புதன், 28 டிசம்பர், 2016

காலச்சுவடுகள் 1996.....அக்டோபர்...6..... சென்னையை குலுக்கிய பேரணி ...!!!..

காலச்சுவடுகள் 1996.....அக்டோபர்...6..... சென்னையை குலுக்கிய பேரணி ...!!!.. ..தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் .... டாக்டர் .க . கிருஷ்ணசாமி ..M .D .M .L .A ., அவர்கள் தலைமையில் 
கொடியங்குளத்தில் 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 31ல் காவல்துறை அரங்கேற்றிய அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் நீதி கேட்டு முதற்கட்டமாக அக்டோபர் 6ல் சென்னை மெரினாவில் பேரணி, அந்த பேரணியிலும் காவல்துறை அரங்கேற்றிய அத்துமீறலால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் இரண்டு இளைஞர்கள் தன்னுயிரை நீத்த சம்பவம் தமிழகமெங்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் மென்மேலும் கொந்தளிப்பை உருவாக்கியது.
ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கியே வைக்கவும், அடிக்கி வைக்கவும் எண்ணுகின்ற அரசும், அதிகார வர்க்கமும் ஒருபக்கம், ஒடுக்கு முறையையும், அடக்குமுறையையும் நெஞ்சுக்கு நேர் எதிர் கொண்டு தூள்தூளாக்கு வதற்கு முடிவு செய்து அணிவித்துக் கொண்ட ஒடுக்கப்பட்ட மக்களோ இன்னொரு பக்கம்.
சமூக கொடுமைகள் மற்றும் தீண்டாமை கொடுமைகளுக்கு ஆளான அனைத்து சமுதாய மக்களையும் ஒரு சேர ஒடுக்கப்பட்ட மக்கள் என்று நாம் குறிப்பிட்டாலும் கூட, அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அணி அணியாய் களம் கண்டவர்கள், இழப்புகளை எதிர்க் கொண்டவர்கள், அடிக்க அடிக்க எழுந்து நின்றவர்கள், ஒடுக்க ஒடுக்க ஒங்கி நின்றவர்கள், களத்திலும் கருத்திலும் அடங்க மறுத்து நின்றவர்கள் தென் தமிழகத்தினுடைய தேவேந்திகுல வேளாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
தேவேந்திரகுல வேளாளர்களை பொருத்தமட்டிலும் வரலாற்றில் இன்று போலவே என்றும் வறிய நிலையில் இருந்தவர்கள் அல்ல நில உடமையாளர்களாக இருந்து இந்த மண்ணில் எந்த விதமான அடிமைத்தனத்துக்கும் ஆளாகாமல் இருந்தவர்கள். இடைப்பட்ட காலத்தில் அரச படையெடுப்புகளில் நிலப்பறிப்புகளுக்கு ஆளாகி மீண்டும் தங்களுடைய முதன்மை இடத்தை பிடிக்க வேண்டுமே என்ற தாகத்தோடும், கோபத்தோடும் போராட்டங்களில் இயற்கையான முன்னனி பாத்திரத்தையும், தலைமை பாத்திரத்தையும் தாங்கிவரும் தகுதியைப் படைத்தவர்களாக மாறினர்.
தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்திய தேசத்திலேயும் ஒடுக்கப்பட்ட மக்கள் வரலாறுகள் எழுதப்படுகின்ற போது தேவேந்திரகுல மக்களுடைய வீர வரலாறுகள் எழுதப்படாமல் இருக்கமுடியாது.
ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளுக்காக தங்களுடைய அடையாளங்களை மீட்டெடுப்பதற்காக தமிழகத்திலே அக்டோபர் 6-ஆம் தேதி நடத்திய பேரணி முதல் மைல்கல்லாக அமைந்தது.
பல நூறாண்டு காலமாக மறைக்கப்பட்ட தேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்டெடுக்கப் பட்டது. இந்த சரித்திர நிகழ்வுகளை புதிய தமிழகம் கட்சியின் தாய்க் கழகமான தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிகழ்த்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக