புதன், 28 டிசம்பர், 2016

தேவேந்திர குலத்தின் மாவீரன் ... தளபதி வெண்ணிக் காலாடி ..!!!..

தேவேந்திர குலத்தின் மாவீரன் ... தளபதி வெண்ணிக் காலாடி ..!!!....வெண்ணிக் காலாடி அல்லது பெரிய காலாடி என்பவர் பூலித்தேவன் படையின் முக்கியத் தளபதியாக இருந்தவர். வெண்ணிக்காலாடி தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.பூலித்தேவரை நேரில் சென்று எதிர்க்க முடியாது என்று எண்ணினார் கான்சாகிப் (மருத நாயகம்). அதனால் இரவில் பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிடலாம் என்று தீர்மானித்து கான்சாகிப்பின் படைகள், காட்டில் முகாமிட்டிருந்த செய்தியை அறிந்த பெரிய காலாடி சில வீரர்களுடன் சென்று அம்முகாமைத் தாக்கினார். அப்போது எதிரி வீரன் ஒருவன் மறைந்திருந்து தாக்கியதால் காயமுற்றார் என்றாலும் வயிறு கிழிக்கப்பட்டு, குடல் வெளியே வந்த நிலையிலும், தான் தலைப்பாகையாகக் கட்டியிருந்த துண்டை எடுத்து, வெளியே வந்த தன் குடலை மீண்டும் வயிற்றுக்குள் தள்ளி, தன் வயிற்றைத் துண்டால் கட்டிக் கொண்டு எதிரிகளுடன் சண்டையிட்டு அவர்களைத் தோற்கடித்தார். எதிரிகளைத் தோற்கடித்ததைப் பூலித்தேவரிடம் கூறிவிட்டு வீர மரணம் அடைந்தார். தளபதி பெரிய காலாடி எதிரிகளுடன் போரிட்டு வீர மரணம் அடைந்த இடத்தில், பிற்காலத்தில் பூலித்தேவர், வீரக்கல் (நடுகல்) ஒன்றை நட்டு வைத்தார். அந்த இடம் இன்றும் இப்பகுதி மக்களால் ‘காலாடி மேடு’ என்று அழைக்கப்படுகிறது. பூலித் தேவன் சிந்தும்,வெண்ணிக்காலாடியின் புகழை பாடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக