பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்திக்க டெல்லியில் இருந்து மதுரை வந்தார் லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான்.
அவருடன் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியனும் வந்திருந்தார். காயம்பட்டவர்களை இருவரும் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் பஸ்வானும், ஜான்பாண்டியனும் மதுரையில் தனியாக அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையில், லோக் ஜனசக்தி கட்சியில் ஜான்பாண்டியன் சேர்ந்துவிடுவது என்றும்,
அவருக்கு லோக் ஜனசக்தியில் தமிழ் மாநில தலைவர் பொறுப்பு வழங்குவது என்றும், அல்லது தேசிய அளவில் பொறுப்பு வழங்குவது என்றும் முடிவெடுக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக