செவ்வாய், 20 டிசம்பர், 2016

தேவர் ஜெயந்தி ...!!!.. யாருக்கும் வெட்கமில்லை ...!!!.. நாங்க எல்லாம் ஒரே கூட்டணிதான் ...!!!.....

..... தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், காமராஜ், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, வைத்தியலிங்கம், சுந்தர்ராஜ், ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சித் தலைவர் நந்தகுமார் மற்றும் அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்
காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் திருநாவுகரசர், ம.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் வைகோ, அக்கட்சியின் நிர்வாகிகள் பொடா.அழகுசுந்தரம், புதூர் பூமிநாதன், கராத்தே பழனிச்சாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தி.மு.க. சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., சுப.தங்கவேலன், முன்னாள் சபாநாயகர்கள் சேடப்பட்டி முத்தையா, ஆவுடையப்பன் உள்ளிட்ட தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மாநிலத் தலைவர் கோ.க.மணி ஆகியோர் பா.ம.க. சார்பில் அஞ்சலி செலுத்தினர். த.மா.கா. சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராம்பிரபு, ராஜேந்திரன், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட த.மா.க.வினர் கலந்து கொண்டனர். பா.ஜ.க. சார்பி. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்திய கம்யுனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் தா . பாண்டியன் அஞ்சலி செலுத்தினார் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக