ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 30 அக்டோபர், 2014

கனிமவள கொள்ளை குறித்து சகாயம் விசாரணை குழுவுக்கு அரசு ஆணை வழங்கவேண்டும் சென்னையில், புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்..

மகேஷ் மள்ளருக்கு வீர வணக்கம்..

மகேஷ் மள்ளருக்கு வீர வணக்கம் —

நெல்லையில் மள்ளர் நாடு அமைப்பினர் ஒருவர் படுகொலை .

28-10-14 அன்று மள்ளர் நாடு இயக்க நெல்லை மாவட்ட செயலார் தோழர் மகேஷ் மள்ளர் மற்றும் மாரிமுத்து தோழர்களின் சாதிய படுகொலை கண்டித்து மள்ளர் நாடு மற்றும் புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்,தேவேந்திர குல கூட்டமைப்பு மற்றும் நெல்லை மாவட்ட தேவேந்திர குல மக்கள் சார்பாக முன்மொழிந்துள்ள கோரிக்கையாக.படுகொலைக்கு காரணமான நபர்களை கைது செய்யாமல் தோழர்களின் பிரேதம் பெற்றுக்கொள்ள பட மாட்டது என்ற கோரிக்கையை முன்வைத்து நாளை இரண்டாம் நாள் அமைதி போராட்டம் தொடர்கின்றது .நெல்லை மாவட்ட சொந்தங்களே நாளை காலை 10 மணிக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு வாருங்கள். இன்று போல் மானுட மானம் காத்த நாம் தோழர்களின் இழப்புகளுக்கு. நமது உன்னத அமைதியின் உணர்வை வித்தாக்குவோம்.
"சாதி" தனது இருபுற கணக்குகளை, ஏன் பல நூற்றாண்டுகள் சென்ற பின்பும். தனக்கான இழப்புகளை விளிம்புநிலையில் ஆரம்பித்து, விளிம்புநிலையிலே முடிகின்றது. இது வருத்தமோ, ஓலமோ அல்ல மாண்டது போர் களம் என்று தெரிந்த பிறகு இங்கே வீரத்தோடு கூடிய அழுகைகளுக்கு வணக்கங்களுக்கு இங்கே பஞ்சம் இல்லை. தொடர்ந்து பயணிப்போம் வீழ்வது உருவங்கள் மட்டுமே உணர்வுகள் என்றுமே பயன்பட்டுகொண்டே இருக்கும். ஒரு நாள் சாதிய போர் முடியும் அன்று ஆனந்த கண்ணீர் இடுவோம்.
புகைப்படம்: பிரேத அரை பக்கம் திரண்ட மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி, ஹைகிரவுண்டு அரசு மருத்தவமனை சாலையில் திரண்ட மற்றொரு பகுதி மக்கள் கூட்டம்..

மாமள்ளர்..ராஜராஜசோழதேவேந்திரர்,,1029வது சதயவிவிழா..

கனிமவள கொள்ளை குறித்து சகாயம் விசாரணை குழுவுக்கு அரசு ஆணை வழங்கவேண்டும் சென்னையில், புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்..

தமிழகத்தில் மணல்,தாது மணல்,கிரானைட் கொள்ளையில் நடந்த முறைகேட்டினை கண்டறிய "நேர்மை நெறியாளர்" சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் தலைமையில் விசாரனை நடத்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பினை உடனடியாக அமுல்படுத்த வலியுறுத்தி 29-10-14 இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடைப்பெறும் ஆர்ப்பாட்டம்.

கனிமவள கொள்ளை குறித்து சகாயம் விசாரணை குழுவுக்கு அரசு ஆணை வழங்கவேண்டும் சென்னையில், புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்..

மணல், தாது மணல், கிரானைட் கொள்ளை குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தனது விசாரணையை தொடங்குவதற்கான ஆணையை உடனடியாக தமிழக அரசு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசும்போது, ‘இயற்கை நமக்கு தந்த கொடையை கொள்ளையடித்தவர்கள் குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு நியமித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தனது விசாரணையை தொடங்குவதற்கு அரசு ஆணை பிறப்பிக்காவிட்டால் தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம். சகாயத்துக்கு அரசு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும். மேலும் சமீபத்தில் உயர்த்தப்பட்ட பால் விலையையும் அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும்’ என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் சென்னை, வேலூர், திருச்சி, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 150-க் கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.201410292304083319_In-ChennaiNEWTamil-Nadu-partyDemonstration_SECVPF