ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 27 டிசம்பர், 2011

இராமய்யாவின் குடிசை -கீழ்வெண்மணி சம்பவ ஆவணப் படம் -வீடியோ


கீழ்வெண்மணி 44 உயிர்களும் அரைப்படி நெல்லும்




36 வருஷங்களாகியும் உயிர் பொசுங்கிய நெடியடிக்கிறது இந்தக் கிராமத்து மண்ணில். 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் தாலுகாவில் கீழ்வெண்மணிக்குள் நுழைகிற இடத்தில் வெண்மணிச் சம்பவத்தை நினைவூட்டுகிற சிவப்பு வளைவு. உள்ளே போனால் காலனி தெரு. அதில் ரத்தசாட்சி போல சிவப்புமயமான கட்டிடம். 

1967ல் 44 உயிர்கள் விறகுகள் மாதிரி எரிக்கப்பட்ட இடம் இதுதான். ஜாலியன் வாலா பாக்கில் உள்ள நினைவுச் சின்னம் மாதிரியே வடிவமைத்திருக்கிறார்கள் இதையும். ஜோதிபாசு அடிக்கல் நாட்டி 1970ல் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கட்டத்தைத் திறந்து வைத்தவர் கம்யூனிஸ்ட் தலைவரான பி. ராமமூர்த்தி. நினைவுத்தூண்களில் வரிசையாகப் பதிந்திருக்கின்றன சாகடிக்கப்பட்ட அந்த 44 பேர்களின் பெயர்கள். 

தஞ்சை மண்ணில் 'பண்ணையாள் முறை' ஆழமாக வேரூன்றியிருந்த காலம். விவசாய வேலைகளில் சற்று சுணக்கம் காட்டினாலும் உடம்பில் சவுக்கடி விழுந்து வலியுடன் ரத்தம் கசியும். அதோடு மாட்டுச் சாணியைப் பால் மாதிரி கரைத்து அந்தத் தொழிலாளர்களைக் குடிக்கச் சொல்வார்கள். கசங்கிய முகத்துடன் வேறுவழியில்லாமல் குடிப்பார்கள் விவசாயத் தொழிலாளிகள். எதிர்த்துச் சிறுவார்த்தை கூடப் பேச முடியாது. 

அவர்களிடமும் வந்தது விழிப்பு. "நியாயமான கூலியைக் கேள். குருடனாக இருக்காதே... கண்ணைத் திற ஊமையாக இருக்காதே - பேசு..." என்று நரம்புகளை அதிரவைக்கிறபடி பிரச்சாரம் பண்ணினார்கள் கம்யூனிஸ்ட் தலைவர்களான மணியம்மையும் சீனிவாசராவும். சங்க உணர்வை உருவாக்கினார்கள். பிரச்சார பொறி பலருடைய மனசில் விழுந்து கணகணத்தது. ஒன்று சேர்ந்தார்கள். உருவானது விவசாயிகள் சங்கம். எழுந்தது தட்டிக் கேட்கிற குரல். 

அந்த ஒற்றுமையே பெரும் சலசலப்பை உருவாக்கிவிட்டது. 'தஞ்சை மாவட்ட விவசாயிகளை கம்யூனிஸ்ட் என்கிற பேய் பிடித்திருக்கிறது' என்று கண்டுபிடித்துச் சொன்னார் ராஜாஜி. நிலச்சுவான்தார்களும் கூடினார்கள். நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். மஞ்சள் கொடியை ஏற்றி செங்கொடியை இறக்கச் சொன்னார்கள். அதை மறுத்து அரைலிட்டர் நெல்லைக் கூட்டி கூலியாகக் கேட்டார்கள் விவசாயிகள். 

ஒப்புக் கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடந்தது. தோல்விதான். அதற்குள் கீழ்வெண்மணியை சேர்ந்த இருவரை நிலச்சுவான்தார்கள் கட்டி வைத்து அடித்ததும் கலவரப் பொறி. 

1967 டிசம்பர் 25. கிறிஸ்துமஸ் தினம். நிலச்சுவான்தார்களின் அடியாட்கள் நாட்டுத் துப்பாக்கிகளுடன் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயிகள் தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கினார்கள். கிராமமே ரணகளமானது. துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ஒரே பீதி. வேட்டையின் தீவிரம் தாளாமல் பலர் ஓடியிருக்கிறார்கள். ஒரு தெருவின் மூலையில் ராமையனின் குடிசை. மேலே கூரை. அதற்குள் ஓடி ஒளிந்திருக்கிறார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள சின்ன அறையில் அடைசலாக 48 பேர். 

கொஞ்ச நேரத்தில் கதவடைத்து தீவைத்து விட்டார்கள். வெப்பம் தகித்து ஒரே கூச்சல். நெருப்பை மீறி ஆறுபேர் வெளியே ஓடி வந்திருக்கிறார்கள். வந்ததில் இரண்டு பேரையும், ஒரு தாய் தூக்கி வெளியே வீசிய குழந்தையையும் திருப்பி குடிசைத்தீயில் வீசியிருக்கிறது வெளியே இருந்த கும்பல். தீ வேகத்துடன் எரிய அந்தப் பிழம்பில் கசிந்தது உயிர் கருகிய நாற்றம். 

நடு இரவில் போலீஸ் வந்து கனன்று கொண்டிருந்த கனலை விலக்கிப் பார்த்தால், உள்ளே கரிக்கட்டைகளாக எரிந்து அவிந்து கிடந்தன 44 உயிர்கள். அதில் பெண்கள் 14 பேர். குழந்தைகள் 22 பேர். போஸ்ட் மார்ட்டத்திற்காக நாகப்பட்டினத்திலிருந்து வந்த டாக்டர் கைவிரித்தார். அடையாளம் சொல்ல முடியாமல் 'விடிந்ததும் செய்தி பரவி தமிழகமே அதிர்ந்தது'. 'நாட்டுக்கே அவமானம்' என்று கட்டம் கட்டி வெளியிட்டன டெல்லிப் பத்திரிகைகள். 

106 பேர் கைதானார்கள். திமுக ஆட்சி நடந்த அந்த நேரத்தில் கைதானவர்களில் பலர் காங்கிரஸ்காரர்கள். தப்பிப் பிழைத்தவர்கள் சாட்சியம் சொன்னார்கள். 'இது மக்களுக்குள்ளேயே நடந்த மோதல்' என்று சொன்னது போலீஸ். 

'அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல...' என்று 1973 ஏப்ரல் 6ம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டதும், விடுதலையானார்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள். சட்டரீதியாக அடங்கிப் போனது கீழ்வெண்மணிப் புகை. 

கீழ்வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி - புதிய தமிழகம்



 
கீழ்வெண்மணியில் எரித்துக் கொல்லப்பட்ட 43 ஒடுக்கப்பட்ட வேளாண் குடிமக்களுக்கு வரும் 25ஆம் தேதி புதிய தமிழகம் சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என்று அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :

இந்தியா சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகியும் சமுதாய பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்படவில்லை. பிறந்த நாட்டில் மூன்று சென்ட் வீட்டு மனையோ, ஒரு ஏக்கர் நிலமோ கூட சொந்தமாக இல்லாமல் இன்னமும் வறிய நிலையில் வாழ்வோர் எண்ணற்றோர்.

இந்த நிலை போக்க எத்தனையோ போராட்டங்கள் நடந்திருப்பினும், 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி தஞ்சை மண்ணாம் - கீழ்வெணிமணியில் நடந்த துயரச் சம்பவத்தை யாராலும் மறக்க இயலாது.

உழைத்த உழைப்பிற்காக அரைப்படி நெல் கூடுதலாக கேட்டதற்காக முதியோர், பெண்கள், குழந்தைகள் என ஒடுக்கப்பட்ட மக்கள் 43 பேர் ஒரே குடிசையில் அடைத்து கொளுத்தப்பட்ட துயரச் சம்பவம் நடந்த நாள் அது. தியாகம் புரிந்தவர்கள் விவசாயத் தொழிலாளர்கள் எனினும் அவர்கள் அனைவரும் வீரம் செறிந்த வேளாண் குடிமக்கள் என்ற சமூக அடையாளம் அறவே மறைக்கப்பட்டுவிட்டது.

அம்மக்களின் அளிப்பரிய தியாகத்தை போற்றும் வகையில் புதிய தமிழக கட்சியின் சார்பாக எனது தலைமையில் கீழ்வெண்மணி கிராமத்தில் அவர்கள் நினைவிடத்தில் டிசம்பர் 25ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் அஞ்சலி நடைபெறும்.

அதேபோல, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், புதிய தமிழகம் கட்சி மாவட்ட நிர்வாகிகள் சார்பாக நினைவஞ்சலி நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறேன் என்று கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கீழ்வெண்மணி

எம் உறவுகள் 44 பேர் கீழ்வெண்மணியில் கொல்லப்பட்டதற்கு முதற்காரணம் சாதி.....இரண்டாவது 

காரணம்தான் கொல்லப்பட்டவர்கள் ஏழை கூலித்தொழிலாளிகள்...என்பது

இந்த சாதியை தூக்கி பிடிக்கும் இந்து மதத்தை தூக்கி பிடித்து கொண்டு வரும்....ஒவ்வொருவரிடமும் 

கேளுங்கள்.....நாங்கள் என்ன மசிறுக்கு இந்து மதத்தை மன்னிக்க வேண்டும்...என்று....கொடியங்குளம், 

மேலவளவு....இன்னும் எத்தனை..எத்தனை.....சமீபத்தில் பரமக்குடி...... இத்தனை உயிர்களை 

பலிகொடுத்த இந்த வெங்காய மதத்தை சீர்திருத்த முயற்சி செய்யணுமாம்....பரதேசிங்க....

பார்ப்பனீய இந்து மதத்தை வேரோடு பிடுங்கி எறிவதுதான் எம் தலையாய பணியாக இருக்க 

முடியும்....அதை நாங்களும்,எம் பிள்ளைகளும் சேர்ந்து செய்து முடிப்போம்..

தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்: கிருஷ்ணசாமி





முல்லைப்பெரியாறு பிரச்சினையில் மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் 9 ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி,

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கேரள தமிழக மக்களிடையே மிகப்பெரிய கசப்புணர்வு வளர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் நிலைகளும் உருவாகி உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட மத்திய அரசு இந்த பிரச்சினையில் தீர்வுகாண்பதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காது கண்டிக்கத்தக்கது. இலங்கை பிரச்சனையில் கண்டுகொள்ளாததுபோலவே முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையிலும் மத்திய அரசின் அணுகுமுறை உள்ளது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் முல்லைப்பெரியாறு பிரச்சினை மட்டும் அல்ல, கன்னியாகுமரி மாவட்டத்தில் மெய்யாறு, வடகரை பகுதிகளுக்கு கேரளாவில் இருந்துவந்துகொண்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யமுடியாத நிலை உள்ளது. ஆந்திரா எல்லையில் பாலாற்றின் குறுக்கே 300 க்கும் மேற்பட்ட தடுப்பு அணைகள் கட்டப்பட்டதால் பாலாறு வரண்டு, தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாழடையும் நிலையில் உள்ளது. இப்படிப்பட்ட எந்த பிரச்சினைக்கும் மத்திய அரசு தீர்வுகாண்பதாக தெரியவில்லை.

இதேபோல முல்லைப்பெரியாறு பிரச்சினையில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பையும் கேரள அரசு மதிக்கவில்லை. மத்திய அரசு தொடர்ந்து மெத்தன போக்கை கடைபிடித்து வருவது கண்டிக்கத்தக்கது.
எனவே கேரள தமிழக மாநிலங்களின் முதல் மந்திரிகளையும் பிரதமர் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து முல்லைப்பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும்.

இரண்டு மாநில மக்களும் மோதிக்கொள்ளும் சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளிவைக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஜனவரி மாதம் 9 ந் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த மனு விபரம்








முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைக்கு மத்திய அரசே முழு பொறுப்பு: டாக்டர் கிருஷ்ணசாமி



முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு மத்திய அரசே பொறுப்பு என்று புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தேனியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பேசினார்.


முல்லைப் பெரியாறு அணையை மீட்டெடுக்க புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தேனி பகவதியம்மன் கோவில் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: தண்ணீர், காற்று ஆகியவை அனைவருக்கும் சொந்தமானது. இதனை யாரும் தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியாது. முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக மக்கள் அரசியல் கட்சிகள் பாகுபாடு இன்றி பொது மக்களாக நாள்தோறும் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

136
அடியில் இருந்து 142 அடியாக முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு மத்திய அரசே முழு பொறுப்பு. இரு மாநிலங்களிடையே பிரச்சினை ஏற்படும் போது பிரதமர் இரு மாநில முதல் அமைச்சர்களையும் அழைத்து பேசி சுமுகமாக முடிவு எடுக்க வேண்டும். மத்திய அரசு இந்த விஷயத்தில் தவறிவிட்டதாக தெரிகிறது.

கேரளாவில் வாழும் தமிழர்கள் அகதிகளாக வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கேரள அரசு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டால் விளைவு விபரீதமாக இருக்கலாம். இவ்வாறு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பேசினார்.