செவ்வாய், 20 செப்டம்பர், 2011
மதுரையில் ராம்விலாஸ் பஸ்வான்
இமானுவல் சேகரன் நினைவு நாளான கடந்த செப்டம்பர் 11ஆம் தேதியன்று, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
தடையை மீறி அஞ்சலி செலுத்த சென்ற ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலியானார்கள்.
பலர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்டோர் சிசிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை, லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்ர்.
சிகிச்சை பெற்றுவருவோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியனும் சென்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக