புதன், 28 டிசம்பர், 2016

தேவேந்திர குல வாலிபர்கள் மீது குறி வைத்து வழக்கு: சென்னையில் 19–ந்தேதி ஆர்ப்பாட்டம் - டாக்டர் .கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் அறிவிப்பு

தேவேந்திர குல வாலிபர்கள் மீது குறி வைத்து வழக்கு: சென்னையில் 19–ந்தேதி ஆர்ப்பாட்டம் - டாக்டர் .கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் அறிவிப்பு..!!!...சமீப காலமாக தாழ்த்தப்பட்ட வாலிபர்களை குறி வைத்து பெட்டிகேஸ் முதல் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். இது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
ராமநாதபுரம் மாவட்ட கட்சி ஒருங்கிணைப்பாளர் கதிரேசன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்றால் பிளக்ஸ்போட்டு வைத்தல், அகற்றப்பட்ட மாநகராட்சி இடத்தில் குடியிருந்தவர்களுக்கு மாற்று இடம் வேண்டி போராடியது தான்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டுமானால் இந்திய இறையாண்மைக்கு எதிராக நடத்தல், ஆயுதம் தாங்கி போராடுபவர்கள் மீது தான் பாய வேண்டும். ஆனால் சாதாரண வழக்கில் கூட தாழ்த்தப்பட்ட வாலிபர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இதற்கு அரசின் உள்நோக்கம் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுகிறது. தாழ்த்தப்பட்ட வாலிபர்களை குறி வைத்து கைது செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் வரும் 19–ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்திய உள்துறை அமைச்சகத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக