புதன், 30 மார்ச், 2011

டாக்டர். கிருஷ்ணசாமி பிரச்சாரம்






அப்பாவி மக்கள் இழந்த நிலங்களை திரும்ப பெற உரிய நடவடிக்கை எடுப்பேன் என புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி பிரச்சாரத்தின்போது தெரிவித்துள்ளார்.





தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போதைய தி.மு.க. ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான நிலங்கள் மோசடியாக விற்கப்பட்டு வருகின்றது. ஆளும் தி.மு.க. பிரமுகர்களின் அரசியல் செல்வாக்கினால் போலி பட்டாக்கள் தயாரித்து வெளி மாநில பிரமுகர்களுக்கும், பெரிய தொழிலதிபர்களுக்கும் நிலங்கள் விற்கப்பட்டு வருகின்றது.



பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்தால் எந்த நடவடிக்கையும் கிடையாது. காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தால், இது சிவில் வழக்கு விசாரித்துதான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறி வழக்கு பதிவு செய்வதே கிடையாது. ஓட்டப்பிடாரம் தாலுகா சில்லாநத்தம் கிராமத்தில் சுமார் நூறு ஏக்கர் நிலங்களை இழந்த ஐம்பத்திற்கு மேற்பட்ட சிறு விவசாயிகள் மற்றும் பெண்கள் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற வேட்பாளரான புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை சந்தித்து மனு அளித்தனர்.



சில்லாநத்தம் மட்டுமின்றி ஓட்டப்பிடாரம் தொகுதியில் நடைபெற்றுள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நில மோசடிக்கு முடிவு கட்டுவேன் எனவும், அப்பாவி மக்கள் இழந்த நிலங்களை திரும்ப பெற உரிய நடவடிக்கை எடுப்பேன் எனவும் டாக்டர்.கிருஷ்ணசாமி உறுதியளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக