புதன், 28 டிசம்பர், 2016

மரியாதைக்குரிய மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ..அண்ணன் தமீமுன் அன்சாரி அவர்களுக்கு

மரியாதைக்குரிய மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ..அண்ணன் தமீமுன் அன்சாரி அவர்களுக்கு , திருவாரூர் சிவக்குமார் தேவேந்திரர் எழுதுவது ......
தஞ்சைக்கு நாளை உங்கள் அழைப்பை ஏற்று வரும் தொண்டர்கள் எண்ணிக்கை லட்சத்தை தாண்டலாம். அது உங்கள் பலம் அல்ல . முஸ்லிம் சமுகத்தின் பலவீனம் ... இந்துத்துவா , பாசிச சக்திகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் .. தமுமுக வின் அடித்தளத்தில் தான் இன்று ம .ம .க என்ற அரசியல் இயக்கம் .. எனவே கண்ணும் , இமையும் போல .. உ ங்களின் கடின உ ழைப்பை குறைத்து மதிப்பிடவில்லை ... சஹோதரர் பிஜே அவர்கள் பிரிந்ததபோது மிகவும் வருத்தப்பட்டோம் , அதன் பிறகு S .M .. பாக்கர் ... என்றாலும் தமிழக அரசியலில் ம .ம .க .. தடம் பதித்தது ... பேராசிரியர் ஜவகிருல்லா , ஹைதர் அலி போன்ற ஆற்றல் மிக்க தலைவர்கள் இருந்தும் ஏன் பிரிவினை ..?.... மீண்டும் கடந்த காலத்தை நோக்கி பயணமா ..?...அப்துல் சமது , அப்துல் லத்திப் போல ..... விட் டுக்கொடுப்பவர்கள் கெட்டுபோவதில்லை ...பிரச்சனைகளை பேசி தீர்க்கலாம் .. இது திராவிட இயக்கம் அல்ல ... ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல் எதிர்காலம் .... சென்னையில் பொதுக்குழுவை ஒத்தி வைத்ததை போல தஞ்சை பொதுக்குழுவையும் ஒத்தி வைத்து சமாதான முயற்சியில் ஈடுபடுங்கள் .... நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம் அனைத்து தரப்பினரும் ஏற்கும் முடிவு இறைவன் நாடினால் நிச்சயம் நடக்கும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக