ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 4 செப்டம்பர், 2010

தி.மு.க ஆட்சியில் தேவேந்திர குல அதிகாரிகள் பழிவாங்கப்படுகின்றனர்-

புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தி.மு.க ஆட்சியில் தாழ்த்தப்பட்ட அதிகாரிகள் பழிவாங்கப்படுகின்றனர். கிறிஸ்துதாஸ் காந்தியை தொடர்ந்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கரை சஸ்பெண்ட் செய்தது கண்டிக்கத்தக்கது. அவர் பதவியில் சேரும் முன், அவரது சான்றிதழ்கள் மத்திய அரசால் சரிபார்க்கப்பட்டுள்ளன. தற்போது மதம் மாறி சான்றிதழ் கொடுத்ததாக குற்றம் சாட்டுவது, உள்நோக்கம் கொண்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன், அவர் அரசு கேபிள் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக பணிபுரிந்தார். அப்போது ஒரு சில சேனல்கள் மட்டும் சலுகைகள் பெறுவதை தடுத்து, எல்லா சேனல்களும் பெற நடவடிக்கை எடுத்தார். அதற்கு பழிவாங்க, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக