புதன், 12 அக்டோபர், 2016

தேவேந்திர குல வேளாளர்களின் வலிமையான கோரிக்கைகள் ....!!!!.. புறக்கணிக்கும் திராவிட ஆட்சிகள் ..!!!!..

.. தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணையை எடுத்துக்கொள்வோம் .. இதில் அப்படி என்ன சிக்கல் இருக்கிறது . ஒரு கையெழுத்துதான் .. தேவேந்திர குல மக்களுக்கு சமுக அங்கீகாரம் கிடைக்க கூடாது என்ற காழ்புணர்வு தானே இந்த திராவிட .ஆட்சியாளர்களுக்கு ..?.... கடந்த 50 வருடத்திற்கும் மேலாக தேவேந்திரர் சமுகத்தின் எந்த அமைப்பாக இருந்தாலும் முதல் கோரிக்கையே இதுதான் ....பல்வேறு அரசியல் கட்சியில் உள்ள நமது சட்டமன்ற உ றுப்பினர்கள் சட்டபேரவையில் பேசி இருக்கிறார்கள் ... சங்கரன்கோவில் கோபாலகிருஷ்ணன் , பரமக்குடி ராம்பிரபு , மதுரை சு ,க . முருகவேல்ராஜன் போன்றவர்கள் சட்டமன்றத்தில் குரல் எழுப்பியும் ஏன் பதில் இல்லை ... புதிய தமிழகம் கட்சியின் வருகைக்கு பிறகு "தேவேந்திர குல வேளாளர் " அரசு ஆணை கோரி தொடர்ந்து சட்டமன்றத்தில் வலியுறுத்தி வருகிறது ... மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர். டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்கள் கடந்த 25 வருடமாக வலியுறுத்தி வருகின்றார் ...கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தொகுதி உ டன்பாடு வைக்கும் போது நமது கோரிக்கைகள் அனைத்தையும் கொடுத்தோம் .. இன்று வரை ஒரு கோரிக்கைகளை கூட அம்மையார் நிறைவேற்றவில்லை ..... கடந்த திமுக ஆட்சியில் தொடந்து போராடினோம் , திமுக ஆட்சியின் இறுதி கால கட்டத்தில் நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஒரு கமிசனை அமைத்தார் ... தேவேந்திரர்களின் வாக்குகளை பெறலாம் என்ற நோக்கம்தான் ...?..தீர்வுதான் என்ன ..?.... தேவேந்திரர்கள் வலிமையான வாக்கு வங்கியாக மாற வேண்டும் .. நமது கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியாக , தேர்தல் அறிக்கையில் வெளியிடும் கட்சிக்கே நமது ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் ... அதை புதிய தமிழகம் கட்சிதான் பெற்று தரும் , நமக்கான அரசியல் அடையாளம் புதிய தமிழகம் கட்சிதான் ..

1 கருத்து:

  1. மதுரை விமான நிலையத்துக்கு இம்மானுவேல் சேகரனின் பெயரை வைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு