சனி, 25 செப்டம்பர், 2010

சுந்தரலிங்கம்

சுந்தரலிங்கம் (Sundaralinkam) தமிழகத்தின் கடைகோடியான திருநெல்வேலி மாவட்டத்தில் கவர்னகிரி என்னும் ஊரில் பிறந்த விடுதலை போராட்ட வீரர். இவர் வீரபாண்டிய கட்டபொம்மன் படையில் வீராக சேர்ந்து பின்னாளில் துணை தளபதியாகவும், தளபதியாகவும் மாறினார். கும்பினி (ஆங்கிலயேர்) எதிரகாக நடந்த போரில் வெள்ளையன், கந்தன் பகடை, முத்தன் பகடை , கட்டன கருப்பணன் போன்றோர்களுடன் பங்கு பெற்று தனது இன்னுயிரை வீரர்களோடு மாய்ந்தவர். தமிழக அரசு இவரின் பெருமையெய் போற்றி இவர் பிறந்த ஊரில் நினைவு சின்னமும், அழகு வளையமும் எடுத்துள்ளது. இவரின் நினைவை போற்றி முதுகுளத்தூரில் இவருக்கு ஒரு சிற்பம் (சிலை) வைக்கப்பட்டுள்ளது.

வரலாறு
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் வருவது போன்ற வரலாறு உண்மையில் இல்லை. கட்டபொம்மன் வரி கட்டுவதற்காக சாக்சன் (Jackson) னிடம் இராமநாதபுரத்தில் இருந்து குற்றாலம், சிவகிரி என பல இடங்களுக்கு அலைய வைக்கப்பட்டது பலருக்கு அறிந்து இருக்க வாய்ப்பில்லை. மேலும் கும்பினியர் கட்டபொம்மன், ஊமைத்துரை போன்றவர்களை கொன்றபின், அவ்விடத்தில் இருந்த ஆவணங்களை அழிந்து விட்டதாக நடுநிலையாளர்கள் கருதுகின்றனர். அப்போர் நடந்த பல ஆண்டுகளுக்கு கழிந்து, போரில் பங்கு பெற்றவர்களை பற்றி நாட்டுபுற பாடல்களும், கூத்துகளும் இயற்றப்பட்டன. இப்படியாக இயற்றப்பட்ட பாடல்களில், கூத்துகளில் தனது குமுகத்தை சேர்ந்தவரை பற்றி பெருமையாக இட்டுகட்டி கூறப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் விளம்புகின்றனர். வானமாமலை இப்பகுதியில் வழங்கப்பட்ட நாட்டு புற பாடல்களை தொகுத்துள்ளார். இதனின் ஊடாகவே இப்போரில் பங்கு பெற்ற சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, முத்தன் பகடை , கட்டன கருப்பணன் போன்றவர்களை அறிய முடிகிறது.

கட்டபொம்மன் மூன்று ஆண்டுகளாக வரி கட்டவில்லை என்றும், அவ்வரியெய் விரைவில் கட்டுமாறு, சாக்சன் மூன்று மடல்களை கட்டபொம்மனுக்கு அனுப்புகிறார். நான்காவது மடலில் நாங்கள் அனுப்பிய மடல்களுக்கு விடை அனுப்பாமலும், வரியெய் ஒழுங்காக செலுத்தாதற்கும் நாங்கள் போர்தொடுக்க முடிவு செய்யுள்ளதாக தெரிவிக்கிறார். இதனால் தனது வீரர்களோடு கட்டபொம்மன் இராமநாதபுரம் சென்று, சாக்சனை பார்க்க விரும்புவதாக தெரிவிக்கிறார். சாக்சனோ தான் குற்றாலம் செல்வதாக தகவல் தந்து , குற்றாலம் செல்கிறார். கட்டபொம்மனும் தனது பரிவாரங்களோடு குற்றாலம் சென்று சாக்சனை சந்திக்க விரும்புகிறார். சாக்சனோ சிவகிரியில் சந்திப்பதாக சொல்லி, அவ்விடத்திலும் சந்திக்காமல் செல்கிறார். இறுதியாக அலைகழிக்கப்பட்டு இராமநாதபுரத்தில் சாக்சன், கட்டபொம்மனை பார்த்து பேசுகிறார். சந்திப்பின் போது, கட்டபொம்மனை ஒரு மன்னன் என கருதாமல், நிற்க வைத்து பேசுகிறார். இதனால் சினம் அடைந்த கட்டபொம்மன் கோபமாக வெளியேறும்பொழுது, ஒரு வெள்ளையர் தடுக்கிறார். இதனை பார்த்த கட்டபொம்மனின் வீரர் ஒருவர் வெள்ளையரை வெட்டி சாய்ந்து அவ்விடத்தில் இருந்து கட்டபொம்மனை மீட்டு கோட்டைக்கு செல்கிறது.

கோட்டை சென்ற கட்டபொம்மன், அன்றைய சென்னையில் உள்ள செயலர்க்கு விரிவாக மேல நடந்த நிகழ்வை பற்றி மடல் எழுதுகிறார். பின்னாளில் உசாவல் குழு சாக்சனிடம் தவறு உள்ளதென்றும், ஆனால் இறந்த வெள்ளையரின் மனைவிக்கு கட்டபொம்மன் திங்கள்தோறும் (மாதம்) உதவி பணம் கொடுக்க வேண்டுமென்று கட்டளை இடுகிறது. கட்டபொம்மன் அதை அப்படியே ஏற்றுகொள்கிறார். சில மாதங்களில் சாக்சன் மாற்றப்பட்டு அவ்விடத்திற்கு ஆலன் யூம் வருகிறார்.

இவ்வேளையில் கட்டபொம்மனின் படை தளபதி தானாதிபதி தனது மகளின் திருமணத்திற்க்காக அருகில உள்ள பாளையங்களில் நெற் களஞ்சியங்களை கொள்ளை அடிக்கும் பொழுது, இரு காவலர்கள் கொல்லப்படுகின்றனர். இந் நிகழ்வுகாகவும், வரி செலுத்தாமைக்ககாகவும் கட்டபொம்மனின் மீது போர்தொடுப்பதாக கும்பினியர் அறிவிக்கிறார்கள். இப்போரின் போது கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டு, ஊமைத்துரை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்படுகிறார். பின்னாளில் ஊமைத்துரை கட்டபொம்மனின் வீரர்களால் விடுவிக்கப்பட்டு ஏழு நாளில் பழைய இடந்தில் மண்சுவரில் ஒரு கோட்டை எழுப்படுகிறது.

பின்னாளில் நடக்கும் சண்டையில் ஊமைத்துரையின் கோட்டை அழிக்கப்படுகிறது. அவர் அவ்விடத்தில் தப்பி மருதுபாண்டியர்களின் உதவியெய் நாடுவது வரலாறு. பின்னாளில் மருதுபாண்டியர்கள் தோற்கடிக்கப்படும் பொழுது, ஊமைத்துரை தப்பி பழனிக்கு அருகில் உள்ள விருப்பாச்சி மலையில் நடக்கும் சண்டையில் பிடிபட்டு, மற்றவரோடு தூக்கிலிடப்படுகிறார்.

சுந்தரலிங்கத்தின் பங்கு
வெள்ளையர்களின் ஆவணப்படி கட்டபொம்மன் , ஊமைத்துரை, தானாதிபதி இவர்களை பற்றித்தான் அறியப்படுகிறது. மற்றவர்களின் வீரம் செறிந்த போராட்டங்கள் நாட்டுபுற பாடல்கள் மூலம்தான் தெரியவருகிறது.

சுந்தரலிங்கம் தனது ஊரில் உள்ள கண்மாயெய் (குளம்) பக்கத்து பாளையங்காரர்கள் மறிந்து கட்டும்பொழுது ஏற்படும் சண்டையில், சுந்தரலிங்கம் மிக திறமையாக போரிடுவதால் அம்முயற்சி தடுக்கப்படுகிறது. இப்போரை அறிந்த கட்டபொம்மன் தனது படைபிரிவில் முக்கிய இடத்தை அளிக்கிறார். பின்னாளில் இராமநாதபுரத்தில் ஏற்படும் கலவரத்தில் சுந்தரலிங்கமே ஒரு வெள்ளையரை வீழ்த்தி கட்டபொம்மனுக்கு ஏற்பட்ட இழுக்குகளை நீக்குவதாக தமிழவேள் என்னும் ஆய்வாளர் நாட்டுபுற பாடல்களை கொண்டு உறுதி செய்கிறார். மேலும் பல ஆய்வாளர்கள் தானாதிபதிதான் வெள்ளையரை கொன்றார் என்றும், மேலும் பல ஆய்வாளர்கள் மற்றவர் (வெள்ளையன்) என்பதால் குழப்பநிலை உள்ளது.

இதன்பின் தான் சுந்தரலிங்கம் துணை படை தளபதியாக கட்டபொம்மனால் நியமிக்கபடுவதாக தமிழவேள் தனது ஆய்வு மூலம் கூறுகிறார்.

ஊமைதுரையெய் பாளையங்கோட்டை சிறையில் இருந்து மீட்பதற்கு சுந்தரலிங்கமும், முத்தன், கந்தன் பகடைகள் ஈடுபட்டதாகவும், மேலும் ஏழு நாளில் கோட்டையேய் கட்டி முடித்ததாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இறுதியாக நடக்கும் விருப்பாச்சி மலையில் நடக்கும் போரில் ஊமைதுரையோடு சுந்தரலிங்கம் பிடிக்கப்பட்டு தூக்கிலிடபடுவதாக தமிழவேள் தனது ஆய்வின் மூலம் தெரிவிக்கறார். மேலும் சில ஆய்வாளர்களோ சுந்தரலிங்கமும் தனது மனைவியுமான வடிவு வோடு , கும்பினியாரின் வெடிமருந்து கிடங்குகளை ஒரு தற்கொலை முகவர்களாக சென்று அழிந்தாக சொல்லப்படுகிறது.

மேற்கோள்கள்
•நாட்டுப்புற பாடல்கள் தொகுப்பு -வானமாமலை
•பாஞ்சலகுறிஞ்சி படைத்தளபதி சுந்தரலிங்க தேவேந்திரர்- தமிழவேள்
ராமலிங்க விலாசத்தில் ஜாக்ஸன் துரையோடு நடந்த வாக்குவாதத்தில் மொழிபெயர்ப்பாளர்களால் விசுவரூபாமாகி கடைசியில் ஒரு வெள்ளையரை வெட்டிசாய்த்ததன் பிறகே கட்டபொம்மு,ஊமைத்துரை வீரர்கள் வெளியேற முடிந்தது.

ராமலிங்க விலாசப்போரில் வீரத்துடன் விளையாடி தலைகளை கொய்யும் முயற்சியில் தேவெந்திரருக்கே கிடைத்தது வெள்ளையன் தலை.

சுந்தரலிங்கத்தேவேந்திரர் கவர்னகிரிக்கு ராஜாவானாலும் கட்டபொம்மு பாளையத்துக்கு நட்பு நாடு.எனவே கட்டபொம்மனின் ஆட்சியில் சுந்தரலிங்கத்தேவேந்திரரின் அக்கறை கடைசிவரை இருந்தது.

கோட்டையை தாக்க வந்த பானர்மான் முதல் நாள் தேவேந்திரரிடம் தோற்றான்.இது வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக