புதன், 28 டிசம்பர், 2016

தியாகி இமானுவேல்சேகரனார் பிறந்தநாளையொட்டி தடையை மீறி நிகழ்ச்சி நடத்திய புதிய தமிழகம் கட்சியினர் 39 பேர் கைது

தியாகி இமானுவேல்சேகரனார் பிறந்தநாளையொட்டி தடையை மீறி நிகழ்ச்சி நடத்திய புதிய தமிழகம் கட்சியினர் 39 பேர் கைது போலீசாருடன் தள்ளு, முள்ளு...திருச்சி
தியாகி இமானுவேல்சேகரனாரின் பிறந்தநாளையொட்டி தடையை மீறி நிகழ்ச்சி நடத்திய புதிய தமிழகம் கட்சியினர் 39 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிறந்தநாள் விழா நிகழ்ச்சி
தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் விழாவையொட்டி புதிய தமிழகம் கட்சி தெற்கு மாவட்டம் சார்பில் திருச்சி தில்லைநகரில் அவரது உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சி நடத்த போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
ஆனால் போலீசாரின் தடையை மீறி புதிய தமிழகம் தெற்கு மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில், இளைஞரணி அசோக், துணை செயலாளர்கள் பிரேம், ஆனந்த், கோபி, கொள்கை பரப்பு செயலாளர் வினித் மற்றும் நிர்வாகிகள் பலர் இமானுவேல் சேகரனாரின் உருவபடத்தை தில்லைநகர் பகுதிக்கு எடுத்து வந்து, மாலை அணிவிக்க முயன்றனர்.
39 பேர் கைது
இது பற்றி தகவல் அறிந்து அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்த போலீஸ் உதவி கமிஷனர் கபிலன் தலைமையிலான போலீசார், அவர்களை நிகழ்ச்சி நடத்த விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது புதிய தமிழகம் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பின்னர் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதில் மொத்தம் 39 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக