ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 9 பிப்ரவரி, 2012

சங்கரன் கோவிலில் சமாதான கூட்டம் இருதரப்பினரும் புறக்கணிப்பு


சங்கரன்கோவில்:சங்கரன்கோவிலில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுக்கப்பட்ட சமாதான கூட்டத்தை இரு பிரிவினரும் புறக்கணித்தனர்.சங்கரன்கோவிலில் நேற்று முன்தினம் முளைப்பாரி ஊர்வலம் செல்லும் போது இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறியது. இதில் ஏராளமானவாகனங்கள் தீ வைத்தும், அடித்தும் நொறுக்கப்பட்டது. இரு பிரிவைச் சேர்ந்த 17 பேர் காயமடைந்தனர். 

இதனால் கலவரம் நடந்த இடம் போர்க்களம் போல் காட்சி அளித்தது. சம்பவ இடத்தை தென் மண்டல ஐ.ஜி., ராஜேஸ்தாஸ், நெல்லை கலெக்டர் செல்வராஜ், டி.ஐ.ஜி., வரதராஜூ, ஆர்.டி.ஓ., இளங்கோ ஆகியோர் பார்வையிட்டனர். இந்நிலையில் இரு பிரிவினருக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் நேற்று காலை மாவட்ட நிர்வாகம் சார்பில் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. பேச்சுவார்த்தைக்காக ஆர்.டி.ஓ., இளங்கோ, தாசில்தார் தாமோதரன் ஆகியோர் தயாராக இருந்தனர். ஆனால் நேற்றும் இரு பிரிவினரிடையேயும் கொந்தளிப்பான நிலை இருந்தது. இதனால் இருபிரிவினரும் சமாதான பேச்சுவார்த்தையை புறக்கணித்தனர்.

சங்கரன்கோவில் மோதல் திட்டமிட்ட சதி நெல்லையில் ஜான் பாண்டியன் கண்டனம்

திருநெல்வேலி:சங்கரன்கோவிலில் இடைத்தேர்தல் நேரத்தில் சிலர் திட்டமிட்டு மோதலை அரங்கேற்றியுள்ளனர் என தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.சங்கரன்கோவிலில் இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் காயமடைந்த பெருமாள், காளிராஜ், நாகராஜ் பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான் பாண்டியன் மூவரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.அவர் கூறும்போது, ""இடைத்தேர்தல் நேரத்தில் தேவேந்திர குல சமுதாயம், முஸ்லிம்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்த சிலர் திட்டமிட்டு சதி செய்துள்ளனர். போலீஸ்பாதுகாப்பை மீறி இச்சம்பவம் நடந்துள்ளது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து சம்பவ இடத்தில் இருந்த போலீசாருக்கு தெரியும்.இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்திருந்தால் மோதலை தடுத்திருக்க முடியும். 


சங்கரன்கோவிலில் கலவரத்தை தூண்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவேந்திரகுல மக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக உள்ளனர்.தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. பரமக்குடி துப்பாக்கிச்சூடு, முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் போலீஸ் தடியடி என தாக்குதல் தொடர்கிறது. தென் மண்டல ஐ.ஜி., மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.போலீசார் தடைபின்னர் சங்கரன்கோவிலுக்கு செல்ல ஜான் பாண்டியன் திட்டமிட்டார். அவருக்கு போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து ஜான் பாண்டியன் கோயம்புத்தூர் புறப்பட்டுச்சென்றார்.

சங்கரன்கோவில் கலவரம்-தென்மண்டல ஐ.ஜி.யை மாற்ற வேண்டும்: ஜான் பாண்டியன் வலியுறுத்தல்


நெல்லை: சங்கரன்கோவில் கலவரத்திற்கு காரணமான தென்மண்டல ஐ.ஜி.யை மாற்ற வேண்டும் என்று தமமுக தலைவர் ஜான் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். 

சங்கரன்கோவிலில் ஏற்பட்ட கலவரத்தில் காயமடைந்த காளிராஜ், பெருமாள் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை தமமுக தலைவர் ஜான்பாண்டியன் சந்தித்து ஆறுதல் கூறினார். மாநகர செயலாளர் கண்மணி மாவீரன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

காவல்துறை பாதுகாப்பு கொடுத்தும் இந்த தாக்குதல் நடந்துள்ளது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியும். உடனே உயர் திகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருந்தால் கலவரத்தை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஒரு சிலரின் சதியால் இந்த கலவரம் நடந்துள்ளது. அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதற்கெல்லாம் தென்மண்டல் ஐ.ஜி. ராமதாஸ் தான் காரணம். பரமக்குடி துப்பாக்கிச்சூடு முதல் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் போலீஸ் தடியடி நடத்தியது வரை இதற்கு எடுத்துக்காட்டு ஆகும். எனவே அவரை உடனடியாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

வாக்குவாதமாக மாறியது கிருஷ்ணசாமி பேச்சு


சென்னை:""டாஸ்மாக், "பார்'களை ஒடுக்கப்பட்டவர்கள் நடத்த, இடஒதுக்கீடு வழங்க வேண்டும்,'' என, கிருஷ்ணசாமி வலியுறுத்தியதால், சட்டசபையில் வாக்குவாதம் நடந்தது.சட்டசபையில் நடந்த விவாதம்:கலையரசு - பா.ம.க: அனைத்து குற்றங்களுக்கும் குடி தான் காரணம். டாஸ்மாக் கடைகளை ஒழிக்க வேண்டும்.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: மதுவிலக்கு அமல் கொள்கையில் மாறுபட்ட கருத்து கிடையாது. இதன் தீமைகளை முதல்வர் நன்கு அறிந்துள்ளார். இந்தியாவில், குஜராத் தவிர அனைத்து மாநிலங்களிலும், மதுவிலக்கு அமலில் இல்லை. தீவு போல, தமிழகத்தில் மட்டும் அமல்படுத்துவது, நடைமுறையில் சாத்தியமில்லை.

கள்ளச்சாராய மற்றும் சமூக விரோதிகளை ஊக்குவிக்கவே, இதை வலியுறுத்துகின்றனர். இதன் பின்னணியில் கள்ளச்சாராய வியாபாரிகள் உள்ளனரோ என்ற சந்தேகம் உள்ளது. மதுக்கடைகளை மூடினால், அரசு கஜானாவுக்கு வர வேண்டிய பணம், சமூக விரோதிகளுக்கு சென்றுவிடும்.

அமைச்சர் சி.வி.சண்முகம்: பா.ம.க., நிறுவனர் வீடு இருக்கும் இடத்தில் இருந்து 10 கி.மீ., தொலைவில் தான் புதுச்சேரி உள்ளது. அங்கு பிராந்தி கடை, கள்ளுக்கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கடையடைப்பு போராட்டம் நடத்தும் தைரியம் உள்ளதா?
கலையரசு: எங்கள் தைரியத்தை வெளிப்படுத்த தயாராகவே உள்ளோம்.

கிருஷ்ணசாமி - புதிய தமிழகம்: அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. எங்கள் மாவட்டத்தில், ஒரு டாஸ்மாக் பார் கூட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் வசம் கிடையாது.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: ஆதிதிராவிட மக்கள் பாதிக்கப்பட, "பார்' கோருகிறாரா அல்லது உ தவி செய்ய கோருகிறாரா? "பார்'கள், எவ்வித ஜாதி அல்லது மத அடிப்படையில் கொடுப்பதில்லை. அது ஒரு தொழில். டாஸ்மாக் என்பது வியாபார நிறுவனம். விதிப்படி தான், "பார்'கள் ஒதுக்கப்படும்.

கிருஷ்ணசாமி: கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் கூறுகிறேன். குடிப்பவர்களில் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

நத்தம் விஸ்வநாதன்: போகிற போக்கை பார்த்தால், குடிக்கும் ஜாதியினர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்காமல் இருந்தால் சரி. இது நடைமுறையில் சாத்தியமில்லை. அவர்களும் ஏலத்தில் கலந்து கொண்டு, "பார்' எடுக்கலாம்.

கிருஷ்ணசாமி: போட்டி, ஏலம் நடப்பதில்லை. ஒதுக்கீடு தான் செய்கிறீர்கள். இடஒதுக்கீடு வழங்குவது போல, இதையும் செய்ய பரிசீலிக்க வேண்டும். ஊராட்சி தலைவர், ஒன்றியத் தலைவருக்கு அலுவலகமும், அரசு ஊழியர்களும் உதவியாக உள்ளனர். ஆனால், எம்.எல்.ஏ.,க்களுக்கு உதவியாளர்கள் இல்லை. எம்.எல்.ஏ., அலுவலகத்தை கூட நாங்கள் போய் தான் திறக்க வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: எம்.பி.,க்களுக்கும் அதே நிலை தான். ஊராட்சித் தலைவருக்கு 1,500 ரூபாய் தான் கிடைக்கும். ஆனால், எம்.எல்.ஏ.,க்களுக்கு பல சலுகைகள் உள்ளன.

கிருஷ்ணசாமி: எப்படி அலுவலர் இன்றி செயல்படுவது. கலெக்டர் அலுவலகத்தில் ஒரு அறை ஒதுக்கி, அதில் ஒரு அதிகாரியை ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்க வேண்டும்.
நத்தம் விஸ்வநாதன்: எம்.எல்.ஏ.,க்களின் ஒட்டுமொத்த சம்பளம் 50 ஆயிரம் ரூபாய் என்றாலும், அதில் உதவியாளர் வைத்துக் கொள்வதற்கான தொகையும் தான் அடக்கம்

பசுபதி பாண்டியன் இறுதி ஊர்வலத்தில் திரு.உமாசங்கர் ஐஏஎஸ்....காவல்துறை உண்மைக்குப் புறம்பான செய்தி.

 

http://www.vinavu.com/wp-content/uploads/2010/07/uma-shankar-ias.jpg

அன்புள்ள தமிழக அரசியல் ஆசிரியருக்கு,

தங்களது 25.1.2012 இதழில் நான் பசுபதி பாண்டியன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டேன், இதனால் காவல்துறை என்னைக் கஷ்டப்பட்டு காப்பாற்றியது என்ற உண்மைக்குப் புறம்பான செய்தி  வெளியாகியுள்ளது. உண்மையில் தமிழகக் காவல்துறையைப் பயன்படுத்தி என்னை எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும் என்றுதான் ஒரு முக்கிய அரசியல் கட்சி முயற்சி செய்து கடும் தோல்வியைச் சந்தித்தது. உண்மை என்னவென்றால் நான் என் சகோதரன் பசுபதிபாண்டியன் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தச் சென்றிருந்தேன் ஆனால் ஊர்வலம் எதிலும் கலந்து கொள்ளவில்லை. காவல்துறையின் பாதுகாவல் எனக்கு எந்த நேரத்திலும் தேவைப்படவில்லை. நான் சென்றிருந்த நல் அடக்க மைதானத்தில் முழு அமைதி இருந்தது. மரித்துப்போன என் சகோதரனுக்கு மலர்மாலை அஞ்சலி செலுத்தி விட்டு நேரே ஊர் திரும்பி விட்டேன். 

உங்கள் பத்திரிக்கையில் வந்தது போல "பசுபதி பாண்டியன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு மட்டுமல்ல... அவர் உயிருக்கே ஆபத்தான சூழ்நிலையும் அப்போது இருந்ததாம். போலீசார்தான் மிகுந்த சிரமமெடுத்து அவரை அப்போது காப்பாற்றினார்களாம். அவருக்கு எதிர்ப்பானவர்கள் பலரும் ஆயுதங்களோடு செல்ல...ஊர்வலத்திலிருந்து உமாசங்கரை தனியே அழைத்து வந்து உயிர் தப்பிக்க வைத்தார்களாம்,,," இதுபோன்று எதுவும் நடக்கவில்லை. நான் ஊர்வலத்திற்கே செல்லவில்லை என்கிறபோது போலீசார் எப்படி என்னை நாடகபாணியில் காப்பாற்ற முடியும்?

எனக்கு எந்த சூழ்நிலையிலும் போலீஸ் பாதுகாப்பு தேவைப்பட்டதில்லை. ஜீலை 2010ல் என்னை ஐ ஏ ஸ் பணியிலிருந்து பொய்க் காரணம் கூறி தற்காலிகப்பணி நீக்கம் செய்து பின்னர் எப்படியாவது என்னைக் கைது செய்து ஜெயிலில் தள்ளி குடும்பத்தையும் ஏதாவது பண்ணவேண்டும் என ஒரு முக்கிய அரசியல் தலைவர் குடும்பம் முயற்சி செய்தபோது தமிழகக் காவல்துறைதான் என்னைக் காப்பாற்றியதா?

ஊழல் பேர்வழிகள் தமிழகக் காவல் துறையைப்பயன்படுத்திதான் என்னைக் காயப்படுத்த முயற்சிசெய்து வருகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும். 

எனக்கும் என் குடும்பத்திற்கும் இயேசு கிறிஸ்து தனது தேவ தூதர்கள் பட்டாளத்தைப் பாதுகாப்புக்கு நியமித்துள்ளார். இந்தப் பாதுகாப்பு அரணை எந்த வல்லமையாலும் உடைக்க முடியாது. எனக்குக்  கிறிஸ்து இயேசுவின் தேவ  தூதர்கள் தரும் பாதுகாப்பு இந்திய பிரதமருக்கு வழங்கப்படும் இசட் ப்ளஸ்  பாதுகாப்பைவிட 100 மடங்கு உறுதியானது. போலீஸ் தரும் இசட் ப்ளஸ் பாதுகாப்பு இருக்கும் போதுதான் திருமதி இந்திரா காந்தி, திரு ராஜீவ் காந்தி போன்றோர் கொலை செய்யப்பட்டனர். அதுபோன்ற தவறுகள் கிறிஸ்து இயேசுவின் தேவ  தூதர்கள் தரும் பாதுகாப்பில் நிகழ்வதில்லை. எந்த வித காவல் துறை பாதுகாப்பும் எனக்கு எதிர் காலத்திலும் தேவைப்படாது. பொய் வழக்குகள் போட்டு தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் சரிதான். 
மரித்துப்போன எனது சகோதரன் பசுபதி பாண்டியன் தான் முதன் முதலில் நான் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டபோது திருநெல்வேலியில் ஒரு பெரிய எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினார். தேவேந்திர குல வேளாளர்களைப் பட்டியல் இனத்திலிருந்து நீக்கி தமிழக அரசியல்வாதிகளின் ஏமாற்றுகளிலிருந்தும் தீண்டாமைக் கொடுமையிலிருந்தும் விடுதலை பெறவேண்டும் என அவர் நடத்திய இயக்கத்திற்கு நான் ஆதரவு கொடுத்து ஆகஸ்டு 2009ல் திருநெல்வேலியில் ஒரு கருத்தாலோசனைக் கூட்டமும் நடத்தினோம். 
சகோதரன் பசுபதி பாண்டியன் இறப்பு தேவந்திர குல இனத்திற்கு ஒரு பெரிய இழப்புதான். அவருக்கு நன்றியுன் கூடிய மரியாதை செலுத்தத்தான் நான் தூத்துக்குடி சென்று அவர் உடலுக்கு மாலை மரியாதை செய்தேன். மேலும் என் இனத்தவர்கள் கலவரத்தில் ஈடுபடக்கூடாது மற்றும் பழி வாங்க முயற்சிக்கக் கூடாது என்று அறிவுறை கூற விரும்பினேன். எனவே அவர் உடல் வரும் வரை மைதானத்தில் காத்துக் கொண்டிருந்தவர்களுடன் பேசி இந்த இனம் இனி சட்டத்தைத் தன் கையில் எடுக்கக் கூடாது என்று அறிவுறை கொடுத்துக் கொண்டிருந்தேன். அங்கு எந்த விதப் பதட்டமும் எப்போதும் இல்லை. எந்தப் போலீசும் இல்லாமல் அங்கிருந்தவர்களுடன் சுமூகமாகப் பேசிக் கொண்டிருந்தேன். இதுதான் உண்மை. (நான் போகுமிடங்களில் ரகசிய போலீஸ் நோட்டம் விடுவதற்காக நிற்பார்கள், ஆனால் சாதாரண உடையில். இவர்கள் வருவது என்னைப் பாதுகாக்க அல்ல. நோட்டம் விடுவதற்காகவே) 

நான் கிறிஸ்து இயேசுவின் உண்மை சீடன். எனவே நான் எந்த இனத்தையோ அல்லது நபரையோ குறித்து கோபம் அல்லது காழ்ப்புணர்ச்சி அடைவதில்லை. எல்லா சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நன்மைக்காகத் தினமும் காலை 4 முதல் 6 வரை ஜெபம் செய்கிறேன். எனவே சகோதரன் பசுபதி பாண்டியன் மரணத்தில் எனக்கு எந்த இனத்தின் மீதும் காழ்ப்புணர்ச்சி கிடையாது. சட்டம் தன் கடமையைச் செய்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும் போது எனக்கு எங்கிருந்து எதிரிகள் முளைப்பார்கள்?
நான் தனியாகத்தான் இத்தனை வருடங்களாக வாகனம் ஓட்டுகிறேன். ஓட்டுனர் வைத்துக்கொள்வது கிடையாது. பணிநீக்க காலத்திலும் இதேபோல்தான் வாகனம் ஓட்டினேன், இடங்களுக்குச் சென்று வந்தோம். எனக்கோ வீட்டிற்கோ இதுவரை மாநில போலீசின் பாதுகாப்பை நான் கோரவில்லை. ஊழலுக்கு எதிராக நான் வழக்குத் தொடுத்தபோது அரசியல் கட்சிகள் எனக்குப் பாதுகாப்புத் தருகிறேன் என்று கூற அதை நான் நிராகரித்துள்ளேன். இப்போது கிறிஸ்து இயேசுவின் சீடராக மாறியபின் எனக்கு தெய்வீகப் பாதுகாப்பு கிடைக்கப் பெற்றுள்ளது என்பதுதான் உண்மை.
நிற்க. 2012ல் உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் சுனாமி, பூகம்பம், பெரிய தொற்று வியாதிகள், கடும் புயல் போன்ற பெரும் அழிவுகள் நிகழவிருப்பதாக வெளிப்பாடுகள் இருப்பதால் நான் கிறிஸ்தவர்களை எச்சரிக்க வேண்டியது என் கடமை. இதற்காக எல்லா இடங்களுக்கும் சென்று கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை வழங்குகிறேன். கிறிஸ்தவர்கள் இந்த கோபாக்கினையிலிருந்து தப்ப வேண்டும் என்பது என்னுடைய ஆவல். என்னுடைய சொந்த வாகனத்தில் விடுமுறை நாட்களில் செல்கிறேன் அல்லது விடுப்பு எடுத்துச் செல்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது? 
என்னை எப்படியாவது ஐ ஏ எஸ் பணியிலிந்து நீக்கி விடத் துடிக்கும் சில ஆதிக்க சக்திகள் இது போன்ற பொய் வதந்திகளைப் பரப்ப முயலுகின்றன. முடிவில் உண்மை மட்டுமே வெல்லும்.
தங்கள் வெளியீட்டில் உண்மைக்கு மாறாக தகவல்கள் வந்துள்ளமையாலும் அது என்னுடைய நற்பெயருக்குக் களங்கம் எற்படுத்தியுள்ளமையாலும் தயவு செய்து இந்த மறுப்புச் செய்தியை வரும் இதழில் வெளியிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

அன்புடன்

செ உமாசங்கர் IAS.,
Commissioner for Disciplinary Proceedings,

பசுபதிபாண்டியன் கொலை வழக்கு: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் கடந்த 27ம் தேதி தேதி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்த மாடசாமி மற்றும் பிரபு ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பசுபதிபாண்டியன், கடந்த 10ம் தேதி அன்று திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, 4 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த வழக்கில் திண்டுக்கல் நந்தவனப்பட்டியைச் சேர்ந்த நிர்மலா, திண்டுக்கல் கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த ஜான் பாண்டியன் கட்சி நிர்வாகி முத்துப்பாண்டியன் ஆகிய 2 பேரை மட்டும் தான் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம் சுரண்டை இடையர் தவணை ஆறுமுகச்சாமி, தூத்துக்குடி முள்ளக்காடு அருளானந்தம், விருதுநகர் மாவட்டம் முத்துசுப்பையாபுரம் சண்முகம் என்ற சண்முகசுந்தரம், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகவூர் செல்வம் என்ற புறா மாடசாமி, பிரபு, நட்டு என்ற நடராஜன், ராஜபாளையம் சொக்கநாதன்புதூர் பாட்ஷா என்ற மாடசாமி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் தாரா என்ற தாராசிங் ஆகிய 8 பேர் வள்ளியூர், சென்னை, மேட்டுப்பாளையம், நெல்லை நீதிமன்றங்களில் சரணடைந்தனர்.
இதில் முக்கிய குற்றவாளிகளான ஆறுமுகச்சாமி, அருளானந்தம், சண்முகசுந்தரம் ஆகிய 3 பேர் விசாரணையின்போது கொடுத்த தகவல்களை வைத்து கார், கத்தி, ரத்தக்கறை படிந்த உடைகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் கொலைக்கான பின்னணி பற்றிய தகவலும் கிடைத்தது.
இந்நிலையில் கடந்த 27ம் தேதி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் சரணைடந்த புறா மாடசாமி மற்றும் பிரபு ஆகியோரை போலீசார் திண்டுக்கல் 2வது ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் லதா முன்னிலையில் நேற்று மதியம் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்களை போலீஸ் காவலிலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி துணை சூப்பிரண்டு நடராஜமூர்த்தி மனு தாக்கல் செய்தார்.
பசுபதி பாண்டியனை கொலை செய்ய புறா மாடசாமி, பிரபு ஆகியோர் சதித் திட்டம் தீட்டினர். இந்த கொலை சம்பவத்துக்கு ஆதரவாக அவர்கள் பயன்படுத்த வைத்திருந்த ஆயுதங்களை கைப்பற்றவும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் அந்த இருவரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து வரும் 9ம் தேதி மதியம் அவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது,
புறா மாடசாமியின் நிஜப்பெயர் செல்வம். அவரது தந்தை பெயர் மாடசாமி. செல்வம் சிறு வயதில் இருந்தே புறா வளர்ப்பதில் ஆர்வமுள்ளவராக இருந்ததாலும், புறா பிடிப்பதில் திறமைசாலி என்பதாலும் அவருக்கு புறா மாடசாமி என்ற பெயர் கிடைத்துள்ளது.
தனது சொந்த ஊரான முகவூரில் ஏற்பட்ட பிரச்சனையால் புறா மாடசாமி தனது காதலியுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே திண்டுக்கல் வந்துவிட்டார். அவர் பசுபதி பாண்டியன் வீட்டருகே வீடு எடுத்து தங்கி இருந்தார்.
முதலில் திண்டுக்கல்-கரூர் ரோட்டில் ராஜாக்குளத்துக்கரையில் சைக்கிள் கடை நடத்தி வந்தார். பின்னர் அந்த கடையை இரு சக்கர வாகன ஒர்கஷாப்பாக மாற்றினார். இதற்கிடையே கொலையாளிகளின் அறிமுகம் கிடைத்து அவர்களுடன் சேர்ந்து பசுபதி பாண்டியனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார்.
தனது வீட்டில் இருந்தே பசுபதி பாண்டியனின் நடவடிக்கைகளை நோட்டமிட்டுள்ளார். மேலும் கொலையாளிகளை தன் வீட்டில் தங்க வைத்துள்ளார். கொலையாளிகள் மாடசாமியின் காரில் தான் ஆயுதங்களுடன் கொலை செய்ய நேரம் பார்த்து சுற்றித் திரிந்துள்ளனர். அந்த கார் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூரில் கைப்பற்றப்பட்டது என்றார்.