ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 4 ஜனவரி, 2012

மள்ளர் குலத்தில் பிறந்த பொதுவுடைமைப் போராளி சித்தமல்லி கோ .முருகையன் அவர்களின் ...33 ஆம் ஆண்டு நினைவேந்தல் வீரவணக்கம் ...............மள்ளர் மீட்புக் களம் .சோழமண்டலம்..

பரமக்குடி சம்பவம்-அரசபயங்கரவாதம்

பரமக்குடி சம்பவமானது போலீஸின் திட்டமிட்டசெயல்



என்பதற்கு உதாரணம்.டி.அய்.ஜி.சந்தீப் மிட்டல் 10.9.11ல்


இரவு 10மணிக்கு கடையை திறக்கச் சொல்லி கிரிகெட்


கெல்மட் வாங்கியுள்ளார்.டி.அய.ஜி பொருப்பில் உள்ளவர்


முனனெச்சரிக்கையுடன் கலவரத்தை எதிர் பார்த்திருக்கிறார்.






சென்னையில் துனை ஆனையர் பொருப்பில்உள்ள செந்


தில் வேலன் அய்.பி.எஸ. பரமக்குடிக்கு அழைக்கப்பட்டு


இருக்கிறார்.இந்த செந்தில் வேலன் போகுமிடமெல்லாம்


உடனடி துப்பாக்கி சூடுதான்.






இது மாதிரித்தான் திட்டமிட்டு மதுரை சிந்தாமணியிலும்


,இளையான்குடியிலும்ப்பாக்கி சூடு நடந்துள்ளது.






எந்தவித நடைமுறையையும் பின்பற்றாமல் ஏழு பேரை


சுட்டுக்கொன்று 100க்கு மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்ப்


படுத்திய போலீசுக்கு சாதாரண சிறு காயங்கள்தான்.


சந்தீபமிட்டலாம் சும்மா ஒப்புக்கு ஆஸ்பத்தியில் படுத்தவர்






இண்டர்போல் போலீசுக்கு இணையானது தமிழக போலீசு


என்று சொல்பவர்களே அது இந்த சாதுர்யம்தான். இப்படி


தமிழக போலீசு மாதிரிதான் இந்தியாவிலுள்ள எல்லா


போலீசும் தலித்துகள்,பழங்குடியினர்.இனவிடுதலை


போராளிகள் மற்றும் அப்பாவிகளையும் ஒதுங்கிச்


செல்லும் நடுத்தர வர்க்கத்தையும் இப்படித்தான் ஒடுக்


கிறது..நாட்டைகாப்பதாக சொல்லிக்கொண்டு


முதலாளிகளை காக்கும் இராணுவமும் இப்படித்தான்






போலீசும் மாவட்ட நிர்வாகமும் ஆதிக்கசாதியைச்


சேர்ந்த ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து


கிராம பகுதிகளில் உள்ள தலித் சமுக மக்களை


வேட்டையாடுகின்றனர்.






ஏழு பேரை கொன்றதோடு வெறி அடங்காமல் 144 தடை


உத்தரவு போட்டு ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களை


கைது செய்ய வேண்டும் என்று இலக்கு போட்டு அடுத்த


வருடம் இம்மானுவேல் விழாவுக்கு யாரும் வரவிடக்கூடாது


என்று நீண்ட கணக்கு போட்டு கிராமம் கிராமாக


வீடு வீடாக போலீஸ் அலைகிறது






இதனால் கிராமங்களில் ஆண்கள் யாருமே இல்லை.


போலீஸீன் ரத்தவெறிக்கு பயந்து ஓடி ஒளிந்துள்ளனர்


ஓட்டுகடசிகளின் தலித்தலைவர்களோ அடக்கி வாசிக்


கின்றனர்.ரெண்டு மூணு சீட்டுக்காக.






தன்னை பாப்பாத்தி என்று அறிமுகம் செய்து கொண்ட“ஜெ”


ஆட்சிகட்டிலில் மூன்றுமுறை அமர்ந்திருந்த காலங்களில்


போலீசின் அடவாடித்தனமும் அத்துமீறலும் கணக்கில்


அடங்காதவை..இந்த பாப்பாத்திக்கு ஆட்சிகட்டிலில்


அமர்வதற்கு பெரும்பாண்மையாக ஓட்டு போட்டவர்கள்


இந்த தலித்மக்கள்தான்.எம்.ஜியார் என்ற பித்தம் பெரும்


பாண்மை தலித் மக்களுக்கு இன்னமும் கலையவில்லை.






தலித் அமைச்சர் இருந்த விமானத்தில் ஏற மறுத்தவர்தான்


சாதி வெறிபிடித்த இந்த ரங்கநாயகி.இவர் ஆட்சிக்கு வரும்


போதெல்லாம் சாதிவெறி ஆதிக்க போலீசும் ஆட்டம் போடும்






இப்படி ஆட்டம் போட்ட,போடும் போலீசை தண்டிக்கவோ,


அடக்கவோ எந்தவொரு கட்சிக்கும் ஆடசிக்கும் நீதீ


மன்றதுக்குக்கூட துப்புமும்இல்லை துரவுமில்லை


மனமுமில்லை தைரியமும் இல்லை.ஒவ்வொரு


தடவை வரும் ஆளும் கட்சியெல்லாம்போலீசுக்கு


சலுகைகள் செய்வதிலும் அதிகாரம் கொடுப்பதிலும்


போட்டிபோட்டு வாரி வழங்கியுள்ளன.






இதனால் இந்த போலீசு, அவர்களே சொல்லக்ககூடிய


சட்டத்துக்கும் ஞாயத்துக்கும் கட்டுப்படாமல் கொழுப்பு


அதிகமாகி திமிறெடுத்து அலைகிறது.



பரமக்குடியில் 7 பேர் படுகொலை - சாதிவெறிப் பாசிசத்தை எதிர்ப்போம்!







பரமக்குடியில் செப்டம்பர் 11ல் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ஜான்பாண்டியனை கைது செய்ததைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மீது, தமிழக காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி, துப்பாக்கி சூடு நடத்தி 6 பேரைக் கொன்று தமது உயர்சாதி வெறியை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது தமிழக அரசு. மதுரையிலும் நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்து மருத்துவ மனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளனர். தேடுதல் வேட்டை எனும் பேரில் தாழ்த்தப்பட்ட மக்களின் பெயர் பட்டியலை வைத்துக்கொண்டு, கிராமம் கிராமமாக காவல் துறையினர் மிரட்டி வருகின்றனர். போலீசுக்குப் பயந்து ஒழிந்து கொண்ட இருவர் பாம்புகடித்தும், ஒருவர் தவறி விழுந்தும் மாண்டுவிட்டனர். 144 தடை உத்தரவு தொடர்கிறது. இவ்வாறு இம்மாவட்டம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஜெயலலிதாவின் காவல்துறை ஒரு அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துள்ளது.





மேலும் இச்சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்குமுன் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளுக்கு வருவோரை அச்சுறுத்தும் விதமாக முதுகுளத்தூர் வட்டார பள்ளப்பச்சேரியைச் சேர்ந்த மாணவன் பழனிக்குமாரை உயர்சாதி ஆதிக்க வெறியர்கள் படுகொலை செய்தனர். மேற்கண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தமிழகக் காவல்துறையின் அரசுபயங்கரவாதமும், உயர்சாதி ஆதிக்க வெறியர்களின் தாக்குதல்களும் சாதிவெறிப் பாசிச நடவடிக்கைகளேயாகும்.





சாதிய பூசல்களுக்கும் மோதல்களுக்கும் அடிப்படைக்காரணம்:





பரமக்குடியில் நடந்துவரும் சம்பவங்கள் ஒரு தனித்த போக்கு அல்ல. மாறாக தென் தமிழகத்தின் பலபகுதிகளில் தேவர்சாதி மற்றும் உயர்சாதியினருக்கும், தேவேந்திரகுல வேளாளர்களாகிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையிலான பூசல்கள் நீறுபூத்த நெருப்பாக எப்போது வேண்டுமானாலும் சாதிக்கலவரம் வெடிக்கும் என்ற நிலைமை கடந்த பலமாதங்களாக தொடர்கிறது.





தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான நிலப்பிரபுத்துவ பொருளாதார ஒடுக்குமுறைகளும், தீண்டாமைக் கொடுமைகளும், அதிகாரவர்க்க அரசு இயந்திரமே சாதிவெறியோடு செயல்படுவது போன்ற காரணங்களே சாதிக் கலவரங்களுக்கு அடிப்படையாக உள்ளன. உள்ளாட்சியிலும் கூட பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள் பொறுப்பு எடுத்துக்கொள்ள உயர்சாதியைச் சார்ந்த ஆதிக்க சக்திகள் அனுமதிக்க மறுக்கின்றனர். இவ்வாறு தாழ்த்தப்பட்ட மக்களின் பொது உரிமை மறுப்பு, மத உரிமை மறுப்பு, தீண்டாமைக் கொடுமைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தல் போன்ற காரணங்களே சாதியப் பூசல்களுக்கும் மோதல்களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளன.





பார்ப்பனிய வெறிகொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணம், பள்ளப்பச்சேரியைச் சார்ந்த பழனிகுமார் என்ற மாணவன் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி இழிவாக சுவற்றில் எழுதியதே என்று கூறுகிறார். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவது மட்டுமல்ல நடந்து முடிந்த சம்பவங்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மீதே பழிபோடுகிறார். ஆனால் உண்மை வேறாகும்.





பள்ளப்பச்சேரியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் விருதுநகருக்கோ, கமுதிக்கோ செல்ல வேண்டுமானால் மண்டலமாணிக்கம் ஊர் வழியாகத்தான் போகவேண்டும் பள்ளப்பச் சேரியிலிருந்து மண்டலமாணிக்கத்திற்குள்ள 500 மீட்டர் தூரத்திற்கான பாதையை அமைக்க உயர்சாதி ஆதிக்க சக்திகள் கடந்த 30 ஆண்டுகளாக அனுமதி மறுக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளின் ஆட்சி மாறி மாறி வந்தபோதும் பள்ளப்பச்சேரி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் உயர்சாதி ஆதிக்கத்திற்கு துணைபோயினர். அதிகார வர்க்கத்திடமும், மாவட்ட ஆட்சியினரிடமும் மனுக்கொடுத்தும் அம்மக்களின் துயரம் நீக்கப்படவில்லை. அன்றாடம் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் உயர்சாதி ஆதிக்கத்தின் இழிவுக்குள்ளாக்கப்படாத நாட்களே இல்லை.





இத்தகைய நிலைமைகளில்தான் பழனிகுமார் தேவரைப் பற்றி தவறாக எழுதினான் என்று கொல்லப்படுகிறான். அவன் எழுதினானா என்பது நிரூபிக்கப்படவில்லை. அப்படியே அவன் எழுதியிருந்தாலும் அதற்காக கொலை செய்வது நியாயமானதுதானா? அதைத் தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் நியாயப்படுத்தலாமா? இது உயர்சாதி ஆதிக்க சக்திகளின் சாதிவெறிக்கு துணைபோவது அல்லாமல் வேறு என்ன? தங்கநாற்கர சாலை அமைத்து பன்னாட்டு கம்பெனிகளுக்கு சேவை செய்யும் ஆட்சியாளர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதை அமைத்துக் கொடுக்காதது ஒரு மாபெரும் குற்றமே. குற்றவாளிகளாக ஆட்சியாளர்கள் இருந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றவாளி என்பது ஒரு வன்கொடுமையேயாகும்.





தமிழக காவல்துறையின் சாதிவெறி





தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான உயர்சாதி ஆதிக்க சக்திகளின் ஒடுக்குமுறைக்கு தமிழக காவல்துறை தொடர்ந்து உதவிசெய்தே வந்துள்ளது. தற்போது தமிழக காவல்துறையே சாதிவெறிக்கு உள்ளாகி உள்ளது. தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் ஜான்பாண்டியனை, இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளில் பங்கேற்க அனுமதித்தால் அவர் பழனிகுமாருக்கு அஞ்சலி செலுத்த செல்வார். அவ்வாறு சென்றால் அது பெரும் கலவரமாக மாறும். எனவேதான் அவரைக் கைது செய்ய வேண்டிய சூழல் உருவானது என்று காவல்துறையின் கட்டுக்கதையை ஜெயலலிதா வழிமொழிகிறார்.





அப்படியே வன்முறை ஏற்பட்டால் அதற்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டுமே ஒழிய பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களின் தலைவர்களையும் கைது செய்வது எப்படி நியாயமாகும். எனவே வன்முறையைக் காரணம் காட்டி இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளில் கலந்து கொள்வதை தடை செய்வதற்கோ, பழனிகுமாரின் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொள்வதை தடுப்பதற்கோ எவருக்கும் அதிகாரம் கிடையாது. இதையே தேவர் பூஜையின் போது தாழ்த்தப்பட்ட மக்களின் வன்முறையில் ஈடுபடுவார்கள் எனக் காரணம்காட்டி ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்களுக்கு தடைவிதித்து அவர்களை காவல்துறை கைது செய்திருக்குமா.





ஜான்பாண்டியனின் கைதைக் கண்டித்து சுமார் 500 பேர்தான் மறியல் செய்ததாக காவல்துறையே கூறுகிறது. பல்லாயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தும் வெறும் 500 பேரைக் கலைப்பதற்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதேன்? துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன் இரப்பர் புல்லட்டுகளை பயன்படுத்துவது, வானை நோக்கி சுட்டு மக்களை எச்சரிப்பது அதற்கும் கலையவில்லை எனில் முட்டிக்கும் கீழே சுடவேண்டும் என்ற விதிமுறைகளை காவல்துறை கடைபிடிக்காதது ஏன்? எடுத்த உடனேயே தலையைக் குறிவைத்து தாழ்த்தப்பட்ட மக்களை காக்கை குருவிப்போல் சுட்டுத்தள்ளியது காவல்துறையின் உயர்சாதி வெறியைத்தானே நிரூபித்துள்ளது.





மேலும் சென்னை மாநகரத்திலும், தமிழக அரசின் முக்கிய பதவிகளிலும் முக்குலத்தோர் சமூகத்தை சார்ந்த காவல்துறை அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றனர் என்பதே உண்மை. பிற உயர்சாதி அதிகாரிகளும் கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இவர்களுடன் கூட்டு சேர்ந்து கொள்கிறார்கள் என்பதும் உண்மை. அத்துடன் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திலும் 75 சதவீதம் பேர் முக்குலத்தோர் இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் மறுக்கமுடியாது. இவ்வாறு தமிழகக் காவல்துறை மெல்ல, மெல்ல உயர்சாதி ஆதிக்க சக்திகளாலேயே தலைமை தாங்கப்பட்டு சாதிவெறிக்கு ஆளாக்கப்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடுதான் பரமக்குடி சம்பவம்.





உயர்சாதி ஆதிக்கத்திற்கு துணைபோகும் முதலாளித்துவ அரசியல்கட்சிகள்





உயர்சாதி ஆதிக்க சக்திகளோடு அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தங்களது தாக்குதல்களை நடத்துவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் துணைபோகின்றன. தமிழகத் தரகுமுதலாளித்துவ அரசியல் கட்சிகளான அதிமுகவும், திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு முக்குலத்தோர் சாதி வெறிக்கு சேவை செய்கின்றன. ஜெயலலிதா காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டையும், உயர்சாதி ஆதிக்க வெறியையும் சட்டசபையில் ஆதரித்துப் பேசுகிறார். கருணாநிதியோ காவல்துறைக்கு `துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாம்`, என ஆலோசனை வழங்குகிறார். உயர்சாதி ஆதிக்க சக்திகளையும், துப்பாக்கிச் சூட்டையும் கண்டிக்கவில்லை. கிராமப்புற பெரும்பான்மை மக்களாக உள்ள முக்குலத்தோரின் வாக்கு வங்கிக்காக மட்டுமல்ல. அக்கட்சிகளில் உள்ள கிராமப்புற நிலப்பிரபுத்துவ ஆதிக்க வர்க்கங்கள் கட்சி வித்தியாசம் பாராமல் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு கூட்டு சேர்ந்து கொள்ளுகிறது. அண்மையில் குஜராத் இந்து மதவெறி பாசிஸ்டான நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்திற்கு ஜெயலலிதா அதிமுக பிரதி நிதிகளை அனுப்பி வாழ்த்துச் சொல்லுகிறார். கருணாநிதியோ மோடியை ஆதரித்து அறிக்கை விடுகிறார். இவ்வாறு இவ்விருக் கட்சிகளும் இந்து மதவெறி பாசிசத்திற்கும், உயர் சாதி வெறிப் பாசிசத்திற்கும் சேவை செய்யும் பிற்போக்குக் கட்சிகளாக மாறி விட்டதன் விளைவுதான் தென் மாவட்ட சாதிக்கலவரங்கள்.





ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின்போதுதான் கள்ளர், மறவர், தேவர் என்ற சாதிகளை ஒன்றிணைத்து முக்குலத்தோர் எனப்பட்டம் சூட்டப்பட்டது. முத்துராமலிங்கத் தேவருக்கு அரசு செலவிலேயே சென்னையில் சிலைவைத்தனர். 1991லும், 2001லும் ஜெயலலிதாவின் ஆட்சியின்போது தேவர் இன மக்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டது. தேவர் சமூகத்தினர் ஆட்சி அதிகாரத்தில் பெருபங்கு வகித்தனர். மேலும் ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம், உயர்சாதி ஆதிக்க வெறியர்களும், அதிகார வர்க்கத்தில் உள்ள முக்குலத்தோரைச் சார்ந்த அதிகாரிகளும் உத்வேகம் அடைகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களை எவ்வித அச்சமுமின்றி நடத்துகின்றனர். இவ்வாட்சியை தங்களது ஆட்சியாகவே கருதுகின்றனர்.





தன்னை சமூக நீதிக் காவலன் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் நண்பன் என்றும், சமத்துவமே தமது மூச்சு என்று கூறிக்கொள்ளும் கருணாநிதி ஆட்சியின்போதுதான் முத்துராமலிங்கத் தேவரின் 100ஆம் ஆண்டு நினைவு நாள் அரசு விழாவாக நடத்தப்பட்டது. 3 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்போடு அரசு இயந்திரத்தை முழுவதுமாகப் பயன்படுத்தி படு விமரிசையாக இவ்விழா நடத்தப்பட்டது. தேவர் சாதி ஆதிக்க சக்திகளும், அரசும் கூட்டுசேர்ந்து நடத்தினர். ஜெயலலிதா அதற்கிணையாக மதுரையில் தேவருக்கு 100 அடி உயர சிலை வைக்கவும், ‘இரண்டாம் படைவீடு’ என்ற பேரில் தேவருக்குச் கோயில் கட்ட அடிக்கல் நாட்டியும், தன்பங்கிற்கு காணிக்கை செலுத்தினார்.





அதே நேரத்தில் அன்று பா.ம.கவில் இருந்த ஜான்பாண்டியன் அவர்கள், இம்மானுவேல் சேகரனுக்கு பரமக்குடியில் ஒரு சிலை வைக்க வேண்டும் என்று கோரி மறியல் செய்ததற்காக, துப்பாக்கி சூடு நடத்தி 4 தாழ்த்தப்பட்ட மக்களைக் கொன்றது, அன்றைய கருணாநிதி ஆட்சி. அத்துடன் 1999-ல் தாமிரபரணி ஆற்றங்கரையில் 17 தாழ்த்தப்பட்ட மக்களை கருணாநிதி ஆட்சி சுட்டுக் கொன்றதையும் மக்களால் மறக்க முடியாது.





பெயர் அடையாளமோ, சிலை மரியாதையோ, துளியளவு சமூக அங்கீகாரமோ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைத்துவிடக் கூடாது பண்ணையடிமை முறையிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்கள் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் உயர்சாதி ஆதிக்க சக்திகளோடு அதிகார வர்க்கத்தினரும், ஆட்சிக்கு வருகின்ற அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படுகின்றன. தேவர் பெயர் சூட்டுவதும், மணிமண்டபம் கட்டுவதும், பொதுப்பெயர் சூட்டி ஒரு குறிப்பிட்ட சாதியை வலிமைப் படுத்துவதில் அதிமுக, திமுகவின் போக்கிற்கு எதிராகவே தாழ்த்தப்பட்ட மக்கள் கிளர்ந்தெழுகின்றனர். தங்கள் தலைவன் இம்மானுவேல் சேகரனை கொலை செய்வதற்குக் காரணமான முத்துராமலிங்கத் தேவருக்கு இணையாக, தங்கள் தலைவனுக்கு சிலை வைக்கவும், விழாக் கொண்டாடவும் தொடங்கினர். கடந்த நான்கு ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்கள் எழுச்சியோடு விழாக் கொண்டாடுவதற்கு மேற்கண்ட நிலைமைகளே காரணமாகும். ஆனால் உயர்ந்தசாதி ஆதிக்க சக்திகளுக்கு இது கோபத்தை உருவாக்குகிறது. இனி தாழ்த்தப்பட்ட மக்கள் இப்படி விழா எடுப்பதையும், அவர்கள் அமைப்பாக அணிதிரள்வதையும் தடுக்கும் பொருட்டுத்தான் இன்று காவல்துறை ஊர் ஊராக தேடுதல் வேட்டை எனும் பேரில் தாழ்த்தப்பட்ட மக்களை நரவேட்டையாடுகிறது. ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களை பொய்வழக்கில் கைது செய்துவருகிறது. காவல் படையைக் குவித்து அம்மக்களின் மீது அரசு பயங்கரவாத அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகிறது.





அகில இந்திய தரகு முதலாளித்துவக் கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.கவும் துப்பாக்கிச் சூட்டை பெயரளவில் கண்டிக்கின்றன. உண்மையில் உயர் சாதி ஆதிக்கத்திற்கு துணை போகின்றன. தான் மட்டும்தான் திமுக, அதிமுகவிற்கு மாற்று என்று கூறிக்கொண்ட விஜயகாந்த் கட்சி இந்த காவல்துறை துப்பாக்கி சூட்டிற்கு ஆதரவாக விசாரணை கமிசனே தேவையில்லை என்று சட்டசபையிலேயே வாதிட்டது. நேற்று பெய்த மழையில் முளைத்து, திடீர் விபத்தால் எதிர்க்கட்சியாகிவிட்ட அந்தக் கட்சிக்கு எத்தனை சாதிவெறி பாருங்கள்?





எனவே, பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவும்; தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான பொய்வழக்குகளை திரும்பப் பெறுவதோடு காவல்படையினரையும் திரும்பப் பெறக் கோரியும்; காவல்துறையில் மலிந்துவரும் உயர்சாதிவெறியைப் போக்குவதற்கான தக்க நடவடிக்கைகள் கோரியும்; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5லட்சமும். காயமடைந்தவர்களுக்கு தலா 3 லட்சமும் நட்ட ஈடு கோரியும்; கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்யக் கோரியும்; துப்பாக்கிச் சூட்டிற்கும்; தடியடிக்கும் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது, தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் 1999, 1995 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்து கைது செய்ய வேண்டும் எனப் போராடுவது உடனடிப்பணியாக அமைந்துள்ளது.

அதேசமயம், சாதிய பூசல்களுக்கும் மோதல்களுக்கும் முடிவுகட்ட நிலப்பிரபுத்துவ பொருளாதார சுரண்டலுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் பொது உரிமை, வழிபாட்டு உரிமை போன்ற சம உரிமைக்காக அனைத்து சாதிகளிலுமுள்ள உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு போராடுவதற்கு தயாராக வேண்டும். உயர்சாதி ஆதிக்க வெறியர்களையும், உயர் சாதி வெறிப்பிடித்த அதிகார வர்க்கத்தினர் மற்றும் அரசியல் கட்சிகளை எதிர்த்து சாதிகளற்ற சமதர்ம சமுதாயம் படைப்பதற்கும், சாதிக்கலவரங்களை முற்றாக ஒழிப்பதற்கும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் ஓரணியில் அணிதிரள அறைகூவி அழைக்கின்றோம்.









* பழனிக்குமார் படுகொலையும், இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களும் சாதிவெறிப் பாசிசமே!





* பார்ப்பனிய ஜெயாவே! உயர்சாதி ஆதிக்கவெறிப்பிடித்த அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறைக்குப் பரிந்துபேசாதே!





* துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்!





* தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான பொய்வழக்குகளை திரும்பப்பெறு! தேடுதல்வேட்டையை நிறுத்து! காவல் படையைத் திரும்பப்பெறு!





* தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான நிலப்பிரபுத்துவ பொருளாதார ஒடுக்குமுறைகளும், தீண்டாமைக் கொடுமைகளுமே சாதிப் பூசல்களுக்கும், மோதல்களுக்கும் காரணம்!





* பார்ப்பனிய எதிர்ப்பு, சமூகநீதி, சமத்துவம் பேசிக்கொண்டே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிய ஒடுக்குமுறையில் ஈடுபடும் கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தை முறியடிப்போம்!

"முதுகுளத்தூர் கலவரம் (1957) முதல் பரமக்குடி படுகொலை (2011) வரை"

முதுகுளத்தூர் கலவரம் (1957) முதல் பரமக்குடி படுகொலை (2011) வரை" என்ற தலைப்பில் சென்னை லயோலா கல்லூரியில் 22.10.2011 அன்று SAVE TAMILS இயக்கம் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

ஆதிக்கசாதி திமிரையும் மதத்தையும் கைவிடமுடியாதவர்கள் திராவிடத்தை எதிர்க்கிறார்கள்







முல்லைப்பெரியாறு அணை காக்க மே 17 இயக்கம் மெரினாவில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பாரதிராசாவும் தங்கர் பச்சானும் திராவிட எதிர்ப்பரசியலைக் கிளப்பினார்கள்.


திராவிட இயக்கத்தின் கருத்தியல் அல்லது கொள்கை எந்த அளவில் தமிழனின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்ததென்றுபேச எவனும் முன்வருவானா? முடியாது. ஏனெனில் பெரியார் கேட்டதும் தனித்தமிழ்நாடுதான்.


கேரளா, கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்கள்தான் திராவிட நிலப்பரப்பு என்று அந்த இயக்கங்களே சொல்லாதபோது இந்த தேவர்சாதி திமிர்பிடித்த பாரதிராசாவும் படையாச்சி தங்கரும் எந்த கனவுலகத்திலிருந்துகொண்டு திராவிட எதிர்ப்பைக் கையிலெடுக்கிறார்கள்?


சாதி, மத எதிர்ப்பை கையிலெடுத்து போராடும் பெரியார் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளுக்கான எதிர்வினையா இது. அல்லது பரமக்குடியில் தேவர்சாதி ஆதிக்க அரசு நடத்திய படுகொலை ஆய்வறிக்கை நூல்வெளியீட்டு விழாவில் வைகோ பங்கேற்றதால் பாரதிராசாவுக்கு வந்த வெறுப்பா?


தமிழ்தேசியத்தின் கூறுகள் திராவிட அரசியலிலும் உண்டு. கூடுதலாக சாதி, மத எதிர்ப்பையும் கொண்டுள்ளது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் பெரியார் வழி வந்தவர்களா? பெரியாரின் கொள்கையை விட்டுவிட்டு பிழைப்புக்காக அரசியல் நடத்தும் இவர்களை முன்வைத்து திராவிட எதிர்ப்பை கையிலெடுப்பவர்கள், பெதிகவையும் மதிமுகவையும என்னவாகப் பார்க்கிறாரகள்?


அறிவுப்பூர்வமாக அல்லாமல் இப்படியான திராவிட எதிப்பை போகிறபோக்கில் உளறுபவர்களை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் மே 17 இயக்கத்தின் நிலைப்பாடு என்ன? ஏனெனில் பாரதிராசாவின் கருத்தை அப்படியேதான் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். ஆதிக்கசாதி திமிரையும் மதத்தையும் கைவிடமுடியாதவர்கள் திராவிடத்தை எதிர்க்கிறார்கள். மே 17 நேரடியாக அல்லாமல் இதுபோன்ற அரசியல் அரைவேக்காடுகளை வைத்து தந்தை பெரியார் வழி நின்று போராடும் தோழர்களை இழிவு செய்ய நினைக்கிறதா?

ஜாதி வெறியர்களின் கைகளிலோ விடுதலையின் குறியீடு…









இதைக் காண்போர் அனைவரும் கவனத்துடன் படிக்கவும்



ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால்,

மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரை யொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரி டம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தா ராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.

ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும்… ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும்.

அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்…

ஆதலால்….. மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.

ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்… இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்… இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது… இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!….

இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்… எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்.





மேலே நீங்கள் கண்டது வெள்ளையர்களுக்கு எதிராக மக்களை அழைக்கும் சின்ன மருதுவின் திருச்சி அறிக்கை. மக்கள் நலனும் வெள்ளையர்களை எதிர்த்து காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடுவதும் வேறுவேறல்ல என அறிவிக்கும் முதல் அறிக்கை. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக திப்பு முதல் துந்தாஜிவாக் வரை கட்டியமைத்த கூட்டமைப்பை கட்டிக்காக்க தீரத்துடன் போராடிய மருதிருவரின் குருபூஜைகள் இப்போது கொண்டாடப்படுகின்றன. அவர்களின் தன்னலமற்ற வீரத்திற்காகவோ நாட்டுப்பற்றுக்காகவோ ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவர்களின் தியாகத்திற்காகவோ அல்ல. ஜாதிக்காக. யார் கொண்டாடுவது? பார்ப்பனீயத்தின் அடிவருடிகளாக அடக்குமுறை சாதீயத்திமிரையே பெருமையாக முறுக்கித்திரியும் தேவர்சாதி குறும்பைகள். ஆண்டுதோறும் தேவர் குருபூஜை என்ற பெயரில் ஒரு ஜாதி வெறியனை கொண்டாடும் கொண்டாடும் கூட்டம், சின்ன மருது வெஞ்சினத்துடன் யாரை தன் அடிமயிருக்கு சமம் என கொதித்தெழுந்தானோ அவர்கள்; முதல் சுதந்திரப்போரை மக்கள் போராக‌ நடத்திக்காட்டிய அந்த நாயகர்களை சாதியப்பட்டியில் அடைத்து ஆதிக்கவெறியர்கள் விழா கொண்டாடுவதை, விடுதலை வேட்கை கொண்டவர்களால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?







தேவர் ஜெயந்தி வருகிறது என்றாலே ஒடுக்கப்பட்டவர்கள் பயத்துடன் நாட்களை கழிக்கவேண்டிய அளவுக்கு ஒவ்வொரு ஆண்டிலும் ஜாதீய அடக்குமுறை தலைவிரித்தாடுகிறது. மன்னர் பரம்பரை என்று கூறிக்கொண்டு ஒடுக்கப்பட்டவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமைகளை கட்டவிழ்த்துவிடுவதை எந்தக்கட்சி அரசானாலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வாடிக்கையாக இருக்கிறது இங்கு. மருதிருவரையும் சாதித்தூபம் போட பயன்படுத்துவதையும் இந்த நோக்கில்தான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது அரசு.







எந்தக்கட்சி அரசானாலும் இப்படி சாதி வெறியர்களுக்கு துணைபோவது ஓட்டுப்பொறுக்கிக் கட்சிகளின் பிழைப்புவாத அரசியல் என்று பொதுமைப்படுத்தி குறுக்கிவிடவும் முடியாது, அதையும் மீறி உணர்வு ரீதியான காரணமும் இருக்கிறது. அன்று தங்களின் எழுச்சி மிக்க வீரத்துடன் மக்களையும் இணைத்து வெள்ளையர்களை எதிர்த்து போராடிய போது “எதனால் அவர்கள் எங்கள் மீது சினங்கொண்டு போர் தொடுத்தார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை” என்று ஆங்கிலேயத் தளபதி ஜேம்ஸ் வெல்ஷ் கூறினான். அன்று நாட்டை ஆண்டுகொண்டிருந்த வெள்ளையர்களுக்கும் புறியவில்லை, இன்று ஆண்டுகொண்டிருக்கும் இவர்களுக்கும் புறியவில்லை அவர்கள் ஏன் போராடினார்கள் என்று. அன்னியன் நம்மை ஆள்வதா? என்று கொதித்தெழுந்தது அன்றைய இளைஞர் கூட்டம். நாங்களும் அன்னியர்கள் தாம் என்று தங்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளின் மூலமும் நிரூபித்துவருகின்றனர் இன்றைய ஆட்சியாளர்கள். எங்கே நம் இளைஞர் கூட்டம்?







சொந்த மக்களின் வயிறிலடிக்கும் துரோகிகளிடமும், சாதிவெறிக்கும்பலிடமும் அடையாளம் தெரியாமல் கரைந்துபோய்விடுவதற்கா அன்று அவர்கள் போராடினார்கள்? இல்லை, அவர்களின் வரலாறு நமக்கு போராடும் துணிவையும், ஏகாதிபத்தியங்களை விரட்டியடிக்கும் தீரத்தையும் ஒருங்கே ஊட்டும் உணவு. அதை நாம் மீட்டெடுப்போம், கடைப்பிடிப்போம்

ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

சென்னை, ஜன. 3: "தானே' புயலால் சேதமடைந்த தென்னை, முந்திரி, பலா போன்ற நீண்ட காலப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.




இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:



"தானே' புயலால் ஏற்பட்ட சேதத்தை முழுமையாகக் கணக்கிட வேண்டும். புயல் காரணமாக தென்னை, முந்திரி, பலா போன்ற நீண்டகாலப் பயிர்கள் முற்றிலும் அழிந்து விட்டன. இதிலிருந்து விவசாயிகள் மீள்வதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும். எனவே, தென்னை, முந்திரி, பலா மரங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.



சேதமடைந்த நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும்.



முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழகத்தின் நிலையை எடுத்துக்கூற அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் குழுவை தில்லிக்கு அனுப்ப வேண்டும்.



மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசின் டாஸ்மாக் பார்களை நடத்த ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 22.7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி