புதன், 12 அக்டோபர், 2016

தமிழக சட்டப்பேரவைக்கு சபாநாயகரை கண்டிக்கும் பதாகையுடன் சென்ற புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் . டாக்டர் .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,, அவர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தமிழக சட்டப்பேரவைக்கு சபாநாயகரை கண்டிக்கும் பதாகையுடன் சென்ற புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் . டாக்டர் .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,, அவர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
......பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டு சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி:
கடந்த 2015-க்குப் பிறகு தமிழகத்தில் சாதியப் படுகொலைகளுக்கு ஆட்பட்டு உயிர்நீத்த பட்டியலின சமுதாயத்தைச் சார்ந்த எவருடைய குடும்பத்திற்கும் இந்த அரசு அரசு வேலைவாய்ப்பு வழங்கவில்லை. அதே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் எல்லா விதமான அரசு சலுகைகளையும் வழங்குகிறார்கள். இது குறித்து பேசுவதற்கும்,
அதேபோல கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மரணமடைந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் மர்மமான மரணம் குறித்து பேசுவதற்கும், கோகுல்ராஜ் கொலைக்குற்றவாளிகளை கைது செய்வது குறித்து பேசுவதற்கும் இந்த அவையிலே நேரமில்லா நேரத்திலே பேசுவதற்கு நான் அனுமதி கேட்டேன். ஆனால் அவைத் தலைவர் அனுமதி மறுத்தார். சட்டசபையில் பேச அனுமதி மறுத்த பேரவைத் தலைவரைக் கண்டிக்கும் வகையிலே “DOWN DOWN DICTATOR SPEAKER DOWN DOWN” என்ற வாசகம் அடங்கிய பதாகையை பேரவையிலே காட்டினேன். எனவே அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி என்னை சட்டமன்றத்திலே வெளியேற்றியிருக்கிறார்கள். அதற்குண்டான பலனை இந்த அரசு விரைவிலே அனுபவிக்கும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக