ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 30 அக்டோபர், 2014

நெல்லையில் மள்ளர் நாடு அமைப்பினர் ஒருவர் படுகொலை .

28-10-14 அன்று மள்ளர் நாடு இயக்க நெல்லை மாவட்ட செயலார் தோழர் மகேஷ் மள்ளர் மற்றும் மாரிமுத்து தோழர்களின் சாதிய படுகொலை கண்டித்து மள்ளர் நாடு மற்றும் புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்,தேவேந்திர குல கூட்டமைப்பு மற்றும் நெல்லை மாவட்ட தேவேந்திர குல மக்கள் சார்பாக முன்மொழிந்துள்ள கோரிக்கையாக.படுகொலைக்கு காரணமான நபர்களை கைது செய்யாமல் தோழர்களின் பிரேதம் பெற்றுக்கொள்ள பட மாட்டது என்ற கோரிக்கையை முன்வைத்து நாளை இரண்டாம் நாள் அமைதி போராட்டம் தொடர்கின்றது .நெல்லை மாவட்ட சொந்தங்களே நாளை காலை 10 மணிக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு வாருங்கள். இன்று போல் மானுட மானம் காத்த நாம் தோழர்களின் இழப்புகளுக்கு. நமது உன்னத அமைதியின் உணர்வை வித்தாக்குவோம்.
"சாதி" தனது இருபுற கணக்குகளை, ஏன் பல நூற்றாண்டுகள் சென்ற பின்பும். தனக்கான இழப்புகளை விளிம்புநிலையில் ஆரம்பித்து, விளிம்புநிலையிலே முடிகின்றது. இது வருத்தமோ, ஓலமோ அல்ல மாண்டது போர் களம் என்று தெரிந்த பிறகு இங்கே வீரத்தோடு கூடிய அழுகைகளுக்கு வணக்கங்களுக்கு இங்கே பஞ்சம் இல்லை. தொடர்ந்து பயணிப்போம் வீழ்வது உருவங்கள் மட்டுமே உணர்வுகள் என்றுமே பயன்பட்டுகொண்டே இருக்கும். ஒரு நாள் சாதிய போர் முடியும் அன்று ஆனந்த கண்ணீர் இடுவோம்.
புகைப்படம்: பிரேத அரை பக்கம் திரண்ட மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி, ஹைகிரவுண்டு அரசு மருத்தவமனை சாலையில் திரண்ட மற்றொரு பகுதி மக்கள் கூட்டம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக