செவ்வாய், 20 டிசம்பர், 2016

சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர் க.கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதம்

சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர் க.கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதம் ....இடம்: வள்ளுவர் கோட்டம், 
அதிமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தேவேந்திர குல வேளாளர் . மற்றும் சக ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களும் , படுகொலைகளும் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது ... தென் மாவட்டங்களில் மட்டும் 120க்கும் மேற்பட்ட படுகொலைகள் , இதற்க்கு ஆளும் அரசும் , ஆதிக்க சக்திகளும் கைகோர்த்து செயல்படுகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது .... மாண்புமிகு டாக்டர் அய்யா அவர்கள் குறிப்பிடுவது போல் எப்போதெல்லாம் அதிமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தேவேந்திர குல மற்றும் சக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிக்கின்றன .... கோகுல்ராஜ் , மற்றும் DSP விஷ்ணுபிரியா அவர்களின் வழக்குகளை இந்த அரசு கையாளுகின்ற நிலையை போதும் .. இந்த அரசு யாருக்கான அரசு என்று ..?..... செப் ..11. அய்யா இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாள் நிகழ்வை அமைதியாக நடத்தி முடித்ததற்காக புதிய தமிழகம் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கதிரேசன் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார் .இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக நெல்லையில் நவ ..7ல் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில் தொடங்கும் சமுக உ ரிமை பேரணி , மற்றும் பொதுக்கூட்டங்களை மக்கள் இயக்கமாக நடத்துவோம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக