புதன், 11 ஆகஸ்ட், 2010

விடுதலைச் சிறுத்தைகள்: பிழைப்புவாத-பொறுக்கி அரசியலில்

பிழைப்புவாதியாக மாறுவதற்கு ஒரு ஐம்பதாண்டுகள் ஆனதென்றால், திருமாவளவனுக்கோ இந்தப் “பரிணாமம்” எல்லாம் ஒரு ஐந்தாறு ஆண்டுகளுக்குள் முடிந்துவிட்டது. திருமாவின் பிறந்தநாளான ஆகஸ்டு 17, சமீபகாலமாக பாசிச ஜெயாவின் கட்-அவுட் களேபரங்களுக்குப் போட்டியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சொன்னை முழுவதும் பிளெக்ஸ் பேனர்கள் மயம். 1990-களில் பிளக்ஸ் தொழில்நுட்பம் வளராததால் ஜெயாவின் கட்-அவுட்டுகள் இருந்தன. திருமாவின் காலத்தில் புற்றீசல் போல பிளெக்ஸ் அச்சகங்கள் தோன்றிவிட்ட நிலையில், சிறுத்தைகள் திருமாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக எல்லா அச்சகங்களையும் குத்தகைக்கு எடுத்து விட்டார்களா என எண்ணுமளவுக்கு, பிளெக்ஸ் போர்டுகளின் எண்ணிக்கை சென்னைவாசிகளை மலைக்க வைத்தது. சொன்னையில் திரும்பிய பக்கமெல்லாம், திருமாவை ‘மாசறு பொன்னே போற்றி, கடாரம் வென்ற மன்னா’ என்றபடி எல்லா உயர் தமிழ் சொற்களாலும் போற்றும் துதிபாடும் பிளெக்ஸ் போர்டுகள் மொய்த்தன. சேகுவேரா, பிரபாகரன் உள்ளிட்டு இன்னும் பல வரலாற்று மாந்தர்களின் கெட்டப்பில் தோன்றும் திருமாவின் அவதாரங்களோடு, அண்ணனின் அல்லக்கைகளின் படங்களும் எல்லா பேணர்களிலும் தவறாமல் இடம் பெற்றிருந்தன. முக்கியமாக அல்லக்கைகள் எல்லோரும் தங்கள் பெயருக்கு கீழே ஏதோ ஒரு பதவியையும் குறிப்பிட்டிருந்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இப்போது எல்லோருக்கும் உறுப்பினர் தகுதி மட்டும் கிடையாது; ஏதாவது ஒரு பதவியும் போனசாக உண்டு. அண்ணனின் ஒவ்வொரு பிறந்தநாளையும் ஏதாவது ஒரு கொள்கை முழக்கத்தை வைத்து நடத்துவதை சிறுத்தைகள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இம்முறை ஈழம் சீசனாக இருப்பதால், “எழும் தமிழ் ஈழம்” என பேனர்களின் ஓரத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். ஈழம் எரிந்து கொண்டிருந்தபோது, அதை அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திய கருணாநிதி அரசு, இப்போது ஈழப் போராட்டம் புதையுண்ட நேரத்தில், தனது தேர்தல் வெற்றியை அது பாதிக்கவில்லை என்பதைப் பார்த்துவிட்டவருக்கு, சிறுத்தைகளின் பேனரில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள், பிரபாகரன் படம் இடம் பெற்றிருப்பதாக தினமலர் நாளேடு போட்டுக் கொடுத்தது. உடனே முத்தமிழ் முதல்வரின் காவலரணி சிறுத்தைகளின் பேனர்களை நோக்கிப் பாந்தது. போலீசுக்கு தொல்லை கொடுக்க விரும்பாத சிறுத்தைகளும் எல்லா பேனர்களிலும் ‘எழும் ஈழத்தை’ அழித்து உதவி செய்தனர். கடைசில் ‘எழும் ஈழத்’திற்கு இடையில் இருந்த ‘தமிழ்’ மட்டும் பரிதாபமாக காட்சியளித்தது. கடந்த ஆறு மாதங்களாக ஈழத்திற்காக அமர்க்களப்படுத்திய சிறுத்தைகளின் ‘வீரம்’ இறுதியில் தாரை வைத்து, ஈழம் என்ற பெயரையே அழிக்கும் வண்ணம் அஞ்சி நடுங்கிப் போனது. ஆனாலும் பிறந்த நாள் கூட்டத்தில் முழங்கிய திருமா, இனி புலிகளின் கோரிக்கைக்காக ஆயுதம் தாங்காத வழியில் சிறுத்தைகள் போராடுவார்கள் என வாக்குறுதி அளித்தார். அதே சமயம், தி.மு.க அரசுக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்க மாட்டோம் எனவும் முன்னெச்சரிக்கையாக, “கண்டிஷன்ஸ் அப்ளை”யும் போட்டார். ஒரு எம்.பி. சீட்டு நன்றிக்காக தமிழ்நாட்டு மேடையில் இப்படி பேசியவர், சமீபத்தில் ஜெர்மனியில் புலி ஆதரவாளர்கள் நடத்திய மாநாட்டில் பிரபாகரன் தலைமையில் விரைவில் ஐந்தாவது ஈழப்போர் துவங்கும் என அறிவித்தார். புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே திருமாவளவனுக்கு ஒரு இமேஜ் இருப்பதால், அதைத் தக்கவைப்பதற்கு அங்கே அப்படி; பிழைப்பை ஓட்ட இங்கே இப்படி… திருமாவின் ஓட்டுக்கட்சி பிழைப்புவாதம் இப்போது தமிழக மக்களுக்கு புதிரான ஒன்றல்ல. எனினும், அயல்வாழ் தமிழ் மக்கள், அதுவும் ஈழம் தொடர்பாக மட்டும் அவரைத் தெரிந்து வைத்திருக்கும் மக்களுக்கு, அவரது சரணாகதிப் படலம் தெரியாது. ‘90-கள் முழுவதும் “அடங்க மறு, அத்துமீறு, திருப்பி அடி” என்று ஆதிக்க சாதிவெறிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் இயங்கிய போது தேர்தலைப் புறக்கணித்தார்கள். ஆனால், இந்த முழக்கங்கள், அதாவது அவர்கள் விரும்பிய தீண்டாமை ஒழிப்பு ஆகியவை – சாதி ஒழிப்பிற்கான திட்டமோ, நடைமுறையோ, அதற்கேற்ற அமைப்பு – அணிகள் பலமோ இல்லாததால் வெற்றுச் சவடாலாகிப் போயின. திருமாவளவன் ஒரு பிரிவு தலித் மக்களிடம் பிரபலமான தலைவரானார். அவர் பேசிய கூட்டங்களுக்கு கணிசமாக மக்கள் வந்தார்கள். இப்படி திசைவழியறியாத கூட்டத்தை வைத்துப் பல பிரச்சினைகளை சந்தித்து, கருணாநிதி அரசால் ஏவிவிடப்பட்ட அடக்குமுறைகளை எதிர்கொள்ள அமைப்பின் – அணிகளின் பலமுமின்றி, இறுதியில் இதையே காரணமாகக் கூறி தேர்தல் அரசியலில் நுழைந்தார். அத்துடன் அவரது தலித் அரசியல் முடிவுக்கு வந்து, பிழைப்புவாத அரசியல் அத்தியாயம் ஆரம்பித்தது. ’98 தேர்தலில் அயா மூப்பனாரோடு கூட்டணிக் கட்டிக் கொண்டு சிதம்பரம் தொகுதியில் நின்றார். இதற்கு நன்றிக் கடன் செலுத்தும் விதத்தில் தஞ்சை மாவட்டத்தில் கூலி விவசாயிகளையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒடுக்கி வரும் குடும்பத்தைச் சேர்ந்த மூப்பனாரை புரட்சித் தலைவர் என்றார். அதன்பின் போயஸ் தோட்டம், கோபாலபுரம் என மாறி மாறி தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதையை அடகு வைத்து, ஓரிரண்டு தொகுதிகளை வென்றார். இக்காலத்திற்குச் சற்று முன்னர்தான் கொடியங்குளம் ஆதிக்கசாதி கலவரம், மாஞ்சோலைப் படுகொலை எல்லாம் இரு கழக அரசுகளால் நடத்தப்பட்டிருந்தன. அப்புறம் பாப்பாப்பட்டி, மேலவளவு, திண்ணியம் முதலான வன்கொடுமைகள் நடந்த போது, சிறுத்தைகள் அதை வைத்துத் தமது சொல்வாக்கை வளர்த்துக் கொள்ளத்தான் முனைந்தனர். மேலவளவு முருகேசன் கொலை வழக்குகூடத் தன்னார்வ வழக்கறிஞர்களால் நடத்தப்பட்டு, தண்டனை வாங்கித் தரப்பட்டது. இதற்குள் அண்ணன் எல்லா ஆதிக்க சாதி பிரமுகர்களுடனும் ஐக்கியமாகிவிட்டார். சேதுராமனுடன் கை தூக்கி போஸ் கொடுத்ததென்ன, ராமதாசுடன் சேர்ந்து தமிழ் இயக்கம் கண்டதென்ன, பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு விடுமுறை கோரியதென்ன என்று பலவற்றைப் பட்டியிடலாம். முத்தாப்பாக, விருத்தாசலம் பகுதியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த முருகேசனும், வன்னியர் சாதியைச் சேர்ந்த கண்ணகியும் காதல் திருமணம் செய்ததற்காக கட்டி வைத்து நஞ்சூற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் கூட, வன்னிய சாதி வெறியர்களைத் தண்டிக்கக்கோரிப் போராடுவதற்குப் பதிலாக, அவர்களுடன் பஞ்சாயத்து செய்து சுமூகமாகப் போகுமாறு முருகேசனின் சொந்தங்களுக்கு சிறுத்தைகள் நெருக்குதல் கொடுத்தனர். இந்த விவரங்களெல்லாம் புதிய ஜனநாயகம் இதழில் விரிவாகவே பதிவாகியிருக்கின்றன. இப்போது அடுத்த கட்டமாக, சிறுத்தைகள் எந்தப் பாதையில் சொல்கின்றனர் என்பதற்காகவே இந்தக் கட்டுரை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட விழுப்புரம் தொகுதியில் முதலில் அறிவிக்கப்பட்ட மடிப்பாக்கம் வேலாயுதம் என்ற வேட்பாளரைக் கண்டு பலரும் அதிர்ந்து போனார்கள். காரணம், அந்தப் பிரமுகர் ஒரு ரியல் எஸ்டேட் மாஃபியா; சி.பி.ஐ வழக்குகளைச் சந்தித்து வருபவர். அவ்விவகாரம் சந்தி சிரித்ததும், ஏதோ ஒரு முன்னாள் நீதிபதியை கொண்டுவந்து நிறுத்தினர். அவருக்கும் கட்சிக்கும் அதற்கு முன்னர் கொள்வினையோ, கொடுப்பினையோ கிடையாது. இதற்குமுன் சிறுத்தைகள் கட்சியிலிருந்து வெளியேறிய சொல்வப்பெருந்தகை உலகறிந்த கட்டப் பஞ்சாயத்து ரவுடி. அதிலேயே பல கோடிகளைச் சேர்த்தவர். கூடுதலாக, ஜெயாவின் வளர்ப்பு மகனது கருப்புப் பணத்தையும் சில பெண் தொடர்புகள் மூலமாக இவர் லவட்டிக் கொண்டார் என்றும் கூறப்படுவதுண்டு. சொல்வப்பெருந்தகை இப்போது பகுஜன் சமாஜ் கட்சிக்குப் போனாலும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிறுத்தைகளும் இதை பெரியபிரச்சினையாக்கவில்லை. ஆக்கினால், சேர்ந்த வண்டவாளங்கள் அம்பலாமாகும் என்ற பயம்தான் போலும். சொல்வப்பெருந்தகை காலத்தில்தான், சிறுத்தைகளின் கட்சி தற்போதைய திருத்தமான வடிவைப் பெற்றது. இதன்படி, உள்ளூர் அளவில் உள்ள பிழைப்புவாத தலித் பிரமுகர்கள், கட்டப் பஞ்சாயத்து சேபவர்கள், ரியல் எஸ்டேட் வியாபாரம் சேயும் மாஃபியாக்கள், ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு அந்தந்தப் பகுதி வர்த்தகர்களிடம் மாமூல் வசூலிப்பவர்கள், கட்சியின் பொதுக்கூட்டச் சொலவுகளுக்கு அப்பகுதியிலிருக்கும் பெரும் முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் வசூலித்தல், சுயநிதிக் கல்லூரிகளின் முதலாளிகள் சிறுத்தைகளுக்கென்று ஒதுக்கும் சீட்டுகளை பல இலட்சங்களில் விற்பனை செய்தல், சினிமா கட்டப் பஞ்சாயத்து செய்தல் – இப்படி பல்தொழில் வல்லுநர்கள்தான் இப்போது சிறுத்தைகளின் வெளிமுகங்கள். இந்த ரவுடிகளை வைத்துப் பிழைக்கும் பிரமுகர்களைச் சுற்றி பெருங்கூட்டமா இருக்கும் தொண்டர்கள் எலும்புகளைக் கவ்வியவாறு சுற்றி வருகின்றனர். இப்படி வசூலிப்பதற்கென்றே ஒரு கட்சியும், கூட்டமும் உருவாகிவிட்டது. பல இடங்களில் வர்த்தகர்களும், முதலாளிகளும் எதற்கு வம்பு என்று பணம் தருவதோடு, சிலர் கட்சியிலும் சேர்ந்து வருகின்றனர். தற்போது திருச்சொந்தூரில் உள்ள சொந்திலாண்டவன் கோவிலில் பூசை சேயும் பார்ப்பனர்களும் சேர்ந்திருக்கிறார்கள். பலருக்கு இது அதியமாகப்படலாம். உண்மை என்னவென்றால், எல்லா பிரபலமான கோவில்களிலும் உள்ள பூசாரிகள் பக்காவான லும்பன்களாக இருப்பார்கள். கை நிறைய காசு, அதை அனுபவிப்பதற்கு வசதிகள் – இப்படி உழைக்காமலேயே தொந்தி வளர்க்கும் கூட்டம், தனது பாதுகாப்பிற்காக சிறுத்தைகளிடம் சேர்ந்ததில் வியப்பில்லை. மேலும், பார்ப்பனர்கள் – தலித் கூட்டணி என்ற மாயாவதிக் கட்சியின் தமிழக கிளைக்கு போட்டியாகக்கூட இதைக் கருதலாம். ஆக, வசூலிப்பதற்கு இவ்வளவு பெரிய இயந்திரத்தை உருவாக்கிவிட்டபடியால், இந்தக் கட்டமைப்பைத் தக்க வைப்பது எப்படி? அதற்குத்தான் மூன்று மாதங்களுக்கொரு முறை ஏதாவது ஒரு பிரச்சினையைச் சாக்காக வைத்து மாநாடு என்று பிளெக்ஸ் பேனர்களில் அமர்க்களம் சேகிறார்கள். இதைப் பார்க்கும் மக்களெல்லாம் சிறுத்தைகள் பெரும் வளர்ச்சி பெற்றதாக நம்ப, முதலாளிகள் இனிமேல் அரசியல் கட்சிகளுக்குக் காசு கொடுக்கும் பட்டியலில் சிறுத்தைகளையும் சேர்க்க, மாற்றுக் கட்சிகளுக்கோ சிறுத்தைகளின் ‘பலத்தை’ அறிந்து அவர்களுக்கு சீட்டுக்கள் அதிகம் கொடுக்க வேண்டுமோ என யோசிக்க – இப்படி பல விதங்களில் திருமாவின் ‘கொள்கை’ மாநாடுகள் பயன்படுகின்றன. இப்படிப்பட்ட கூட்டத்தை வைத்துத்தான் திருமாவளவன் கட்சி நடத்துகிறார். அவரது கட்சித் தலைமையகம் கூட அவரது தாயாரின் பெயரில் பதிவாகி, தற்போது அது ஒரு ஆக்கிரமிப்பு என வழக்கே நடந்து வருகிறது. வழக்கிற்கு வராத சுருட்டல்கள் எவ்வளவென்று தெரியவில்லை. ஏற்கெனவே உலகமயத்தால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலைகள் குறைந்துவரும் நேரத்தில், சேரியில் இருக்கும் உதிரியான இளைஞர்களுக்கு இப்படி ஒரு வாழ்வு சிறுத்தைக் கட்சியில் சேர்ந்தால் கிடைக்கிறது. ஓரிரு ஆண்டுகளிலேயே அடுக்குமாடி, ஸ்கார்பியோ கார், பரிவாரங்கள் என இதில் பலர் முன்னுதாரணங்களாக இருக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகளின் எம்.எல்.ஏ. ரவிக்குமார் நடுத்தர வர்க்க தலித் மக்களின் கோரிக்கைகளைச் சட்டசபையில் பேசுவார். வெள்ளை அறிக்கை, பணியிடங்களைப் பூர்த்தி செய்தல், ஆதி திராவிடருக்குக் கூடுதல் நிதி ஒதுக்குதல், அரசுப்பணி மாற்றம் – இப்படியான அரசு கட்டப் பஞ்சாயத்துகளை அவர் சேகிறார். இதனால் கணிசமான அரசு, நடுத்தர வர்க்க தலித் மக்கள் தமது சுயநலத்திற்காகச் சிறுத்தைகளை ஆதரிக்கின்றனர். இப்படி லும்பன்களும், நடுத்தர வர்க்கமும் இணைந்த கலவையாக காட்சியளிக்கும் சிறுத்தைகளின் அரசியல் முகத்தை அடிக்கடி புதுப்பிப்பதற்குத்தான் ஈழம் பயன்பட்டிருக்கிறது. இந்த அரசியல் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு திருமாவளவன் தலைமை தாங்குகிறார். அடிக்கடி அறிக்கை விடுவார். மாநாடு நடத்துவார். பேட்டிகள் கொடுப்பார். மற்றபடி, முன்பெல்லாம் சிறுத்தை அணிகள் தலித் அரசியல், தலித் தலைமை, தலித் புரட்சி என்றெல்லாம் ஆவேசமாக பேசுவார்கள். இப்போது எவ்வளவு திட்டினாலும் அவர்கள் அசைந்து கொடுப்பதில்லை என அக்கட்சித் தோழர்களே வருத்தப்படுகின்றனர். இருப்பினும், விடுதலைச் சிறுத்தைகள் இந்தத் தொழிலை ஒரு அளவுக்குதான் செய்ய முடியும். அ.தி.மு.க; தி.மு.க. அளவுக்கெல்லாம் பிரம்மாண்டமாகச் செய்ய முடியாது. கருணாநிதி கூட சிறுத்தைகளை ஓரளவுக்கு அனுமதித்து விட்டு, தேவையான நேரத்தில் ஆப்படிப்பார். இதை திருமாவும் உணர்ந்துள்ளதால், இப்போதைக்கு இந்த விளையாட்டு விதிமுறைக்குட்பட்டு ஆடப்பட்டு வருகிறது. பிளெக்ஸ் பேனரில் எவ்வளவு ஆவேசமாக மீசையை திருமா முறுக்குகிறாரோ, அந்த அளவுக்கு அரசியல் பிழைப்புவாதம் மறைந்திருக்கிறது என்று பொருள். ஐரோப்பாவிலும், கனடாவிலும் இருக்கும் அப்பாவி ஈழத்தமிழன் மட்டும் திருமாவை ஈழத்திற்கான ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்று நம்பிக்கொண்டிருப்பார். என்ன இருந்தாலும் தமிழகத்திற்கும் அமெரிக்காவிற்கும் தூரம் அதிகம்தானே? -புதிய ஜனநாயகம், செப்டம்பர்’2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக