகம் முழுமைக்கும் பல்வேறு இடங்களில் முக்குலத்தோர் தேவேந்திர குல வேளாளர் மோதல்கள் உருவாகின. நெல்லையில் ஜங்சனை சார்ந்த ராமர், லட்சுமணர் என்ற தேவேந்திரர்கள் படு கொலைக்கு ஆளானார்கள். துத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் பேருந்துகளில் தனியாக பயணம் செய்த ஆண்,பெண் இருபாலரும் தாக்குதலுக்கு ஆளானார்கள். தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளம் அருகே உள்ள ஆலந்தா என்ற கிராமத்தைச் சார்ந்த பலவேசம் மற்றும் துணைவியார் இருவரும் பட்டப்பகலிலே கொலை செய்யப்பட்டார்கள். தேவேந்திர மக்களின் நடமாட்டம் முடக்கப்பட்டது. அவர்களுடைய வாழ்வாதாரம் சீர்குலைந்தது. அவருடைய நிலம் மற்றும் புலங்களில் முக்குலத்தோரின் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு அழியாட்டம் செய்யப்பட்டன. எஞ்சியவைகளை விட்டு வைக்காமல் கூட்டம் கூட்டமாக வந்து கொள்ளையடித்து சென்றனர். மணியாட்சி சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட
கிராம மக்கள் வாழ்வா?சாவா? என்ற நிலைக்கு
தள்ளப்பட்டார்கள்.
கொடியங்குளத்தை சுற்றி உள்ள 80-க்கும் மேற்பட்ட தேவேந்திர குல ஊர் நாட்டாமைகளின் கூட்டம் நடைபெற்றது. அடுத்து இரண்டாவது நாளில் பெண்கள் போல மாறு வேடம் அணிந்த ஒரு கூலிப்படை மீண்டும் ஆலந்தாவிற்குள் நுழைந்தது. எச்சரிக்கையோடு இருந்த தேவேந்திரர்கள் கொலைகார கூலி கும்பலை 5 கிலோமீட்டருக்கு மேலாக விரட்டினார்கள். மூன்று பேர் தப்பி ஓடி விட்டனர். மரணம் அடைந்த மூன்று பேரினுடைய வீட்டுக்கு துக்கம் விசாரிக்க அன்று மாவட்ட ஆட்சியர் பன்னீர் செல்வம் சென்றார். இந்த சம்பவம் நடந்த நாள் ஆகஸ்ட் -30.
BLOOD IS THICKER THAN WATER- இரத்தம் தண்ணீரைவிட கெட்டியானது என்று சொல்வார்களே அது போலதான்
பன்னீர் செல்வம் இரத்தம் துடித்தது. ஏறக்குறைய ஒருமாத காலத்திற்கு மேலாக தென் தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு எதிராக நடைபெற்ற எந்த தாக்குதலுக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆனால் அந்த மூன்று மறவர்களின் 
மரணம் மட்டும் அவர்களுக்கு நெஞ்சை உறுத்தி விட்டது. தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி நான்கு ஐந்து மாவட்ட ஒட்டுமொத்த காவல்துறை கொடியங்குளத்தில் குவிக்கப்பட்டது. சென்னையை மையமாக வைத்து இயங்கிய அழகு செக்யுரிட்டி எனும் தனியார் நிர்வன அடியாட்களும் வரவழைக்கப்பட்டார்கள். காவல் துறையிடத்திலே லத்தியும், துப்பாக்கியும் தான் இருக்கும் என்பதையே பெரும்பாலான மக்கள் அறிவர். ஆகஸ்ட் மாதம் 31-ந் தேதி நவீன ஆயுதங்கள் உட்பட்ட கோடாரி, வேல்கம்பு, அரிவாள்கடப்பாறை போன்ற கற்கால ஆயுதங்களுடன் கொடியங்குளம் சுற்றி வளைக்கப்பட்டது. வீட்டில் உள்ள ஆண்களும், பெண்களும் அடியாட்களாக வந்த செக்யுரிட்டி ஆட்களாலும் அடியாட்களைப் போல மாறிய காவலர்களாலும் விரட்டியடிக்கப்பட்டனர். வீடு வீடாக சென்று அவர்கள் சேமித்து வைத்திருந்த அனைத்து பொருட்களையும் நிர்மூலமாக்கினர். 10-15 ஆண்டுகள்
அரேபிய நாடுகளுக்கு சென்று அல்லும் பகலும் பாடுபட்டு வாங்கிய தங்களுடைய ஆசைப் பொருட்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கினார். டிவி, ரேடியோக்கள், பேன், மிக்சி, கிரைண்டர் டேப்ரெக்கார்டுகள், இருசக்ர வாகனங்கள், பண்டபாத்திரங்கள் அனைத்தும் அந்த
இடத்தில்தூள்தூளாகின. பீரோக்களும், கட்டில்களும் கோடாரியால் துண்டாக்கப்பட்டன. வீடுகளின்
கதவுகள், ஜன்னல்கள் அத்தனையும் நொறுக்கிப் போடப்பட்டன. அவர்கள் மொசைக் தளங்களைக் கூட விட்டு வைக்க வில்லை. அரசு தபால் மற்றும் ரேசன் கடைகளையும் சூறையாடினர். ஆசையாக வளர்த்த ஆடு, மாடு, நாய்களையும் சுட்டுப் பொசுக்கினர் . வீட்டில் வைத்திருந்த சொற்ப தொகைகளையும், துணி மணிகளையும் விட்டு வைக்க வில்லை. உச்சக் கட்டமாக பொதுக் கிணற்றில் பெட்ரோலையும் ஊற்றினார். எதிர்த்தவர்கள் கை கால்கள் உடைக்கப்பட்டன. இளம்பெண்களின் என்று கூட பார்கவில்லை. மக்களை கட்டிக் காக்க வேண்டிய அரசு மக்களின் சொத்துக்களை சூறையாடியது. சட்டப்படி நடக்க வேண்டிய உயர் அதிகாரிகளே சட்டத்தை காலில் போட்டு உதைத்தார்கள்.
தேவேந்திர குல மக்கள் மீதான தங்களுடைய நீண்ட நெடுநாளைய வன்மத்தை காவல் துறையின் மூலம் தீர்த்து கொண்டார்கள். கொடியங்குலத்தின் மீது நடத்திய தாக்குதல் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மகிழ்விப்பதற்காகவும் மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்காகவும் இன்னொரு பிரிவினரின் மீது ஏவி விடப்பட்ட அரச பயங்கரவாதமே அதுவாகும். கொடியங்குளம் சம்பவம் நடந்த அடுத்த நாளே முதன் முதலாக அந்த கிராமத்திற்குள் அடியெடுத்து வைத்தது நாம் தான்.
நீதி மன்றம் சென்று நீதியை நிலைநாட்டினோம் 
மக்கள் மன்றம் சென்று மக்களை தட்டி எழுப்பினோம். வெகுண்டெழுந்த தேவேந்திரர்கள் அடுத்து வந்த தேர்தலில் ஆட்சியை அகற்றிக் காட்டினார்கள். 
அரச பயங்கர வாதம் அம்பலப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக