ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

பசுபதிபாண்டியன் கொலை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

நெல்லை, : பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி 8 மாதங்களாகியும் கைது செய்யப்படாததை கண்டித்து தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பினர்  நெல்லையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் மாநில தலைவர் ஆத்தூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில பொதுசெயலாளர் ராஜதேவேந்திரன், பொரு ளாளர் பொன்.ராஜேந்திரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் யாக்கோபு வரவேற்றார். மாநகர செயலாளர் வண்ணை முருகன், மாநகர பொருளாளர் முத்துக்குமார், மள்ளர் சங்க ஜெயப்பிரகாஷ், பகுஜன் சமாஜ் மாநில செயற்குழு உறுப்பினர் தேவேந்திரன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் கார்த்திக், புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் செல்லப்பா, எஸ்சிஎஸ்டி நலச்சங்க கோபாலன், பாஜ முருகதாஸ், தியாகி இம்மானுவேல் பேரவை தேவதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கூட்டமைப்பின் மாநில தலைவர் ஆத்தூர் ராஜேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் 7 மாதங்களாகியும் முக்கிய குற்ற வாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. தேடப் பட்டு வரும் அவருக்கு காவல்துறையும் உடந்தையாக இருக்கிறதோ என சந்தேகம் உள்ளது. திருச்செந்தூர், குரும்பூர் உள் ளிட்ட சில பகுதிகளில் மறைமுகமாக அவர் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அவரை கைது செய்யக் கோரி இனி மாவட்டங்கள் தோறும் நாங்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளோம்.
நெல்லையில் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் வீட்டுமனைகளை உரு வாக்கி விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இப்படியே சென்றால் தமிழகத்தில் உணவு பஞ்சம் ஏற்படும். இவ்வாறு அவர்  கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக