புதன், 28 டிசம்பர், 2016

தேவேந்திரர்களின் பட்டியல் மாற்றம் ஏன் ..?..... இட ஒதுக்கீட்டு கொள்கை என்ன ..?....


இடஒதுக்கீடு... இந்த வார்த்தையை யார் எங்கு கேட்டாலும் அது என்னவோ SC/ST மக்களுக்கானது, அதை நீக்க வேண்டும்,தூக்கவேண்டும், ஒழிக்கவேண்டும் என்ற தவறான கண்ணோட்டம் சமூகத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது... எல்லாம் பார்ப்பினிய மனநிலைதான் .. இடஒதுக்கீட்டு சலுகைகளை முழுமையாக அனுபவிப்பவர்கள் பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட வகுப்பினர்தான்.... ஆனால் 18%ல் 2%ம் கூட அனுபவிக்காத நாம் தாழ்த்தப்பட்ட சாதியாம் .. இந்த இந்துத்துவ மனநிலை மாற்றப்பட வேண்டும் ..தேவேந்திரர் சமுகம் மக்கள் தொகையின் அடிப்படையில் 10%ம் தனி இட ஒதுக்கீடு வேண்டும் , எந்த பட்டியலும் எமக்கு தேவையில்லை ,
தனி {சிறப்பு } பட்டியல் உ ருவாக்கப்பட வேண்டும் .
SC/ST மட்டும்தான் இடஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனரா..?
மொத்தம் 100 இடங்களில்
BC-30
MBC-20
SC-18
ST-1
மீதி-31% பொது. தமிழகத்தில் 69% ம் பின்பற்றப்படுகிறது ..
ஆக,. பட்டியல் இன மக்களில் தேவேந்திர குல மக்களுக்கு கிடைப்பதோ வெறும் 2%ம் தான் , அதையும் போராடித்தான் பெறமுடிகிறது .. பின்னடைவு பணியிடங்களை நீதிமன்றம் சென்றுதான் பெறமுடிகிறது . தன்னை உ யர்ந்த சாதி என்பவன் மனநோயாளி என்று அண்ணல் அம்பேத்கார் அவர்கள் சொல்வார்கள் .. இந்துத்துவ படிநிலையில் இடஒதுக்கீட்டை அனுபவிக்கும் பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட சாதியினர் எப்படி தங்களை உ யர்ந்த சாதியாக காட்டிக்கொள்கின்றனர் ..... அதுதான் இந்துத்துவ , பார்பன மனநிலைதான் , பட்டியல் இன மக்களுக்கு எதிரான மனநிலை என்பது , இன்று அனைத்து சாதியினரும் கடைபிடிக்கின்றனர் .. தேவேந்திர குல மக்கள் இந்த பட்டியல் இனத்தில் இருப்பதால் அவர்களது வரலாறு மறைக்கப்படுகிறது .. அரசியலில் உ ரிய பிரதிநிதித்துவம் பெற முடியவில்லை ., சமுக அந்தஸ்து கிடைப்பதில்லை.. எனவேதான் தேவேந்திர குல மக்களின் மனநிலையை அறிந்த புதிய தமிழகம் கட்சி நிறுவனர் ..
டாக்டர் .க . கிருஷ்ணசாமி . M .D .M .L .A ., அவர்கள் , தேவேந்திரர் சமுக அடையாள மீட்பு மற்றும் பொதுக்கூட்டத்தில் " தேவேந்திரர் பட்டியல் மாற்றம் " குறித்து தனி கவனம் செலுத்துகின்றார்கள் ... எனவே தேவேந்திர குல உ றவுகள் மாவட்டம் தோறும் நடைபெறும் தேவேந்திரர் சமுக அடையாள மீட்பு மற்றும் பொதுக்கூட்டத்தில் பெரும்திரளாக கலந்து கொண்டு வெற்றியடைய செய்ய வேண்டுகிறேன் ...
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக