செவ்வாய், 20 செப்டம்பர், 2011
பரமக்குடி துப்பாக்கி சூடு நாடு தழுவிய போராட்டம் பஸ்வான் எச்சரிக்கை
புதுடெல்லி : பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமான போலீஸ் அதிகாரிகளை தண்டிக்காவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று லோக் ஜனசக்தி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். டெல்லியில் ராம்விலாஸ் பஸ்வான் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பரமக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியான சம்பவம் கண்டனத்துக்குரியது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். துப்பாக்கி சூடுக்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும். எங்கள் கட்சியின் தலைவர்கள் மற்றும் தேசிய தலித் முன்னணி, தலித் சேனா ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட கிராமத்துக்கு நாளை செல்வார்கள். சிறையில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக